darbar
  • January
    19
    Sunday

Main Area

Main



இயக்குநர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

Sakshi Agarwal
Sakshi Agarwal

பிக்பாஸ் 3வது சீசனில் பெரிய பிரபலங்களில் கலந்து கொண்ட முக்கிய நபர்களில் ஒருவர் சேரன். பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் நட்பிலிருந்த ஷெரின், சாக்ஷி, அபிராமி  மற்றும்  வனிதா ஆகியோர் சேரனை சந்தித்து நட்பு பாராட்டி வருகின்றனர்.ஆனால்  லாஸ்லியா - கவின் ஆர்மியினரோ சேரனை தொடர்ந்து குறை சொல்லி, வசைபாடி வருகின்றனர். இருப்பினும் சேரன் அதையெல்லாம் கண்டுகொள்ளாது தனது வேலையை பார்த்து வருகிறார். 

 

 

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சேரன் மீண்டும் படம் எடுக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  ரசிகர்கள் அவருக்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்ட சாக்‌ஷிஅகர்வால் கையில் கேக்குடன் சேரன் அவர்களின் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.