• October
    16
    Wednesday

Main Area

Blog posts
அடகு கடையையும் விட்டுவைக்காத கொள்ளையன் முருகன்! 

மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் அடகு கடையில் 1500 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டத்தில் முருகனுக்கு தொடர்பு உள்ளதா என மதுரை மாநகர காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

நரிமேடு பகுதியை கோபிநாத் என்பவருக்கு சொந்தமான தனலெட்சுமி அடகு கடையில், கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அடகு கடையின் பூட்டை கேஸ் வெல்டிங் உதவியுடன் உடைத்து உள்ளே இருந்த சுமார் 1492 பவுன் நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.

Robbery

இந்த சம்பவம் தொடர்பாக அடகு கடையின் எதிர்புறம் உள்ள சிசிடிவி கேமராக்களை முகமூடி கொள்ளையர்கள் சேதப்படுத்தும் காட்சியும் , நகைகளை மினி வேனில் ஏற்றிச் சென்ற காட்சியும் அங்கிருந்த மற்றொரு கேமராவில் பதிவாகியிருந்தது.  இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு தனிப்படை காவல்துறையினர் வடமாநில கொள்ளையர்களுக்க , இதில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை ஏற்றி சென்ற மினி வேன் பதிவு எண்ணை கொண்டும் விசாரணை மேற்கொண்டனர் . 

இந்நிலையில் திருச்சி லலிதா ஜுவலரியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனுக்கும் இந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதால் மதுரை மாநகர காவல்துறை , திருச்சி காவல்துறையுடன் இணைந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதுதொடர்பாக திருச்சியில் முகாமிட்டு முருகனின் கூட்டாளி சுரேஸிடம் தனிப்படை காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

aishwarya Tue, 10/15/2019 - 18:43
murugan robbery Murugan தமிழகம்

English Title

Murugan robbed in pawn shop

News Order

0

Ticker

1 
Dhanush

ரூ.100 கோடி வசூல் சாதனை பிரபலங்களின் பட்டியலில் இணைந்த தனுஷ்! வேற லெவல் பிளாக் பஸ்டர்... 

ரூ.100 கோடி வசூல் சாதனைகளை அசால்ட்டாக கடக்கும் ரஜினி, அஜித், விஜய், சூர்யாவின் வரிசையில் நடிகர் தனுஷ்  முதன்முறையாக இணைந்துள்ளார். 

வயதான தாய்.. நடுரோட்டில் தள்ளிவிட்ட மகன்... 7 நாட்களாக வெயில், மழையில் தவித்த பரிதாபம்!

கூட்டு குடும்ப கலாசாரம் எல்லாம் பள்ளி பாடப்புத்தகங்களில் ‘முன்பொரு காலத்தில்’ என்று இடம் பிடிக்கத் துவங்கி விட்டது. அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று தனிக்குடித்தன வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்த இந்தியர்களில்  பெரும்பாலானோர் இப்போது, ‘சிங்கிள் பேரெண்ட்’ என்று பெருமையாக சொல்லிக் கொள்ளவே விரும்புவதாக மேலும் அதிர்ச்சியளிக்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள்.
கல்யாணம் செய்து வைக்கும் வரையில் இருக்கும் தாய் பாசம், மனைவியோ, கணவனோ வந்ததும் காணாமல் போய்விடுகிறது. இதில் சொத்துக்களை எல்லாம் பெயர் மாற்றி எழுதி வைத்தால் அதோ கதி தான்!

