• August
    25
    Sunday

Main Area

Aarthi's blog
தளபதி 64: உறுதியானது லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணி! உற்சாகத்தில் ரசிகர்கள் 

சென்னை: தளபதி 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கிவரும் தளபதி 63 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்து வரும் இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து விஜயின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று போட்டி நிலவி வந்தது. அப்போது தளபதி 64 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாகத் தகவல் வெளியானது.   

இந்த நிலையில் தளபதி 64 படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள  இந்த படத்தை விஜயின் தாய் மாமாவான பிரிட்டோ தயாரிக்கவுள்ளாராம். 

 

அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 4ம் தேதி துவங்கவுள்ளதாகவும்,2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ட்விட்டரில் #Thalapathy64 மற்றும் #Summer2020 என்ற இரு ஹாஸ் டாக் ட்ரெண்டாகி வருகிறது. 

Aarthi Sat, 08/24/2019 - 18:00
vijay thalapathy 64 logesh kanagarj லோகேஷ் கனகராஜ்- விஜய் சினிமா

English Title

thalapathy 64 movie update released

News Order

0

Ticker

0 'அவளுக்கு ஒரு ஆம்பிளை பத்தாது': வனிதாவைக் கிழித்துத் தொங்கவிட்ட எக்ஸ் லவ்வர்

சென்னை: வனிதா விஜயகுமார் பற்றி அவரது முன்னாள் காதலரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பேட்டியளித்துள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3யில் சண்டை கோழியாக வலம் வருபவர் வனிதா. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வனிதா மக்கள் மத்தியில் பரிச்சயமான நபர் தான். அதற்கு காரணம் அவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அப்பாவுடன் சொத்து பிரச்சனை, மூன்று கல்யாணம் என்று பல உள்ளது. அவற்றில் ஒன்று தான், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடனான காதல். இருவரும் சேர்ந்து படமொன்றைத் தயாரித்த சமயத்தில் காதலில் விழுந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வனிதா தெரிவித்திருந்தார்.  

vanitha

ஆனால் அப்படி இல்லை ராபர்ட் மறுத்தாலும் அவரின் கையில் வனிதா என டாட்டூ குதியிருந்ததை அவரது ரசிகர்கள் புகைப்படத்தில் கண்டு பிடித்துவிட்டனர். இந்நிலையில் அது குறித்து தற்போது அவர் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், 'வனிதாவுக்கு ஒரு ஆம்பிளை பத்தாது. உடை மாற்றுவது மாதிரி அவர் ஆண்களை மாற்றிக் கொண்டே இருப்பார். எனக்கு தெரிந்தே அவருக்கு ஐந்தாறு காதலர்கள் உள்ளனர். முதல் கணவர், இரண்டாவது கணவர் என குறிப்பிடுவது தனக்கு கிடைத்த விருதுகள் போல பெருமையாக பார்க்கிறார். 

robert

எனக்கும் ஒரு சமயத்தில் அவர் மீது க்ரஷ் இருந்தது உண்மை தான். ஆனால், நானே நேரடியாக அவர் செய்த சில அசிங்கமான விசயங்களைப் பார்த்தேன். அதன் பிறகும் நான் எப்படி அவரைத் திருமணம் செய்து கொள்வேன். அவர் எல்லாம் ஒரு பெண்ணே கிடையாது. வனிதாவை செருப்பால் அடிக்க வேண்டும்.  என் பெற்றோருடன் நல்ல பழக்கம் இருப்பதாகக் கூறியிருந்தார். இதை அவர்கள் கேட்டால்  காரித் துப்புவார்கள். இந்த உலகத்திலேயே ஒரு கேவலமான பெண் என்றால் அது வனிதா தான். அவருடன் பழகிய இரண்டு மாதத்திலேயே அவரது சுயரூபம் எனக்குத் தெரியவந்தது. நன்றாக இருந்த பிக் பாஸ் வீடு வனிதாவின் வருகைக்குப் பிறகு சுனாமி தாக்கியது போல் ஆகிவிட்டது; என்று கடுமையாக விளாசியுள்ளார். 

Aarthi Sat, 08/24/2019 - 17:22
bigg boss bigg boss 3 Vanitha Vijayakumar வனிதா சினிமா பிக்பாஸ் சீசன் 3

English Title

dance master robert says about vanitha

News Order

0

Ticker

0 விஜய் ரசிகர்களுக்கு இன்றைக்கு 6மணிக்கு செம ட்ரீட் இருக்கு பாஸ்... 

சென்னை: தளபதி 64 படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கிவரும் தளபதி 63 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்து வரும் இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தளபதி 64 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் முதல் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. பின்பு 2020ஆம் ஆண்டு பொங்கலுக்குப் படத்தை வெளியிடப்  படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் இன்று 6மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனேகமாக அதில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் அல்லது படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் எதாவது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ட்விட்டரில் #Thalapathy64 என்ற ஹாஸ் டாக் ட்ரெண்டாகி வருகின்றன.  

Aarthi Sat, 08/24/2019 - 16:41
thalapathy vijay thalapathy 64 விஜய் சினிமா

English Title

thalapathy 64 update to be released today

News Order

0

Ticker

0 ENPT அப்டேட்: காத்திருந்ததுக்குப் பலன் கிடைத்து... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தனுஷ்! 

சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.  ஒன்றாக என்டெர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் மூன்று ஆண்டுகளாக படம் இன்னும் வெளியாகவில்லை. 

ஏற்கனவே, இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு பிரச்சினைகள் காரணமாகப் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள் எப்போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்வீர்கள்? என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.'

இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் இன்று 3.30க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்டுருந்தது. இதை கண்ட ரசிகர்கள் எப்போதும் போல் ஒன்றும் இருக்காது என்று நினைத்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல், ஆக்ஷன் என்று விறுவிறுப்பாக விறுவிறுப்பாக உருவாகியுள்ள அந்த படம் அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த ட்ரைலரில் மேகா ஆகாஷ் மீதுள்ள காதலில் தனுஷ், 'நடிகையின் மடியில் ரசிகன் நான் விழுந்தேன். விழுந்த நொடியில் வருடங்கள் அடங்க. கனவா? திரையா? நிஜமா? எதிலே நான் வாழ்ந்தேன். முகமா? அகமா? சுகமா? எதிலே நான் விழுந்தேன்...' என்று பேசிய வசனம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும் எதிர்பார்க்க நேரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியானது இந்த படத்தின் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Aarthi Sat, 08/24/2019 - 16:16
Dhanush ennai nokki paayum thotta Megha Akash தனுஷ்- மேகா ஆகாஷ் சினிமா

English Title

ENPT trailer released

News Order

0

Ticker

0 கவின்- லாஸ்லியா காதல் லீலைகள்: குறும்படம் போட்டு முகத்திரையைக் கிழித்த கமல் 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர். 

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சேரன், கஸ்தூரி,சாண்டி மற்றும் தர்ஷன் ஆகிய 4 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோவில் கமல்ஹாசன், ஹவுஸ் மேட்ஸ்யிடம் இந்த வாரத்திற்கான லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய உரையாடுவது போல் வெளியாகியுள்ளது. 

அதில், 'உங்க லக்ஜூரி பட்ஜெட் ஏன் குறைந்ததது தெரியுமா? இது ஒரு விதிமீறல். இந்த விதிமீறல் விளையாட்டை வெற்றிபெற முடியாது என்பதை இரண்டு பேருக்கு ஞாபகப்படுத்த ஒரு படம். இது ஒரு குறும்படம் அல்ல விளக்கப் படம். உங்களுக்கு விளக்குவதற்காக' என்றார். 

அதில் இரவு நேரத்தில் தனியாக லாஸ்லியா மற்றும் கவின் அமர்ந்து கொண்டு பேசுவது போல் உள்ளது. இதை கண்ட ஷெரின் வாய்பிளக்குவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் இன்றைய எபிசோட் தரமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சியம். 

Aarthi Sat, 08/24/2019 - 15:55
bigg boss bigg boss 3 kavin and losliya கவின்- லாஸ்லியா சினிமா பிக்பாஸ் சீசன் 3

English Title

kavin and losliyaa love

News Order

0

Ticker

0 மீண்டும் இளமையாக திரும்பிய அஜித்! வைரல் போட்டோ 

 தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. பெண்களை அடிப்படையாக கொண்டுள்ள வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

அதைத்தொடர்ந்து தல அஜித்தின் 60வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. ஹெச் வினோத் இயக்கவுள்ள இந்த படத்தில் அவர் பைக் ரேசர் மற்றும் இளம் அஜித் ஆக வலம் வரவுள்ளார். தல 60 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் முதல் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதற்கான நடிகர், நடிகைகள் வேகமாக தேர்வு நடக்கிறது. 

ajith

இந்த நிலையில் இந்த படத்திற்காக அஜித் சிக்ஸ் பேக் வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளாராம் . தற்போது அஜித்தின் சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைலை மாற்றி இளம் வயதில் இருப்பது போல் உள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். 

Aarthi Sat, 08/24/2019 - 15:16
thala ajith thala 60 அஜித் சினிமா

English Title

ajith photo goes viral

News Order

0

Ticker

0 கவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர். 

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சேரன், கஸ்தூரி,சாண்டி மற்றும் தர்ஷன் ஆகிய 4 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன், 'உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு தனி படை இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் அந்த உணர்வை அவர்கள் தவறவிட்டார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. 

ஒரு பக்கம் காதல் வழுக்குது, மற்றொரு பக்கம் பாசம் வழுக்குது. வெற்றியை நோக்கி அவர்கள் நகர வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வாரம் இந்த வாரம்' என்று பேசுவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. 
 

Aarthi Sat, 08/24/2019 - 14:21
bigg boss bigg boss 3 kamalhassan கமல் ஹாசன் சினிமா பிக்பாஸ் சீசன் 3

English Title

bigg boss 3 new promo video released

News Order

0

Ticker

0 தீபாவளி ரேஸில் விஜயுடன் மோதும் கார்த்தி? 

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். அப்பா, மகன் என்று இரு வேடத்தில் விஜய் நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை தீபாவளி ஞாயிற்று கிழமை வரவுள்ளதால் முன்கூட்டியே படத்தை வெளியிட்ட படக்குழு முடிவு செய்துள்ளது. அதனால் தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த ஒருசில திரைப்படங்கள் பின் வாங்கிவிட்டது. 

இந்த நிலையில் அனைத்து படங்களும் விலகியுள்ள நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 

பொதுவாக இரண்டு பெரிய நடிகரின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என்ற எண்ணம் நிலவி வந்தது. ஆனால் அப்படி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்த பேட்ட, விஸ்வாசம் என்ற இரு படங்களும் வசூலில் வாரி குவித்தது. அதேபோல் பிகில், மாற்று கைதி படம் வெற்றியடையுமா? என்பதை பொறுத்திருந்து தான்பார்க்க வேண்டும். 

Aarthi Sat, 08/24/2019 - 13:56
vijay and karthi bigil kaithi விஜய்- கார்த்தி சினிமா

English Title

bigil and kaithi to release on diwali

News Order

0

Ticker

0 

2018 TopTamilNews. All rights reserved.