• October
    16
    Wednesday

Main Area

Blog posts

பாஜக -யாகம்

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..!

அதிமுகவில் தான் ஜெயலலிதா காலம் தொட்டு இப்போது வரை பதவிகளை பெற ரகசிய யாகங்களை அக்கட்சி நிர்வாகிகள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அதனையும் மிஞ்சும் வகையில் பாஜகவினர் யாகம் நடத்தத் தொட...


ஷூட்டிங் ஸ்பாட்டில் சாக்‌ஷியிடம் அடிவாங்கிய நடிகர் சதீஷ் : வைரல் வீடியோ!

சாக்‌ஷி அகர்வாலிடம் செல்லமாக அடிவாங்கும் வீடியோவை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில்  டெடி படம் உருவாகி வருகிறது. இவர் ஏற்கனவே நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் ஆர்யா, சாயிஷா, காமெடி நடிகர் சதீஷ்  ஆகியோர் நடித்து வருகின்றனர் . இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். 

sakshi

இந்நிலையில் இப்படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சாக்‌ஷி  அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது செல்போனை பார்த்து ஹவ்வா ஹவ்வா என்ற பாடலை சதீஷ் பாட அங்கு வந்த சாக்‌ஷி சதீஷை அடிக்கிறார். 

இந்த வீடியோவை சாக்‌ஷி  ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக ஷேர்  செய்து வருகின்றனர். 

 

manikkodimohan Wed, 10/16/2019 - 08:04
டெடி teddy சாக்‌ஷி sakshi agarwal  சாக்‌ஷி சினிமா

English Title

Bigg Boss 3 Sakshi Agarwal on board for Arya, Sayyeshaa's Teddy

News Order

0

Ticker

0 
டி.டி.வி.தினகரன்

எடப்பாடிக்கு எதிராக உள்ளடி வேலை... டி.டி.வி.தினகரனின் ரகசிய திட்டத்தால் உளவுத்துறை அதிர்ச்சி..!

பணத்தை கொடுத்து சாதித்து விடலாம் என அதிமுக கனவு கண்டிருந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் இந்த புதிய அசைண்மெண்ட் எடப்பாடி தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இன்றுடன் முடிவடையும் அயோத்தி வழக்கு விசாரணை! தீர்ப்பு தேதியும் முடிவு?

உத்தர பிரதேசம் அயோத்தியில் 1992ல் பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ். கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பிரித்து எடுத்துக்கொள்ளும்படி 2010ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதனை 3 அமைப்புகளுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

உச்ச நீதிமன்றம்

இதனையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தொடரப்பட்டன. அயோத்தி விவகாரம் தொடர்பாக மொத்தம் 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மத்தியஸ்தம் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றால் மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் மத்தியஸ்தம் முயற்சி தோல்வியில்தான் முடிவடைந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீவிரம் காட்டியது.

இந்த வழக்கு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வரை தொடர்ந்து 39 நாட்களாக அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.  தொடர்ந்து 40வது நாளாக இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. இன்றுடன் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால் அதற்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும். அனேகமாக நவம்பர் 4-5ம் தேதிகளில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

subramani Wed, 10/16/2019 - 07:59
Ayodhya case ayodhya case verdict Supreme Court அயோத்தி வழக்கு அயோத்தி வழக்கு தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் இந்தியா

English Title

ayodhya case verdict will be in november 4-5

News Order

0

Ticker

1
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு  ஊழியர்களுக்குத்  தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை அரசு அறிவித்துள்ளது

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில்  பணிபுரியும் தகுதியான ஊழியர்களுக்கு 20% போனஸ் மற்றும் கருணை தொகையும், மற்ற கூட்டுறவு சங்கங்களில்  பணிபுரியும் தகுதியான ஊழியர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

diwali


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணை தொகையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இதே போல் அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், தேயிலை தோட்டக் கழகம், சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு 472 கோடியே 65 லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் இதில் குறைந்தபட்சம் தொகையாக  8,400  ரூபாயும் அதிகபட்ச தொகையாக  16,800 ரூபாயும் போனஸாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

manikkodimohan Wed, 10/16/2019 - 07:23
Deepavali bonus Announcement Tamilnadu Government தமிழக அரசு தமிழகம்

English Title

tn govt annouced diwali bonus

News Order

0

Ticker

0 இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு  ரூ.  76.09 காசுகளாகவும், அதே போல் டீசல் விலையானது லிட்டருக்கு   ரூ.  70.15 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

manikkodimohan Wed, 10/16/2019 - 07:18
Petrol diesel price Diesel diesel price பெட்ரோல் மற்றும் டீசல் தமிழகம்

English Title

Petrol price and Diesel price in Chennai, Tamil Nadu

News Order

0

Ticker

0 
ராகுல் காந்தி

பிக்பாக்கெட் போல் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் - மோடியை தாக்கிய ராகுல் காந்தி

பணத்தை திருடுவதற்கு முன் பிக்பாக்கெட் கவனத்தை திசை திருப்புவது போல் பிரதமர் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் என மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.

குறைய தொடங்கிய வெங்காய விலை! ஸ்வீட் எடு கொண்டாடு! மத்திய அரசு தகவல்

வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. வெங்காய பயிர்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தன. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்தது. வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

கனமழையால் பயிர்கள் சேதம்

வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்க முதலில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தியது. மேலும் வர்த்தகர்கள் வெங்காய கையிருப்பு வைக்க உச்ச வரம்பு விதித்தது மற்றும் பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இது தவிர தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை வெளிச்சந்தையில் மத்திய அரசு விற்பனை செய்ய தொடங்கியது. அப்படியும் வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து அதிகரித்தது.

வெங்காய பயிர்

இந்நிலையில், பருப்புகள், வெங்காயம், தக்காளி மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான உணவு பொருட்கள் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக பதுக்கல், கூட்டணி அமைத்தல் மற்றும் ஊக வணிகம் ஆகியவற்றை கண்காணிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் 18வது கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய நுகர்வோர் துறை அமைச்சக செயலளர் அவினாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

வெங்காயம்

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கரீப் பருவ வெங்காய சாகுபடி சந்தைக்கு வரதொடங்கியதால் தற்போது வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், வெங்காயம், பருப்புகள், சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மொத்தவிற்பனையாளர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் அடிக்கடி சந்திப்பு நடத்தும்படி அனைத்து தலைமை செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.

subramani Wed, 10/16/2019 - 06:11
onion onion export ban onion prices rise வெங்காயம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை வெங்காயம் விலை உயர்வு வெங்காயம் இந்தியா

English Title

onion prices declines now says government

News Order

0

Ticker

1
2018 TopTamilNews. All rights reserved.