• August
    26
    Monday

Main Area

Main



பல்சரில் சென்ற இளம்பெண்கள்... அரசு பேருந்து மோதி விபத்து! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

accident
accident
Loading...

சென்னை நந்தனத்தில் மாநகர பேருந்து மோதி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த, சிவா, பவானி, நாகலட்சுமி ஆகிய மூன்று பேரும் சென்னை எழும்பூரில் உள்ள perfect calibration என்ற நிறுவனத்தில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். சென்னை நந்தனத்திலிருந்து நாகலட்சுமி மற்றும், பவானியை அழைத்துகொண்டு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசி, சாலையில் சறுக்கி விழுந்ததில், மாநகரப்பேருந்தின் சக்கரங்களில் சிக்கி 2 இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிவந்த சிவா படுகாயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 3 பேரும் ஹெல்மெட் போடவில்லை எனக்கூறப்படுகிறது.  விபத்தில் சிக்கிய மூவரும் வந்த பல்சர் பைக், வழிநெடுகிலும் பல வாகனங்களை ஓவர்டேக் செய்தபடியே சென்றுள்ளது. விபத்து நடந்த இடத்தில், பேருந்துக்கும் மற்றொரு இருசக்கர வாகனத்திற்கும் இடையே இருந்த குறுகிய இடைவெளியில் ஓவர்டேக் செய்ய முயற்சித்தது விபத்துக்கு காரணமாகியுள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.