இந்த ஒரே ஒரு settings  மட்டும் மாத்துங்க! உங்க whatsapp அக்கவுண்ட்டை   யாராலயும் ஹேக் பண்ண முடியாது..!?  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஇந்த ஒரே ஒரு settings  மட்டும் மாத்துங்க! உங்க whatsapp அக்கவுண்ட்டை   யாராலயும் ஹேக் பண்ண முடியாது..!? 

whatsapp-hack
whatsapp-hack

கடந்த சில நாட்களாக இந்த செய்தியை பார்க்கமுடிந்தது. அமேசான் நிறுவனத்தின் தலைவர் ‘ஜெஃப் பெசோஸ்’ஸின்  மொபைல் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானால் ஹேக் செய்யப்பட்டது. வாட்ஸாப் மூலமாக தான் இந்த ஹேக்கிங் நடந்திருப்பதாக தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.

whatsapp

வாட்ஸாப் உலகம் முழுதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி. அப்படியிருக்கையில் அதில் ஏற்படும் சின்ன தவறுகளும் பல கோடி பயனர்களைப் பாதிக்கும்.இன்றைக்கு நாம் பல முக்கிய தகவல்களை வாட்ஸாப் வழியாக தான் பகிர்கின்றோம். எனவே உங்களுடைய வாட்ஸாப் கணக்கை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும்.

உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறந்து Settings -> Account -> Two-Step Verification என்பதில் சென்று Two step verification என்பதை Enable செய்து கொள்ளுங்கள். இதை நீங்கள் enable செய்தவுடன் ஒரு ஆறு இலக்க எண்ணை அமைக்க சொல்லும். அதை நீங்கள் செட் செய்தவுடன் ஒவ்வொரு முறை உங்களுடைய வாட்ஸாப் கணக்கை திறக்கும் போது இந்த ஆறு இலக்க எண்ணை உள்ளிட்டால் தான் உங்கள் கணக்கிற்குள் நுழைய முடியும்.

two-step-verification

இது முதன்முதலில் நீங்கள் வாட்ஸாப் கணக்கு தொடங்கும் பொழுது உங்கள் எண்ணிற்கு sms-ல் வரும் OTP கிடையாது. இது நீங்கள் வாட்ஸாப் உள்ளே சென்று செட் செய்ய வேண்டிய செட்டிங். இந்த PIN ஐ அமைத்த பிறகு, நீங்கள் விருப்பமாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உள்ளிடலாம், இது ஆறு இலக்க PIN ஐ நீங்கள் மறந்துவிட்டால், Recover செய்ய உதவியாக இருக்கும்.

எதற்காக இந்த Two step verification என்பதை Enable செய்ய வேண்டும்? உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டால் உங்கள் நம்பருக்கு வர வேண்டிய வாட்ஸாப் கணக்கு திறப்பதற்கான OTP-யை அவர்கள் எண்ணிற்கு வரச்செய்து உங்கள் கணக்கை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விடலாம். நீங்கள் இந்த Two step verification enable செய்திருந்தால் உங்கள் மொபைல் hack செய்யப்பட்டு OTP உள்ளிடப்பட்டாலும் மறுபடியும் இந்த ஆறு இலக்க எண்ணை உள்ளிட்டால் மட்டுமே வாட்ஸாப் கணக்கை பயன்படுத்த முடியும்.

எனவே இந்த செட்டிங்கை  உடனே Enable பண்ணுங்க! உங்க அக்கவுண்ட்டை ஒரு பயலும்  ஹேக் பண்ண முடியாது..!

2018 TopTamilNews. All rights reserved.