• October
    16
    Wednesday

Main Area

Blog posts
கருப்பட்டி பணியாரம்

தீபாவளி பலகாரங்கள்

கருப்பட்டி பணியாரம் தேவையான பொருட்கள் அரிசி மாவு        -200கி கேழ்வரகு மாவு    -200கி கருப்பட்டி        -200கிராம் தேங்காய் துருவல் - 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்        - தேவைய...


Udhayanidhi stalin

மோடிக்குத் தமிழகம் வருவதற்கு பயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு...!

தேர்தலின் போது மட்டும் வந்து மக்களிடம் வாக்கு கேட்கும் கட்சி திமுக இல்லை, மக்களுக்காக எப்போதும் பணியாற்றும் கட்சி தான் திமுக.

சர்வதேச திரைப்பட விழா: 12 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடல்!

சர்வதேச திரைப்பட விழா திருவண்ணாமலையில் இன்று தொடங்கி  5 நாட்கள் நடைபெறவுள்ளது.

cinema

சர்வதேச  திரைப்பட விழா ஆண்டுதோறும் தமிழகத்தின் சிறு நகரங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 6-வது ஆண்டு சர்வதேச  திரைப்பட விழா திருவண்ணாமலையில்  இன்று தொடங்கியுள்ளது. விழாவை அம்மாவட்ட ஆட்சியர்  க.சு.கந்தசாமி தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் எழுத்தாளர் தமிழ்ச் செல்வன், எழுத்தாளரும் மதுரைஎம்பியுமான  சு.வெங்கடேசன், இயக்குநர் கோபி நயினார், திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார், நடிகை ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

cinema


அவரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், 5 நாட்களும் மெக்சிகோ, அமெரிக்கா, தென் கொரியா, ஸ்பெயின், லெபனான், ஹங்கேரி உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக விருதுகளை குவித்த  'டூ லெட்' (தமிழ்), 'மாண்டோ', 'நியூட்டன்' (இந்தி) 'கும்பலங்கி நைட்ஸ்' (மலையாளம்), 'கோல்டு வார்' (ஹங்கேரி), 'சம்மர் வித் மோனிகா' (ஸ்வீடன்) ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன. இதை தொடர்ந்து திரைப்படங்கள் சார்ந்து நடக்கவிருக்கும் கலந்துரையாடலில்  இயக்குந‌ர்கள் செழியன், பிரம்மா, லெனின் பாரதி, எடிட்டர் லெனின், பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளது  குறிப்பிடத்தக்கது. 
 

manikkodimohan Wed, 10/16/2019 - 10:21
சர்வதேச திரைப்பட விழா International Film Festival திருவண்ணாமலை thiruvannamalai சர்வதேச திரைப்பட விழா சினிமா

English Title

writers union's world film festival

News Order

0

Ticker

0 'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்

தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ்  தெரிவித்துள்ளார். 

mithali

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவுள்ளனர். இந்திய அணிக்காக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மித்தாலி ராஜ்,  ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.மேலும் 20 ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார் மித்தாலி ராஜ். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகக் காலம் விளையாடிய வீராங்கனையாகவும் திகழ்கிறார். இவரது வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் தொடர்ந்து அவரை விமர்சித்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்நிலையில்  மித்தாலி ராஜுக்கு தமிழ் தெரியாது. அவருக்கு தெலுங்கு மற்றும் இந்தி தான் பேச தெரியும் என்று நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மித்தாலி ராஜ்  தனது டிவிட்டர் பக்கத்தில், 'தமிழ் என் தாய் மொழி..நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' என்று பதிவிட்டுள்ளார்.

mithali raj

தமிழகத்தைப்  பூர்வீகமாகக் கொண்ட மித்தாலி ராஜின்  தந்தை நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். விமானப்படையில் பணிபுரிந்த அவரின் தந்தையின் பணியிட மாறுதலுக்காக அவர்கள் குடும்பம் ராஜஸ்தான் சென்றது. இதனால்  ஜோத்பூரில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி மித்தாலி பிறந்தார், அவர் பள்ளிப்படிப்பை செகந்திராபாத்தில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

manikkodimohan Wed, 10/16/2019 - 10:20
mithaliraj Mithaliraj Tamil Tweet மித்தாலிராஜ்  மித்தாலி ராஜ் தமிழகம் விளையாட்டு

English Title

mithali raj tweet on tamil

News Order

0

Ticker

0 கொள்ளையர்களைப் பிடித்ததால் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவலர்கள்..!

