darbar
  • January
    20
    Monday

Main Area

Main



பாண்ட்யாவை கழற்றிவிட்ட பாலிவுட் நடிகை... ரிஷப்பை பிடித்தார்?

நடிகை ஊர்வசி,ரிஷப் பாண்ட்
நடிகை ஊர்வசி,ரிஷப் பாண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருந்த பாண்ட்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகை மற்றொரு கிரிக்கெட் வீரரான ரிஷப் பாண்ட்டுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

pandya and uruvashi

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. உடல்நலக் குறைவு காரணமாக ஓய்விலிருந்துவந்தார். அவரையும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதெலாவையும் இணைத்து சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கள் பகிரப்பட்டுவந்தன. இருவரும் டேட்டிங் சென்றதாக கூட கூறப்பட்டது. அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா தற்போது நடாஷா ஸ்டான்கோவிக் என்ற மாடலுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

uruvashi and pant

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரரான ரிஷப் பாண்ட்டுக்கும் நடிகை ஊர்வசிக்கும் நட்பு உள்ளது என்று கிசுகிசுக்கள் பரவி வருகிறது. மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்பு ரிஷப்பும் ஊர்வசியும்  இரவு விருந்தில் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிஷப் தன்னுடைய காதலி இஷாவுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், "உன்னை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறேன்... ஏனெனில் என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி நீ" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், காதலியை விட்டுவிட்டு நடிகையுடன் ரிஷப் டேட்டிங் சென்றுள்ளார் என்று பரவும் செய்தி சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.