• November
    21
    Thursday

Main Area

Main



நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர தீவிரம் - அதிகாரிகள் லண்டன் சென்றனர்

நீரவ் மோடி
நீரவ் மோடி

மோசடி மன்னன் நீரவ் மோடியை இந்தியா கொண்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்தி இருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்காக அவர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கி மோசடி 

மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி பத்திரங்கள் மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.

நீரவ் மோடி
சொகுசு வாழ்க்கை 

இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நிரவ் மோடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது, சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து, இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி, இங்கிலாந்து அரசிடம், மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு நிரவ் மோடி கைது செய்யப்பட்டு, லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

நீரவ் மோடி

நீரவ் மோடி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான பணிகளை துரிதப்படுத்த, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகள் இருவர் லண்டன் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க 

நீரவ் மோடியை கைது செய்ய இந்தியா விரும்பவில்லை - உண்மையை உடைத்த இங்கிலாந்து

2018 TopTamilNews. All rights reserved.