• October
    15
    Tuesday

Main Area

Blog posts
தீபாவளி பண்டிகைக்கு தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பணிப்புரியும் ஊழியர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும், கூட்ட நெரிசலை தடுப்பதற்காகவும் தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலை இயக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

Train

அக்டோபர் 24ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 8.50 மணி அளவில் புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.  அதேபோல் அக்டோபர் 28ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9.40 மணி அளவில் புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 10  மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு  நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

aishwarya Tue, 10/15/2019 - 21:14
Special Train Diwali Train தமிழகம்

English Title

Special Train for diwali

News Order

0

Ticker

1 
TN Assembly

நஷ்டமடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கும் போனஸை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! எந்தெந்த துறைக்கு எவ்வளவு போனஸ்? 

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அட்லியின் அடுத்தப்பட சம்பளம் இவ்வளவா? வாய்ப்பிளக்கும் திரையுலகம்...! 

ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அவதரித்தார் அட்லி. அதன்பிறகு விஜயுடன் இணைந்து இவர் இயக்கிய தெறி, மெர்சல் ஆகிய படங்கள் வசூல் வேட்டையில் புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்து பிகில் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் வெளியீட்டுக்காக வெயிட்டிங்கில் உள்ளது. 

அட்லீ

இதையடுத்து  அட்லி தனது அடுத்த படத்தில் ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது. இந்த படத்தை எஸ்.ஆர்.கே ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்காக அட்லிக்கு வழங்கப்படவுள்ள சம்பளம்  30 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியலில் அட்லி இணைகிறார்.  

aishwarya Tue, 10/15/2019 - 20:58
Atlee அட்லீ சினிமா

English Title

How much is Atli's next salary?

News Order

0

Ticker

1 முதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்!  

டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதலமைச்சர் பழனிசாமிக்கு அக்டோபர் 20 ஆம் தேதி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. 

ACP

பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் டாக்டர் பட்டம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஒருமுறை பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 20 ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் முதலமைச்சர் பழனிசாமிக்கு வழங்கப்படவுள்ளது. 

aishwarya Tue, 10/15/2019 - 20:39
edappadi palanisamy EPS தமிழகம்

English Title

MGR university Gave doctor degree to cm palanisami

News Order

0

Ticker

1 இன்றைய சோஷியல் மீடியா டாக்கே.... 5 பைசா பிரியாணி தான்..! 

அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு தொப்பி வாப்பா பிரியாணிக் கடையில் 5 பைசா நாணயத்தைக் கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள் என்ற விளம்பரம் வாட்ஸ் அப்பில் வைரலாகிவருகிறது. 

5 பைசா நாணயம் தான் செல்லாதே.. அதற்கு எப்படி பிரியாணி கொடுக்கும் முடியும்.. இதனால் பிரியாணி கடைக்காரருக்கு என்ன லாபம் என நாம் நினைக்கலாம். ஆனால் லாபத்திற்காக இந்த விளம்பரத்தை செய்யவில்லை என்கிறார் தொப்பி வாப்பா பிரியாணி கடையின் ஓனர்... பிறகு எதுக்குப்பா இந்த விளம்பரம் என கேட்கிறீர்களா? உணவு தினத்தை முன்னிட்டு பலருக்கு உணவளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு நோக்கம். ஆனால் இலவசமாக உணவு வாங்கி உண்பதை பலர் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அதற்கு யாசகம் என்ற பெயரும் கிடைக்கும். அதனால் புதுசாக ஒரு விஷயம் செய்ய யோசித்தோம்... அந்த புது ஐடியாதான் இந்த 5 பைசா பிரியாணி எனக்கூறுகிறார் தொப்பி வாப்பா பிரியாணி கடையின் உரிமையாளர் உமர்.

briyani

இதன்மூலம் பழைய 5 பைசா நாணயத்தை தேடும் வாய்ப்பு ஒவ்வொரு இளைஞருக்கும் கிடைக்கும். மேலும் இதுபோன்று யாருமே இதுவரை செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த புது ஐடியா குறித்து பலருடைய இல்லத்திலும் உரையாடல் நடக்கும் இதுவே எங்களின் சாதனை என்றும் உமர் தெரிவிக்கிறார். ஆக இதனை பிசினஸ் ட்ரிக் என்றே நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது கடைக்கு இலவச விளம்பரம்..! 
 

aishwarya Tue, 10/15/2019 - 20:25
briyani பிரியாணி தமிழகம்

English Title

Today Social media

News Order

0

Ticker

1 சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்! அதிர்ந்துபோன ரசிகர்கள்.. 

பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச படங்கள் வெளியாகியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தவறுக்காக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். 

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் ஷேன் வாட்சன். இதே போல் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக்பாஸ் லீக் தொடரில்  சிட்னி தண்டர்ஸ் என்னும் அணிக்காக விளையாடி வந்தார்.  38 வயதான வாட்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பல கருத்துகளை பகிர்ந்துவருவார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சில ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டதுடன் அதில் பல ஆபாச படங்கள் பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த தவறுக்காக வாட்சன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Shane Watson

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “ஹேக்கர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தனர். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட  ஆபாச புகைப்படங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலில் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. தற்போது இன்ஸ்டாகிராமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது"என்று பதிவிட்டுள்ளார். 
 

aishwarya Tue, 10/15/2019 - 20:23
Instagram Shane Watson Shane Watson விளையாட்டு

English Title

Instagram Account Hacked, Claims Former Australia Cricketer

News Order

0

Ticker

1 Oh My கடவுளே படத்தில் நடிக்கும் சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார்! 

நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் ‘Oh My கடவுளே’ திரைப்படத்தில் நடிக்க வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

சன் டி.வி யில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவ வாணி போஜன், தற்போது ஓ மை கடவுளே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். டிக்டாக்கிலும், சமூக வலைதளத்திலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திவந்த தெய்வ மகள் நாயகிக்கு தற்போதுதான் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் வாணிக்கு உண்டு. 

வாணி போஜன்

இதற்கு முன்பு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படமொன்றில் வாணி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார், மேலும்  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க தேர்வாகியிருந்தார் வாணி போஜன். 

aishwarya Tue, 10/15/2019 - 19:17
vaani bhojan வாணி போஜன் சினிமா

English Title

serial actres vaani bhojan to joints oh my kadavule Movie

News Order

0

Ticker

1 பிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி!

பிசிசிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் பலக்கோடி வருமானத்தை இழக்கவுள்ளார். இந்த பதவியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கங்குலி நீடிக்கவுள்ளார். 

Ganguly

கிரிக்கெட் தாதா என ரசிகர்களால் அழைக்கப்படும் கங்குலி தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவுள்ளார். மேலும் இவர் கிரிக்கெட் வர்ணனையாளர், ஐ.பி.எல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகர், கிரிக்கெட் நிபுணர் என பல்வேறு பரிமாணங்களுக்கு சொந்தக்காரராகவும் ஜொலிக்கிறார். தற்போது பிசிசிஐ தலைவராக அவர் பொறுப்பேற்றிருப்பதால் இந்த அனைத்து பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் சுமார் 7 கோடி ரூபாய் வருமானத்தை இழக்க நேரிடும். மேலும் இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் பிசிசிஐ தலைவராக தேர்வானவர், ஒரு அணியின் பயிற்சியாளராக வரமுடியாது. அதன்படி இனி இந்திய அணியின் பயிற்சியாளராவும் அவரை தேர்வு செய்ய முடியாது. எனவே பிசிசிஐ- யில் கங்குலி தலைவரானது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக வரமுடியாது என்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 
 

aishwarya Tue, 10/15/2019 - 19:10
Sourav Ganguly BCCI Ganguly விளையாட்டு

English Title

Ganguly loses several crores as BCCI chief

News Order

0

Ticker

1 மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? - உசுப்பேத்தும் கமல்ஹாசன்

மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? என நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பல்லாவரம் தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அப்துல் கலாம் கனவுகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய நமது கடமை. கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள், உங்களை வரவேற்பேன். புத்தரும், கலாமும் ஒன்றுதான். நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்துல்கலாமிடம் விமானத்தில்  3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது;கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி. 