samugathai

கோவில்பட்டி பங்களா 4-வது தெருவில் வசித்து வருபவர் சண்முகத்தாய். 75 வயதான இவரது மகன் சீனி. வயோதிகத்தின் காரணமாகவும், நோயின் தாக்கத்தினாலும் எழுந்து நடமாட முடியாத நிலைக்குச் சென்றார் சண்முகத்தாய். பத்து மாதம் பாரம் என்று நினைத்து வயிற்றில் இருந்து இறக்கி வைக்காமல் வளர்த்து வந்த இவரது மகன் சீனி, நடமாட முடியாத தாயைப் பார்த்துக் கொள்வது கடினம் என முடிவு செய்து, யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் தாயை அதே தெருவின் முனையில் நடுரோட்டில் கொண்டு போய் உட்கார வைத்து விட்டு வீடு திரும்பியிருக்கிறார். 
கடந்த 7 நாட்களாக சாப்பாடு எதுவும் இல்லாமல், வெயிலிலும், மழையிலும் படுத்திருந்த சண்முகத்தாயை அந்த பகுதி மக்கள் பார்த்துவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார்கள். உடனடியாக கோட்டாட்சியர் விஜயா நடவடிக்கை எடுத்து, மருத்துவமனையில் மூதாட்டியைச் சேர்த்து விட்டு, சிகிச்சை முடிந்ததும், பாண்டவர் மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் முயற்சிகளை மேற்கொண்டார். பெற்ற தாயை நடுரோட்டில் தவிக்கவிட்ட மகன் சீனி மீது போலீசிலும் புகார் செய்துள்ளார் விஜயா!

kumar Tue, 10/15/2019 - 18:22
Old women son மூதாட்டி தமிழகம்

English Title

Old mother .. son who dumped in the middle of the road ...

News Order

0

Ticker

0 ஊழியர்களை பணயம் வைத்து லட்சக்கணக்கில் கொள்ளை!  சென்னையை மிரட்டும் நவீன மோசடி!

‘கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமானால் முதலில் மக்களின் ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்பதை தாரக மந்திரமாக கடைப்பிடித்து வருகிறார்கள் மோசடி பேர்வழிகள். சென்னையில் புதிது புதிதாக யுக்தியை கையாண்டு மோசடி செய்து வருகிறார்கள். அப்பாவி மக்கள், அவர்கள் விரிக்கும் வலையில் வலிய சென்று சிக்கிக் கொள்கிறார்கள். சென்னையில், ஃபீனிக்ஸ் கால் சென்டர் என்ற நிறுவனம் கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வந்தது. கையில் கிடைக்கும் நம்பர்களுக்கெல்லாம் போன் செய்து,  குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை பேசுவதற்கு ஐந்து பெண்களை வேலைக்கு அமர்த்தினார்கள்.

call centre

வங்கிக்கு நேரடியாக சென்றாலும் கிடைக்காத வட்டியில் கேட்கும் தொகை கடனாக கிடைக்கும் என்கிற ஆசை வார்த்தையில், இவர்கள் கேட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி விவரம் உள்ளிட்ட தகவல்களை போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்கள் கொடுத்துள்ளனர். இரண்டே நாளில் மீண்டும் தொடர்பு கொண்டு வங்கி கடன் கிடைத்து விட்டதாக இவர்களே போலியாக எஸ்.எம்.எஸும் அனுப்பி நம்ப வைத்திருக்கிறார்கள். அதன் பின், கடன் தொகை வங்கி கணக்கில் வருவதற்கு, வங்கி கணக்கில் குறைந்த பட்சம் 50 ஆயிரம் முதல் கடன் வாங்கும் தொகைக்கு ஏற்ப வைப்புத் தொகை இருக்க வேண்டும் என கூறி அவர்களது அஸ்திரத்தை முன்வைத்திருக்கிறார்கள்.
பணம் கிடைக்கும் என்றால் தான் எதையுமே கேள்வி கேட்க மாட்டோமே? 50 ஆயிரம் இருந்தா நான் ஏன்யா கடன் கேட்கிறேன் என்று ஒருத்தரும் கேள்வி கேட்காமல், நம்ம கணக்கில் தானே பணம் இருக்கு? என்கிற தைரியத்தில் வங்கி கணக்கில் பணத்தைப் போட்டுள்ளனர்.லட்சக்கணக்கில் வைப்பு நிதி சேர்ந்ததும், இரவோடு இரவாக அனைத்து வங்கி கணக்குகளில் இருந்தும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டினார்கள் புது முதலாளிகள். ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானோர் புகார் தர முயன்றதும், வங்கி மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். போலி கால்சென்டரில் சோதனை நடத்தியதில் வேலைப் பார்த்த 5 பெண்கள் உட்பட 12 பேரைக் கைது செய்தனர்.  இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் 5 பட்டதாரி பெண்களுக்கு இந்த மோசடியில் தொடர்பில்லை என்றும், வேலை வாய்ப்பு என்ற விளம்பரத்தை பார்த்து தான் அந்நிறுவனத்தில் டெலி காலர்களாக சேர்ந்ததாகவும் கூறி அவர்களது உறவினர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர்.

