kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

newsdesk's blog
காலி மனைகளை சுத்தம் செய்யங்கள்: சேலம் மாநகராட்சி அதிரடி உத்தரவு!

காலி மனைகளை சுத்தம் செய்யாவிடில் மாநகராட்சி அந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்து உபயோகித்துக் கொள்ளும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  

Empty land

சேலம் மாநகரட்சிக்கு உட்பட்ட பல காலி மனைகளில் தண்ணீர் தேங்கியும் குப்பைக் கூளங்களுடன் காணப்படுகின்றன. மழைக்காலம் துவங்கியதையடுத்து  அப்பகுதியில் தொற்று நோய் பாதுகாப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் அந்த காலி மனைகளை தூய்மை செய்யுமாறு சேலம் மாநகராட்சி பல முறை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இட உரிமையாளர்கள் அதை பொருட்படுத்தாதால்  சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் அதிரடியாக உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். 

அதில் அவர், காலி மனைகளின் உரிமையாளர்கள் மனையில் காணப்படும் குப்பைகளையும் முட்புதர்களையும் தேங்கி நிற்கும் நீரையும் சுத்தம் செய்து தொற்று நோய் தடுப்பு பாதுகாப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு  செய்ய வில்லை என்றால் மாநகராட்சி அந்த இடங்களை ஆக்கிரமித்து சுத்தம் செய்து பூங்கா அமைத்தும் சமுதாய கூட்டம் நடைபெறும் இடமாக உபயோகித்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

newsdesk Wed, 09/18/2019 - 13:04
Empty lands Salem municipal corporation Garbages and stalking water Empty lands தமிழகம்

English Title

Clean Up Vacant grounds: Salem Corporation Order!

News Order

0

Ticker

0 ஹிந்தியை திணித்தால் எந்த மாநிலமும் அதை ஏற்று கொள்ளாது: ரஜினி காந்த் பேட்டி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'ஒரே நாடு ஒரே மொழி' என்றும் இந்தியாவின் மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். 

Rajini kanth

இன்று சென்னை விமான நிலையத்தில் ரஜினி காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமித் ஷாவின் கருத்து பற்றி செய்தியாளர்கள் ரஜினி காந்திடம் கேட்டனர். அதற்கு அவர், " நாட்டை அடையாள படுத்த ஒரு மொழி இருக்க வேண்டும் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது தான். ஆனால் துர்தஷ்டவசமாக இந்தியாவில் ஒரே மொழி என்ற கொள்கையை செயல் படுத்த முடியாது. இந்தியை திணித்தால் தமிழகம் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்கள் கூட அதை ஏற்றுக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார். 

newsdesk Wed, 09/18/2019 - 12:32
rajini kanth Imposing Hindi National language Amit shah's opinion Rajini kanth தமிழகம்

English Title

None of the state will accept imposing hindi as national language: Rajinikanth interview

News Order

0

Ticker

0 வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை திருப்பி அளிக்காததால் 3 ஆண்டுகள் சிறை!

திருப்பூரில் உள்ள தம்பதியினரின் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த 40 லட்சத்தை திருப்பி அளிக்காததால் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Jail

கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுபணித்துறைக்கு செல்ல வேண்டிய பணத்தை மாற்றி, திருப்பூர் கார்பரேஷன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் குணசேகரன் கணக்கில் சென்றது. வெகு நாட்களாக தனது கணக்கில் அந்த 40 லட்சம் ருபாய் பணத்தை பெறாததால் பொதுப் பணித்துறை வங்கியிடம் விசாரணை செய்தது. சோதித்து பார்க்கையில் அந்த 40 லட்சம் ரூபாய்  குணசேகரன் கணக்கிற்கு சென்றது தெரிய வந்தது. உடனே பொது பணித் துறை அந்த பணத்தை திருப்பி தருமாறு குணசேகரனிடம் கூறினர். ஆனால், பணத்தை திருப்பி தராத குணசேகரன் அந்த பணத்தில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.   