Kamalhassan


விவசாயம்  சரியில்லை என்ற கோபத்துடன் இளைஞர்கள் களத்திற்கு வராமல் முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க வரவேண்டும். விவசாயத்தை கற்க ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுத்து முறையாக கற்றுக்கொண்டு பின்பு வாருங்கள். இளைஞர்கள் திறன் மேம்பாட்டில் தான் நாடு வளர்ச்சி அடையும் எனவே திறனை வளர்த்து கொள்ளுங்கள் இசையை பற்றி தெரிந்தால் தான் யார் நல்ல இசையமைப்பாளர் என கூறமுடியும் எனவே திறனை வளர்த்துகொள்ளுங்கள் நாடும் முன்னேற்றம் அடையும்” எனப் பேசினார். 

aishwarya Tue, 10/15/2019 - 18:57
kamalhassan Kamalhassan தமிழகம்

English Title

Kamalhasssan Speech

News Order

0

Ticker

1 இந்த ராசிக்கெல்லாம் நிதி நிலைமை உச்சத்தைத் தொடும்!


16.10.2019 (புதன்கிழமை)
நல்ல நேரம் 
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல்  5.45 வரை
ராகு காலம் 
பிற்பகல் 12 மணி முதல்  1.30 வரை
எமகண்டம் 
காலை 7.30 மணி முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
பரிகாரம்  - பால்
இன்று  கிருத்திகை

mesham

மேஷம்
உங்கள் கிரகங்களின் ஆதிக்கத்தின் படி ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். நெருங்கிய நண்பர்களும் பார்ட்னர்களும் உங்கள் செயல்களில் குற்றம் காண்பார்கள். உங்கள் வாழ்க்கை கடினமாகும். உதவி செய்ய முன்வருபவர்களை இன்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். 
அதிர்ஷ்ட எண்: 7

rishbham

ரிஷபம் 
வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்களது திட்டம் இன்று எதிர்பாராத விருந்தினர் வருமையால் தடைபடலாம். 
அதிர்ஷ்ட எண்: 7

midhunam

மிதுனம் 
அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் எடையில் கவனமாக இருங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உங்கள் குழந்தைகளின் விஷயங்களில் ஆதரவு அளிப்பது அவசியம். முக்கியமான பிராஜெக்ட்களை சரியான நேரத்தில் முடித்து தொழில் ரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். 
அதிர்ஷ்ட எண்: 5

kadagam

கடகம் 
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதே சமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 8

simmam

சிம்மம் 
உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். முக்கியமான பிசினஸ் முடிவுகள் எடுக்கும் போது பிறருடைய நெருக்குதலுக்கு பணியாதீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7

kanni

கன்னி 
நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. வேகமாக முடிவு எடுக்காதீர்கள்.  குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும் போது. நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 5

thulam

துலாம் 
தனிப்பட்ட பிரச்சினைகள் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். நியாயமாக இருக்க முயற்சி செய்யுங்கள், குறிப்பாக நீங்கள் நேசிக்கும் நபர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களிடம். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7

viruchagam

விருச்சிகம் 
எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் களைப்படைவீர்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். மனைவியுடன் தகராறு செய்வது மனதை டென்சனாக்கும். தேவையில்லாமல் அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். நம்மால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வதே வாழ்க்கையில் நல்ல பாடமாகும். இன்று உங்கள் மனதில் தோன்றும் பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9

dhanusu

தனுசு 
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால், நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்புமீறி சாதக நிலை எடுப்பர். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். 
அதிர்ஷ்ட எண்: 6

makaram

மகரம் 
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று முதலீட்டை சேர்த்து நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம்.  விஷயங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திட சகோதரருக்கு உதவுங்கள். மோதல்களுக்கு தேவையில்லாமல் இடம் தராதீர்கள். மாறாக சுமுகமாக அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம், ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். 
அதிர்ஷ்ட எண்: 6

kumbam

கும்பம் 
ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்து விடும். குடும்பத்தினருக்கு உதவுவதற்காகவும் சிறிது நேரத்தை நீங்கள் செலவிடலாம். வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம். எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணித்திடுங்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை தரும். 
அதிர்ஷ்ட எண்: 4

meenam

மீனம் 
எல்லையில்லாத சக்தியும் மகிழ்ச்சியும் உங்களை தொற்றிக் கொள்ளும். எந்த ஒரு வாய்ப்பையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும். ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். டென்சன் இருக்கும். ஆனால் குடும்ப ஆதரவு உதவியாக அமையும். கடுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள், இன்று உங்கள் நாள் என்பதால் நிச்சயமாக அதிர்ஷ்டமாக இருக்கும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் தோழமையுடன் பழகுங்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 1

kumar Tue, 10/15/2019 - 18:55
todays rasipalan astrology ராசிபலன் ஜோதிடம்

English Title

today's rasipalan

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.