• August
    21
    Wednesday

Main Area

Main



கனடா போயும் நம்ம பய கவனம் எங்க இருந்திருக்கு பாருங்க!

Trial Room
Trial Room
Loading...

உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியல், வளர்ந்த நாடுகளின் பட்டியல், அமைதியான நாடுகளின் பட்டியல், பரந்துவிரிந்த நாடுகளின் பட்டியல் என பல நல்ல பட்டியல்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை தவறாமல் பெறும் நாடு கனடா. இயற்கை வளம் கொஞ்சும் நாட்டில் பெரியளவில் தீவிரவாத நடவடிக்கைகளோ அசம்பாவிதங்களோ நிகழ்வதில்லை. அதனாலேயே பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்பவர்களின் விருப்ப நாடாக இருக்கிறது கனடா. இப்படியான கனடாவில் 22 வயது தமிழ் இளைஞன் ஒருவன் கடந்த வாரம் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளான்.

Spycam in trial room

கடந்தவாரம் துணிக்கடை ஒன்றுக்கு துணிவாங்கும் சாக்கில் சென்றுள்ளான் மேற்படி இளைஞன். ஆடை மாற்றும் அறைக்குச் சென்ற அவ்விளைஞன், அங்கே சிறிய பெட்டி ஒன்றை வைத்துவிட்டு நைசாக நழுவியிருக்கிறான். அதன்பின் கடை ஊழியர்கள் அந்தப்பெட்டியை பார்த்து சந்தேகம் கொண்டு போலீஸுக்கு தகவல் தெரிவிக்கவும், போலீசார் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். சோதனையின்போது, அவ்வறையில் உடைமாற்றிய பெண்களின் படங்கள் அதில் பதிவாகி இருப்பதை கண்டறிந்துள்ளனர். உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக‌ கனடிய காவல்துறை தெரிவித்துள்ளது. காசிக்குப் போனாலும் கந்தன் புத்தி கண்டகண்ட இடத்துலன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க.

2018 TopTamilNews. All rights reserved.