Jail

இது குறித்து கார்பரேஷன் வங்கி மேலாளர் 2015 ஆம் ஆண்டு அத்தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்தார். நேற்று அந்த வழக்கு  திருப்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் குணசேகரன் மற்றும் ராதா தம்பதியினருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

newsdesk Wed, 09/18/2019 - 11:58
Tamil Nadu public service Thirupur corporation bank 3 years jail Tirupur magistrate court Jail தமிழகம்

English Title

3 years jail for failing to pay back money!

News Order

0

Ticker

0 

Central Government

சாலையமைக்க கடனுதவி கேட்ட தமிழகத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு..

சுற்று வட்டார சாலை திட்டத்திற்கு ஒபெக் நிறுவனத்திடம் இருந்து 3,400 கோடி கடனுதவி பெற்றுக்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


World bamboo day

வீட்டில் மூங்கில் வளர்த்தால் இத்தனை நன்மைகளா? உலக மூங்கில் தினம்

பிற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) எடுத்துக் கொண்டு, அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகம...Metrological unit

வட தமிழத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தெலுங்கானா, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெவித்துள்ளது. 

நீதி மன்றத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை குறித்து ஆலோசனைக் கூட்டம்!

செப்டம்பர் 30 ஆம் தேதி வெடிகுண்டு வைக்க போவதாக கடிதத்தின் மூலம் வந்த  மிரட்டலை குறித்து உயர் நீதி மன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

உயர்நீதி மன்ற தலைமை பதிவாளருக்கு அதில் ஹர்தர்ஷன் சிங் என்பவர் தனது மகனுடன் இணைந்து வரும் 30 ஆம் தேதி உயர்நீதி மன்றத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும், தான் இடத்தையம் செல்பேசி எண்ணையும்  அடிக்கடி மாற்றி கொண்டே இருப்பேன், அதனால் என்னை தேட முயற்சி செய்யாதீர்கள் என்று கூறி மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். காவல்துறையும் அது குறித்து விசாரணை நடத்தி  கொண்டிருக்கின்றனர். 

High court

இந்நிலையில் இது குறித்து உயர் நீதி மன்றத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நீதிபதிகள் வினித் கோத்தாரி,மணிக்குமார், சசிதரன்,ரவிச்சந்திர பாபு, கிருபாகரன் மற்றும் பி.என்.பிரகாஷ் உள்ளிட்ட நீதிபதிகள் ஆலோசனை கூட்டத்தில் நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு  பற்றி ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

newsdesk Tue, 09/17/2019 - 17:37
high court bomb threat Advisory meting High court justice High court தமிழகம்

English Title

Advisory meeting on bomb threat in High court!

News Order

0

Ticker

0 பலியான சிறுவன்: பல கேள்விகளை முன்வைத்து மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்!!!

தீனா என்ற சிறுவன் பலியானதற்கு விளக்கமளிக்கக் கோரி மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமர் ஆணையம் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Dheena

கடந்த ஞாயிற்றுக் கிழமை, முகலிவாகத்தைச் சேர்ந்த தீனா என்ற  சிறுவன் தரையில் கிடந்த  மின் கம்பியை மிதித்து அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபாமக உயிரிழந்தான். இந்த சம்பவத்தில் தானாக முன்வந்து வழக்கை கையில் எடுத்தது மனித உரிமை ஆணையம். 

மனித உரிமை ஆணையம், விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு என்ன செய்ய போகிறீர்கள்? லட்சக்ஹ்யயமாக வேலை பார்த்த ஊழியர்களால் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தோண்டிய குழியை ஏன் மூடவில்லை? என பல கேள்விகளை முன்வைத்து, இது குறித்து இன்னும் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

newsdesk Tue, 09/17/2019 - 16:59
Dheena death Electric shock chennai Mugalivakkam 9th standard school boy Municipal commissioner Dheena தமிழகம்

English Title

Child death: Notice sent to municipal commissioner with many question!

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.