• August
    22
    Thursday

Main Area

Blog posts
P Chidambaram

இனி விமான நிலையத்துல சிதம்பரத்தோட படம் மாட்டிருக்கும்- ஹெச். ராஜா கிண்டல்!

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேடப்படும் நபர் என சிபிஐ, அமலாக்கப...


செல் ஃபோன் திருட்டு

சிறுவனை கடத்தி, செல் ஃபோன் திருட்டு | தப்பிச் சென்ற மர்ம நபர்கள்!

சென்னை ராயபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சாலையில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த சிறுவனை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, வலுகட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடத்...

எடப்பாடி பழனிசாமி

டீன் ஏஜ் பருவம் அலைபாயும் பருவம்... மாணவிகளுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுரை

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் இன்று வேளாளர் கல்வி அறக்கட்டளை பொன்விழா நடந்தது. விழாவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசினார். விழாவில் தமிழக முதல்-...

Durai murugan

ப.சிதம்பரமே ஒரு வழக்கறிஞர்! இந்த வழக்கை எப்படி சமாளிப்பது என அவருக்கு நன்றாக தெரியும் - துரைமுருகன் சூசனம்!! 

சிதம்பரம் அவர்கள் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள், வழக்குகள் குறித்த விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியுமென திமுக பொருளார் த...

Chidambaram

சிதம்பரம் எங்கே? அது சிதம்பர ரகசியம்ங்க! – ப.சி. டிரைவர் பலே விளக்கம்!

பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த கதையாக, ப.சி. சிக்காததால், அவருடைய டிரைவரை பிடித்து விசாரித்திருக்கிறார்கள். டிரைவர் சொன்ன பதில்தான் கட்டுரையின் தலைப்பே! வண்டியில வந்தோம்...

எம்.பி. செல்வராஜ்

தமிழக எம்.பி மீது கத்தி வீச்சு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் 

நாகப்பட்டினம் தொகுதி எம்.பி. செல்வராஜ், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து  வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடியே தோழமை க...

பிரபல சினிமா இயக்குநர் மீது 47 லட்சம் மோசடி புகார்!

விஷாலை வைத்து படம் இயக்குவதாக கூறி இயக்குநர் வடிவுடையான் தன்னை ஏமாற்றியதாகவும், தன்னிடம் ரூபாய் 47 லட்சம் பணத்தை கடனாக வாங்கிக் கொண்டு திருப்பி தரவில்லை என்றும் சுரேஷ் கோத்தாரி என்பவர் இன்று காலை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் வடிவுடையான், அறிக்கை ஒன்றை வெளியிட்டு, என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். சுரேஷ் கோத்தாரி யார் என்றே எனக்குத் தெரியாது என்று விளக்கமளித்து உள்ளார்.

director

அந்த அறிக்கையில், ‘இன்று காலை முதல் என்னை பற்றி தவறான செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதளங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. சுரேஷ் கோத்தாரி என்பவர் நான் அவரிடம் விஷாலை வைத்து படம் இயக்குவதாக கூறி 47 லட்சம் பணம் கடன் வாங்கி கொண்டு திருப்பி தரவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறானது. சுரேஷ் கோத்தாரி யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும் எனக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை. நான் கடந்த ஆண்டு அசோக் லோதா என்பவரிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக பெற்றேன். அதற்காக நிரப்பப்படாத காசோலை மற்றும் என் கையெழுத்திட்ட   பத்திரம் போன்றவற்றை கொடுத்து பணம் பெற்றேன். ஆனால் அந்த தொகையை வட்டியும், முதலுமாக அவருக்கு திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் அவர் என் காசோலையையும், பத்திரத்தையும் திருப்பி தர மறுத்ததால், நான் அவர்மீது சென்னை 6வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

director

அதனால் கோபமடைந்த அசோக் லோதா எனது நிரப்பப்படாத காசோலையையும், பத்திரத்தையும் சுரேஷ் கோத்தாரியிடம் கொடுத்து அதில் நான் அவரிடம் பணம் பெற்றது போல் நிரப்பி, தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று எனக்கு சந்தேகம் உள்ளது. எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக இது போல் பொய்யான பழியை என்மீது சுமத்தியுள்ள அவர்கள் மீது நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

gowtham Wed, 08/21/2019 - 18:00
Vishal director and producer இயக்குநர் வடிவுடையான் சினிமா

English Title

47 lakh fraud complaints against famous film director

News Order

0

Ticker

0  
2018 TopTamilNews. All rights reserved.