kumar Tue, 10/15/2019 - 17:53
phoneix call centre chennai  கால் சென்டர் தமிழகம்

English Title

Hundreds of millions robbed of employees! Modern scam that threatens Chennai

News Order

0

Ticker

0 பிஸ்லரி தண்ணீர் பாட்டிலினுள் இருந்த பூச்சி... மக்களே உஷார்..!

பிரபல குடிநீர் தயாரிக்கும் நிறுவனமான பிஸ்லரி இந்தியா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்து வருகிறது. பல மக்கள் இந்த குடிநீரை நம்பி வாங்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர், பிஸ்லரி உள்ளிட்ட  முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் தண்ணீர் பாட்டிலில் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறது என்று வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்ததை எண்ணி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், பிஸ்லரி தண்ணீர் பாட்டில்களில் பூச்சி இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Bisleri

ராமேஸ்வரத்தில், விக்ரம் என்பவர் இன்று மளிகைக் கடையில் ஒரு லிட்டர் பிஸ்லரி தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். அப்போது சீல் செய்யப்பட்டிருந்த பாட்டிலில் பூச்சி இருந்ததைக் கண்ட விக்ரம் அதிர்ச்சியடைந்து மளிகைக் கடையில் வேறு பாட்டில் தருமாறு கேட்டுள்ளார். அதனையடுத்து, விக்ரம் உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் பாட்டிலில் பூச்சி இருந்ததை பற்றி தகவல் அளித்துள்ளார். 

Vikram

இதனையடுத்து, ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பாட்டிலில் பூச்சி  பிஸ்லரி நிறுவனத்தில் தயாரிக்கும்  போதே விழுந்துள்ளதா என்றும் அல்லது  பிஸ்லரி பெயரில் வேறு நிறுவனங்கள் விநியோகம் செய்த தண்ணீரா என்ற கோணத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

sandhiya Tue, 10/15/2019 - 17:39
Bisleri water bottle Insect inside bisleri Rameshwaram Food Safety Department Bisleri தமிழகம்

English Title

Insect inside bisleri water bottle..!

News Order

0

Ticker

0 
Seeman and Narayanasami

சீமான் திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்துவர்: போட்டுத்தாக்கிய புதுச்செரி முதல்வர்...

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் உள்ளிட்ட புதிய திட்டம்...!

சென்னையில் தாம்பரம், சென்னை கடற்கரை, வேளச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதிக ரயில் சேவைகள் அந்த பகுதிகளில் இயக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பயணிகள் ரயிலில் ஏற, இறங்க முடியாத அளவிற்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சில பயணிகள் ரயிலில் தொங்கிய படி பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது. சில பயணிகள் ரயிலில் தொங்கி செல்லும் போது தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயமும் நிகழ்ந்து வருகிறது. 

Train

ரயிலில் உயிரிழந்த பல பேரின் வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவாகியுள்ளன. அதில் ஒரு வழக்கில் தெற்கு ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. ராம் குமார், சென்னை புற நகர் ரயில்களில் குளிர்சாதனப் பெட்டி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது என்று நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். 

sandhiya Tue, 10/15/2019 - 16:18
Southern railways Chennai suburban trains Automatic door, AC Train தமிழகம்

English Title

Chennai Suburban Trains new plan Includes Automatic Doors...!

News Order

0

Ticker

0 
தொடர் ஏற்றம்

தொடர்ந்து 2வது நாளாக கரடியை வீழ்த்திய காளை! சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது.Police

குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி: வழிமறித்த காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

கடந்த மாதம் 13 ஆம் தேதி சிதம்பரத்தில் தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.