darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



சென்னையில் மழை ஜஸ்ட் மிஸ் : தமிழ்நாடு வெதர்மேன் டீவீட் !

rainfall
rainfall

பருவமழை வலுப்பெற்று வருவதால்  கடந்த சில வாரங்களாகக் கனமழை பெய்து வந்தது. அதன் பிறகு, கடந்த சில நாட்களாக மழை நின்று சற்று வெயில் அடிக்க தொடங்கியது. அதனையடுத்து, மீண்டும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. 

ttn

சென்னையில் மழை பெய்வது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மழையில் இருந்து ஜஸ்ட் மிஸ் ஆகியுள்ளது. மழைக்கான அந்த சிவப்பு தக்காளி போன்ற குறி சிறிது நகர்ந்திருந்தால் கூட சென்னையில் சில மணி நேரங்களிலே பலத்த மழை பெய்திருக்கும். ஆனால், அது நகரவில்லை. இனிமேல் சென்னைக்கு அவ்வளவாக மழைக்கு வாய்ப்பு இல்லை என்று பதிவிட்டுள்ளார். 

 

இன்று சென்னையில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என்னைத் திட்டாமல் போட்டியை கண்டுக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.