கடந்த ஜனவரி மாதம் திருச்சி, சமயபுரம் அருகே இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு வங்கியிலிருந்த லாக்கரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து 9 மாதங்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினரால் அந்த கொள்ளையைச் செய்தவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 

Bank

இந்நிலையில், திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படை காவல் அமைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசித் தேடி வந்தனர். அதில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டதையடுத்து மற்ற இரு முக்கிய குற்றவாளியான சுரேஷ் மற்றும் முருகன் தானாக வந்து சரணடைந்தனர். முருகன் அளித்த வாக்குமூலத்தின் படி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையில் முருகனுக்கும், சுரேஷுக்கு தொடர்பு உள்ளது என அறிந்த காவல்துறையினர், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட மற்ற நபர்களான கணேஷ் மற்றும் ராதாகிருஷ்ணனையும் கைது செய்தனர்.

Murugan

இதனையடுத்து, 9 மாதங்களுக்குப் பிறகு வலைவீசித் தேடிவந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் கொள்ளையர்களை கண்டுபிடித்து கைது செய்ததால் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர் மொட்டையடித்து நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன .

sandhiya Wed, 10/16/2019 - 10:14
Punjab national bank robbery Lalitha jewellery theft Police shaved மொட்டையடித்து நேர்த்திக்கடன் மொட்டை தமிழகம்

English Title

Police shaved for arrested the robbers..!

News Order

0

Ticker

0 
nudeperson

பிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ ! நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் !

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் ஒரு நபர் சைக்கோ போல சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரியில் மீண்டும் கனமழை! பாறைகள் உருண்டு சரிந்தன!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், கனமழையினால் நீலகிரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டு உதகை, குன்னூர் பகுதிகளை எல்லாம் சின்னாபின்னமாக்கிச் சென்ற நிலையில், தற்போது நீலகிரியில் மீண்டும் கனமழை துவங்கியுள்ளது.  நேற்று இடைவிடாது 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் உதகை மற்றும் குன்னூரில் நெடுஞ்சாலையில், குந்தா அணைப்பகுதியில் உள்ள பாலத்தின் அருகே கனமழையினால் திடீரென பாறைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து சரிந்து கீழே உருண்டு விழுந்தன. 

Rain


அதிர்ஷ்டவசமாக பாறைகள் உருண்டு விழும் போது அந்த வழியாக வந்த 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியது. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் பாறைகள் தொடர்ந்து சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Rock

 

sandhiya Wed, 10/16/2019 - 10:04
nilgiri heavy rain Rocks fell down Rock தமிழகம்

English Title

Heavy rain in Nilgiri! rocks fell down!

News Order

0

Ticker

0 
'நடிகர் சங்க தேர்தல் செல்லாது' : விஷால் அணியை ஆட்டம் காண வைக்கும் தமிழக அரசு!

சென்னை: சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தலை  ரத்து செய்ய கோரி  குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

hc

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நேற்று சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் நடிகர் சங்க பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அரசு தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பாகப் பழைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால் நிர்வாகிகள் பதிவேற்று பணிகளைத் தொடர்ந்திருப்பார்கள்' என்று கூறப்பட்டது. 

இதுகுறித்து தமிழக அரசு சார்பில்  கூறிய போது,  உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால்  இந்த தேர்தலே செல்லாது. அதுமட்டுமின்றி அரசு நடிகர் சங்க விஷயத்தில் தலையிடவில்லை' என்று வாதம் செய்யப்பட்டது.இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி, வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

manikkodimohan Wed, 10/16/2019 - 09:59
நடிகர் சங்க தேர்தல் actors union election chennai high court விஷால் சினிமா

English Title

actors union election not valid tn govt response to hc

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.