• August
    24
    Saturday

Main Area

Main



ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

arumugasamy
arumugasamy
Loading...

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதன் பிறகு, அவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததுடன், பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இதனிடையே, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆறுமுகசாமி ஆணையம் தங்களிடம் விசாரிக்க தடை கோரியும், உயர் மருத்துவர் தலைமையில் நிபுணர் குழு அமைத்து விசாரிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்ததுடன், மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வருகிற வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.