• April
    07
    Tuesday

Main Area

Main



குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் பறிப்பு : சிசிடிவியால் மாட்டிக் கொண்ட டிரைவர்கள் !

ஆட்டோ டிரைவர்கள்
ஆட்டோ டிரைவர்கள்

ஆவடி அடுத்த கோவில் பதாகை பகுதியில் வசித்து வரும் அருள்முருகனுக்கு ஒரு வயதில் ஹரிபிரியா என்னும் குழந்தை இருக்கிறது. இவரும் இவரது மனைவியும் வேலைக்குச் செல்வதால் இவர்கள் அந்த குழந்தையைப் பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு செல்வார்களாம். அதே போல நேற்றும் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க செயினை காணாமல் போகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

ttn

இது குறித்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதித்துப் பார்த்ததில் ஆட்டோ டிரைவர்கள்  ரமேஷ்(42) மற்றும் நந்தா அந்த செயினை குழந்தையிடம் பறித்துச் சென்றது தெரிய வந்துள்ளது. அவர்கள் இரண்டு பேரும் அருள்முருகன் ஹரிபிரியாவை விட்டுச் சென்ற வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த சங்கிலியைப் பறித்துச் சென்றதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.  இதனையடுத்து அடகு வைக்கப் பட்டிருந்த அந்த நகையை மீட்ட போலீசார், அவர்கள் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.