• February
    26
    Wednesday

Main Area

Main



இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை புது விளையாட்டோடு சர்ப்ரைஸ் பண்ணுங்க..! 

Christmas santa
Christmas santa

டிசம்பர் மாதத்தின் இறுதி பகுதியில் இருக்கிறோம். கிறித்துமஸ், நியூ இயர் என்று ஆரம்பித்து பொங்கல் வரை கொண்டாட்டமாக இருக்கப்போகுது. பொதுவா பண்டிகைகள் என்றாலே ஒருத்தருக்கு ஒருத்தர் ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ என்று அன்பு செலுத்துவதும் பரிசு பொருள்களை பகிர்த்துக்கொள்வதுமாக ஆண்டின் இறுதி அட்டகாசமாக இருக்கும்.

Christmas Gift

வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வேற லெவல்! அங்கு பூட்டியிருக்கும் வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஃகிப்ட்டை வாசலில் வைத்துவிட்டு ஓடிவிடுவார்கள். (வடிவேல் காமெடி நினைவில் வருதா?!) பதட்டத்தோடு கதவை திறந்து பார்த்தால் யாரும் இருக்க மாட்டாங்க. ஆனால்,சர்ப்ரைஸ் ஃகிப்ட்ஸ் மட்டும் வாசலில் இருக்கும். யார் வைத்தார் என்பது தெரியாது. இப்படி அன்பின் பரிமாற்றங்கள் இந்த டிசம்பர் மாதம் வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது! இது முதன் முதலாக தொடங்கப்பட்டது-ஸ்கெண்டிநேவியன் என்ற ஊரில்.அது அப்படியே உலகம் முழுக்க கொண்டாட்டத்துக்கான விளையாட்டா மாறிடுச்சு.இந்த விளையாட்டுக்கு பேர்- ‘கிறிஸ்ட் மாம்’ ‘கிறிஸ்ட் சைல்ட்’ 

Girl with Gift

தற்போது இந்த விளையாட்டு இப்போது நம்ம ஊர்களிலும் பரவலாக வந்து விட்டது என்பதுதான் ஆச்சர்யம்.குறிப்பாக பெரு நகரங்களில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் அதிகம் நடக்கிறது. தொலைக்காட்சி,மொபைல் போன் என்று விளையாட்டு முடங்கிப்போனதால் இது மாதியான விளையாட்டுகள் குழந்தைகளுக்கு உற்சாகப்படுத்துவதாக இருக்கிறது. பெரியவர்களும் கொண்டாடலாம் தப்பில்லை!  இந்த விளையாட்டு, பெரும்பாலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலங்களிலும் எல்லா நாட்களிலும் விளையாடப்படுகிறது. “இதன் மூலம் ஒரு நல்ல ஸ்ட்ராங் பாண்ட் உருவாகிறது! அன்பு மலர்கிறது ஒருவருக்கொருவர் இடையில் ஒரு நல்ல புரிதல் உண்டாகிறது!” என்கிறார்கள் இந்த விளையாட்டை ஆடிப் பார்த்தவர்கள்.

இந்த விளையாட்டு எப்படி விளையாடுவது என்று தெரியவில்லையா? டோன்ட் வொரி, நாங்க சொல்லித்தர்றோம்!

நீங்கள் ஒரு பேப்பரில் விளையாட்டில் இணைபவர்களின் பெயர்களை எழுதிவிட்டு அதை குலுக்கி ஒவ்வொருவர் ஒரு சீட்டை எடுக்கவேண்டும். அப்படி யாருக்கு யார் பெயர் வருகிறதோ அவரே உங்க சீக்ரெட் சாண்டா - கிறிஸ்ட் சைல்ட்! 

Paper Bowl

 

பிறகு விளையாட்டு மிகவும் ஆர்வமாக இருக்கும் கிறிஸ்துமஸ்க்கு முன்பு ஒரு கெட் டுகெதர் நடத்தப்படும். அப்போது தான் யாருக்கு யார் சீக்ரெட் சாண்டா கிறிஸ்ட் சைல்ட் என்பதை தெரிவிக்கப்படும் அதுவரை இடைப்பட்ட நாட்களில் தினமும் உங்கள் கிறிஸ்ட் சைல்டுக்கு சர்ப்ரைஸ் தரும் விதத்தில் ஃகிப்ட் தரவேண்டும் (அவருக்கு தெரியாமல்)சிலர் Dare உம் வைத்திருப்பர். இதான் இந்த விளையாட்டின் விதிமுறை! 

நீங்க உங்க கிறிஸ்ட் சைல்ட்க்கு என்ன கிபிட் தரதுனு யோசிக்குறீங்களா? உபயோகமாக இருப்பதுபோன்ற வாங்கி குடுக்கலாம் உதாரணமா ஹெர்பல் டீ, சிறிய பூத்தொட்டிகளில் வைக்கும் செடிகள், வாசனையூப்பட்ட மெழுகுவர்த்திகள், நல்ல புத்தகங்கள், போன்றவை உங்கள் கிறிஸ்ட் சைல்ட்க்கு தரலாம்.இப்போ,ஒரு புது விளையாட்டுக்கு தயாராகிட்டிங்க..சரி இந்த கிறிஸ்துமஸ்க்கு உங்க கிறிஸ்ட்  சைல்ட்  யார்!?

2018 TopTamilNews. All rights reserved.