kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


அருண் விஜயின் பாக்ஸர் பட பிரஸ்ட் போஸ்டர் வெளியானது!

அருண் விஜய்
அருண் விஜய்
Loading...

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து தற்போது பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதையடுத்து தற்போது விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் விவேக் கூறியதாவது, பொதுவாக பாக்ஸிங் படங்களில் ஒரு பாக்ஸர் எவ்வாறு வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்னேறுகிறார் என்கிற ரீதியிலேயே கதைக்களம் பின்னப்பட்டு இருக்கும். ஆனால் இதில் ஒரு புகழ்பெற்ற பாக்ஸர் தன் வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும் இப்படத்துக்காக அருண் விஜய் வியட்நாம் சென்று பாக்ஸிங் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.