• August
    22
    Thursday

Main Area

Blog posts
பொருந்தா காதலர்களுக்கு செருப்பு மாலை – பஞ்சாயத்தார் அட்டூழியம்

அரியானா, கர்னால் மாவட்டத்தில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த வயதில் மூத்த, திருமணமான பெண்ணுக்கும், 12ஆம் வகுப்பு படிக்கும் பதின்வயது இளைஞனுக்குமிடையேயான தவறான உறவை ஊர் பஞ்சாயத்தார் கண்டுபிடித்திருக்கின்றனர். சாதி வேறு, வயதில் மூத்த பெண், ஏற்கெனவே திருமணமானவர் என பஞ்சாயத்து பார்ட்டிகளுக்கு லட்டு மாதிரி பாய்ண்ட் கிடைக்க, சிக்கிய இளைஞனை கொன்றுவிடலாம் என முதலில் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். பிரச்னையாகிவிடும் என தெரிந்து அப்பையனை நையப்புடைத்து, இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுக்க ஊர்வலம் அழைத்து வந்திருக்கிறார்கள். எல்லாம் முடிந்தபிறகு இருவரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இப்போது விஷயம் காவல்துறைக்குச் சென்று பஞ்சாயத்தார் ஊரைவிட்டு எஸ்கேப் ஆகி முன் ஜாமீனுக்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

Illegal affair – duo treated mercilessly

இரு தனிநபர்கள் பிரச்னை அல்லது இரு குடும்ப பிரச்னையில், பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படாதவரை அல்லது புகார் தரப்படாதவரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட முடியாதபோது, இந்தமாதிரி கட்டப்பஞ்சாயத்து காட்டுமிராண்டித்தனங்களுக்கு எப்போது முடிவு கிடைக்கும்? மாட்டு  வியாபாரிகள், பைக் திருடவந்தவன் என்ற சந்தேகத்தின்பேரில் அடித்து கொல்வது என வட இந்தியாவில் இம்மாதிரியான நிகழ்வுகள் அதிகம். நம்மூரிலும் உண்டுதான், ஆனால் இங்கே அது ஏற்படுத்தும் சலனம்கூட அங்கே ஏற்படுத்துவதில்லை. தனிநபர் சுதந்திரத்தில் நம் நாடு பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது!

gunaseelan Thu, 08/22/2019 - 11:13
Panchayat atrocities Married woman and teenage boy garlanded with shoes Illegal affair sentenced by panchayat No rule of law இந்தியா

English Title

Woman and teenage boy thrashed over illegal affair by panchayat

News Order

0

Ticker

1 
துஷார் வெல்லப்பள்ளி

ராகுலுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் அதிரடி கைது!

ராகுல் காந்திக்கு எதிராக வயநாடு தொகுதியில் பாஜக  சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி, கைது செய்யப்பட்டுள்ளார்.


எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம்: அப்போது முதல்வர் பொறுப்பு யாருக்கு?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

லோனை நான் வாங்கிக்கிறேன், இ.எம்.ஐ, நீ கட்டிடு சிஷ்யையே – பலே காமுக ஜோசியர்!

பெங்களூரு, அனுமந்தநகர் பகுதியில் வசிக்கும் வெங்கட் கிருஷ்ணாச்சார்யா ஒரு பிரபல ஜோசியர். ஜோசியர்னாலே பிரபலம்தான்ங்கிறீங்களா? அதுவும் சரிதான். நம்ம வேர்ல்ட் கப் ஜோசியர் பாலாஜி ஹாசன்மாதிரி அரசியல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு இலாகா எல்லாம் இந்த வெங்கட் ஜோசியர் கவனிப்பதில்லை. பூராவுமே மகளிர் நலம் மட்டும்தான். இவரிடம் ஜோசியம் பார்க்க வரும் பெண்களிடம் நைச்சியமாக பேசி, முந்தின ஜென்மத்தில் அப்பெண்ணின் கணவர் தாம்தான் என்றும், அப்போது தன்னை சரியாக ‘கவனிக்காமல்’ விட்டதால்தான் அப்பெண்ணுக்கு இப்போது இக்கட்டான சூழல் என்றும் ஆரம்பிப்பார். கஷ்டம் எப்போது தீரும் என்று ஆறுதல் வார்த்தை தேடிவரும் அப்பாவி பெண்ணுக்கு, ஆஹா பெரிய தப்பு பண்ணிட்டோமே என்று பதைபதைப்பு வரும். பரிகாரம் கேட்பவர்களிடம், வேலையை காட்டியிருக்கிறார் வெங்கட்.

