• August
    22
    Thursday

Main Area

Blog posts

இந்திராணி

ப.சிதம்பரத்துக்கு ஆப்பு வைத்த இந்திராணியின் வாக்குமூலம்....

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணியின் வாக்குமூலம்தான் ப.சிதம்பரத்தின் கைதுக்கு முக்கிய காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

ப சிதம்பரம்

மோடியை பாராட்டிய பிறகும், சி.பி.ஐ.யிடம் சிக்கி கொண்ட ப.சிதம்பரம்.....

யாரும் எதிர்பார்க்காத வகையில், ப.சிதம்பரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை பாராட்டி பேசி இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. ...

நெருங்கி பழகி விட்டு பாலியல் வன்கொடுமை என்று புகார் தெரிவித்தால் அது செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: பெண் ஒருவர் விருப்பப்பட்டு  தொடர்ந்து ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருப்பது பாலியல் பலாத்காரம் வழக்கில் சேராது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

love

சமீபகாலமாக திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றிவிட்டதாக பல பெண்கள் போலீசில் புகார் கொடுக்கின்றனர். சிலரோ நீதிமன்றம் வரை சென்று தங்களுக்கான நியாயத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் துணை ராணுவ வீரர் ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்று அளித்தார். அதில், திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த  ஆறு ஆண்டுகளாக உடல் உறவில் ஈடுபட்டதாகவும் ஆனால்  தற்போது தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

sc

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், துணை ராணுவ வீரருடன் அந்த பெண்ணும் விருப்பப்பட்டு ஆறு ஆண்டுகள் உடலுறவில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக அவனுடன் பழகி பின்னர், வாக்குறுதியை மீறிவிட்டதாக வழக்குத் தொடர்வதை ஏற்க முடியாது. திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்த நபர் மீது உடனடியாக புகார் அளிக்க வேண்டும். பொய் வாக்குறுதிக்கும் வாக்குறுதி மீறலுக்கும் வித்தியாசம் இருக்கிறது' என்று கூறி மனுவை நிராகரித்தது. 

manikkodimohan Thu, 08/22/2019 - 08:18
rape Relationship sexually harassment  மாதிரிபடம் இந்தியா

English Title

Accused rape complaints do not go away - Supreme Court

News Order

0

Ticker

0
ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ் மகனை போட்டுக் கொடுத்த உளவுத்துறை... ஓ.பி.ஆரை லெஃப் அண்ட் ரைட் வாங்கிய பாஜக!

‘அண்ணே நீங்க தொகுதிக்குள்ளே வர்றப்ப மத்திய அமைச்சராதான் வரணும். அதுதான் இந்த மண்ணுக்கு கெத்து. வெறும் எம்.பி.யா சுத்துற மாதிரியா நீ ஜெயிச்சிருக்க? வரலாற்று வெற்றிண்ணே அது.

மக்களுக்கு தேநீர் தயாரித்து கொடுத்த முதல்வர்: வைரல் வீடியோ!

திகா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிராம மக்களுக்கு தேநீர் தயாரித்து கொடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

mamta

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எளிமையாக மக்களுடன் பழகக்கூடியவர். இவர் சமீபத்தில் திகா பகுதியிலுள்ள தத்தாப்பூர் கிராமத்துக்கு சென்றார்.

mamta

அங்குள்ள மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள தேநீர் கடைக்கு சென்று  தேநீர் தயாரித்து அங்கிருந்த மக்களுக்கு கொடுத்தார்.

 

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'சில நேரங்களில் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் நமது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவானது  தற்போது சமூகவலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. 

manikkodimohan Thu, 08/22/2019 - 08:12
Mamata Banerjee Mamata Banerjee's Tea Bengal Village Visit  மம்தா பானர்ஜி அரசியல் இந்தியா

English Title

Mamata Banerjee's Tea Break During Bengal Village Visit Is A Toast Online

News Order

0

Ticker

0
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் அதிரடி கைது... பலித்தது பாகிஸ்தான் சொன்ன பின்னணி பாட்ஷா..!

ஏதோவொரு மக்கள் பிரச்சினைக்காக சட்டையில் ரத்தம் தோய்ந்து காவல் துறை வேனில் ஏறி கையாட்டுகிற அரசியலுக்கு நேரெதிரானவர்.


எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸுடன் ஓரம் கட்டப்படும் டி.டி.வி.தினகரன்- சசிகலாவுடன் டீல் போட்ட எடப்பாடி..!

டி.டி.வி. தினகரனின் அண்மைக்கால செயல்பாடுகளில் மிகுந்த அதிருப்தியடைந்திருக்கும் சசியும் எடப்பாடி தரப்பின் கோரிக்கைக்கு ஒகே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 சிதம்பரம்

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே என் அப்பா கைது செய்யப்பட்டுள்ளார்: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

காஷ்மீர் விவகாரத்தைத் திசைதிருப்பவே, எனது தந்தையை கைது செய்துள்ளனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டியுள்ளார். 

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு  ரூ 74.62 காசுகளாகவும், டீசல் விலையானது ரூ.68.79 காசுகளாகவும் விற்கப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

manikkodimohan Thu, 08/22/2019 - 07:24
Petrol diesel price Diesel petrol price பெட்ரோல் மற்றும் டீசல் தமிழகம்

English Title

Petrol price and Diesel price in Chennai, Tamil Nadu

News Order

0

Ticker

0 வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை... மத்திய அரசு எச்சரிக்கை....

வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காய சப்ளை பாதிக்கப்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. சப்ளை பாதித்தால் வெங்காயத்தின் விலை மளமளவென ஏற்றம் கண்டு விடும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மனிதர்கள்தான். எனவே மத்திய அரசு வெங்காய சப்ளையை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

வெங்காய மண்டி

நுகர்வோர் விவகார துறையின் செயலர் அவினாஷ் கே ஸ்ரீவஸ்தவா தலைமையில் நேற்று ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வெங்காயத்தின் விலை நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்தனர். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பொருத்தமான தலையீடுகள் வாயிலாக, விலை நிலவரத்தை நுகர்வோர் விவகாரங்கள் துறை தொடர்ந்து கண்காணிக்கும். 

வெங்காய சந்தை

வெங்காயத்தை பதுக்குபவர்கள் மற்றும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை செய்யும். வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

subramani Thu, 08/22/2019 - 06:04
onion hoarding supply issue onion price வெங்காயம் விலை சப்ளை பாதிப்பு வெங்காயம் பதுக்கல் வெங்காயம் இந்தியா

English Title

strict action aganinst hoarding of onion says govt.

News Order

0

Ticker

1
2018 TopTamilNews. All rights reserved.