Astrologer Venkat Krishnacharya

ஒருவரல்ல இருவரல்ல, பல பெண்களிடம் இதுபோல் முந்தின ஜென்மம் கணவன் செண்டிமெண்ட்டை பயன்படுத்தியிருக்கிறார். சரி, பெண்கள் விஷயத்தில்தான் அப்படி இப்படி என்றால், பண விஷயத்திலும் விளையாண்டிருக்கிறார். சார்ட்டர்ட் அக்கவுண்ட்டட்டாக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் விரைவில் திருமணம் நடக்கவேண்டி பரிகாரம் கேட்டு வந்திருக்கிறார். வழக்கமான ஐட்டத்தைவிட இந்த தடவை ஸ்பெஷல் ஐட்டத்தையும் சேர்த்து இறக்கிவிட்டிருக்கிறார். அந்த ஆடிட்டரும் மெய்மறந்திருந்த நிலையில் இருக்கும்போது, அவர் பெயரில் 40 லட்சம் ரூபாய்க்கு லோன் வாங்கி செலவு பண்ணியிருக்கிறார். சரி, லோன் வாங்கியாச்சு, இ.எம்.ஐ. மாசாமாசம் கட்டலேன்னா பேங்க்லேர்ந்து ஆளனுப்புவான் இல்ல என்றால், அதுவும் இல்லை. எப்படின்னா, ’முந்தின ஜென்மத்துல நான் உங்கள் கணவன்’ என வசதியான வீட்டுப் பெண்களிடம் சொல்லி அவர்களை இ.எம்.ஐ. கட்டவைத்துவிடுவாரா(னா)ம். விஷயம் தெரியவந்து மகளிர் அமைப்பினர் திரண்டுவந்து மொத்து மொத்தி போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

gunaseelan Thu, 08/22/2019 - 10:59
Bengaluru astrologer beaten up by women Astrologer mesmerized women and used them Cheated 40 lakhs from an female auditor Astrologer beaten up இந்தியா

English Title

Bengaluru astrologer beaten up by women over alleged cheating many women

News Order

0

Ticker

1 
 நோய்

தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது!

எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்கிற நிலைக்கு தான், இன்று பெரும்பான்மையான தமிழக மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். தெருவிற்கு நான்கைந்து மருத்துவமனைகள் திடீர் திடீரென முளைத்து காச...


அமீர்

'பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கிவிடுவேன்': சேரனை அசிங்கப்படுத்தியதால் கொந்தளிக்கும் இயக்குநர் அமீர் 

பிக் பாஸ் அடித்து நொறுக்கிவிடுவேன் என்று இயக்குநர் அமீர் ஆவேசமாகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ராமதாஸ்

தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதிய  வேளாண்மை பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!

வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்தச் சிறப்புத் திட்டம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


ராசிபலன்

யாரெல்லாம் நண்பர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் இன்று அதிக களைப்படைய நேரும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள்.


சி.பி.ஐ. அலுவலக திறப்பு விழா

அவர் திறந்து வைத்த கட்டிடத்திலேயே காவலில் வைக்கப்பட்ட ப.சிதம்பரம்........

2011ல் சி.பி.ஐ.யின் தலைமை கட்டிட திறப்பு விழாவில், முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட ப.சிதம்பரம் நேற்று இரவு அதே கட்டிடத்தில் காவலில் வைக்கப்பட்டார்.


2018 TopTamilNews. All rights reserved.