• August
    24
    Saturday

Main Area

vijay's blog
என்னதான் உழைச்சாலும் கையில சல்லிக்காசு தங்கலையா? இந்த தோஷத்தை கண்டறிந்து பரிகாரம் செய்தால் அள்ளஅள்ளப் பணம் தான்!

"அகடின் மன்னனுக்கு ஆறெட்டோடு,வியத்தில்
கடிலா மதி எய்தி இருந்திடின்
சகடை தோஷம் என்று சொல்லு'

அதாவது மன்னன் என்பவர் குருபகவான். குருவுக்கு ஆறு,எட்டு, பன்னிரண்டாம் பாவத்தில் ,
சந்திரன் அமரப்பெறும்போது அது 'சகடை தோஷம்'என்று அழைக்கப்படுகிறது.

guru

இந்த யோகம் இருப்பவர்கள் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து முன்னேறுவார்கள். எதுவுமே ஈசியாக கிடைக்காது. வாழ்க்கையானது, "வண்டிச்சக்கரம் போல" , "கிணற்றில் நீர் இறைக்கும் உருளை போல" உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும். இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் கையில் இருக்கும். நாளை ஒரு டீ சாப்பிடக் கூட சல்லிக்காசு இருக்காது.

இன்றைக்கு நண்பராக இருப்பார். நாளை அவரே விரோதியாவார். இன்றைக்கு விரோதியாக இருப்பவர் நாளை நண்பராக மாறுவார். நாம நினைச்சது நடக்காது. எதிர்பாராமல் ஒன்று நடக்கும்.
கல்லைக் கண்டால் நாயை காணோம்;
நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பது போல!

தேவைப்படும் போது கிடைக்காத பணம், தேவையில்லாதபோது கிடைக்கும். எல்லாமே ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும்.

chanthran

 


35 வயதுவரை எந்தவித மருந்து, மாத்திரை எடுத்து கொள்ளாதவர்கள்,ஆஸ்பத்திரி பக்கமே எட்டி பாக்கதவர்களுக்கு திடீர்னு நோய் ஏற்பட்டு சீக்கிரத்தில் குணமாகாது.பயங்கரமா,கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்க வேண்டிவரும்.எல்லாமே தேவைப்படும் போது கிடைக்காது.கிடைக்கும் போது தேவைப்படாது. எல்லாமே இருக்கும். ஆனால் எதையும் அனுபவிக்க விடாது.

இதுதான் சகடை தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான விதிவிலக்குகளும் ஜாதகத்திலே ஒளிந்து உள்ளது. 
விதிவிலக்குகள்:

1) சகடை தோஷம் உள்ள ஜாதகத்தில் குருவும், சந்திரனும் அல்லது இருவரில் ஒருவர்,ஆட்சி , அல்லது உச்சம் பெற சகடை தோஷம் நிவர்த்தி ஆகும்.

2) சகடை தோசம் உள்ள ஜாதகத்தில் குருவும், சந்திரனும் பரிவர்த்தனை பெற ஜாதகத்தில் உள்ள சகடை தோஷம் நிவர்த்தி ஆகும்.

sagada yogam

3)சூரியனுக்கு ஏழில் சந்திரன் அமர்ந்து (சமசப்தமமாக) பௌர்ணமி தினத்தில், முழுநிலவு அன்று பிறந்த ஜாதகர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் உள்ள சகடை தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்

4)ஏதாவது ஒரு கிரகம் திக்பலம் பெற ,ஜாதகத்தில் உள்ள சகடை தோஷம் குறைகிறது. பரிகாரம் பெற்று விடுகிறது. எனவே தோஷம் என்று சொல்லி எந்த ஒரு ஜாதகத்தையும் ஒதுக்காமல் விதிவிலக்குகளையும், பரிகாரங்களையும் ஊன்றி கவனித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். 

vijay Sat, 01/12/2019 - 18:55
Sakata Yoga astrology Sakata yoga and its remedies Sakata yogam yogam in astrology period of sakata yoga sakada yogam ஜோதிடம்

English Title

Sakata Yoga In Astrology 

News Order

0 நவரத்தின கற்களை எப்படி தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் தெரியுமா?

நவரத்தின கற்களை எப்படி அணிவது? யார்யார் எந்தெந்த கற்களை அணிலாம்? ராசி படி அணியலாமா? நவரத்தினங்களையும் ஒரே மோதிரத்தில் அணியலாமா? என பல சந்தேக கேள்விகள் எழும்,

navagargam

பொதுவாக நவரத்தின கற்களை தேர்ந்தெடுக்க உங்கள் ஜென்ம லக்னத்தின் 1, 5, 9 ஆம் அதிபதியின் கற்களைதான் தேர்தேர்ந்தெடுக்க வேண்டும் , இவை 3, 6,8,12 ஆம் ஆதிபத்தியம் பெற்றாலும் அணியலாம், சற்று சுப பலன் குறையும், சந்திர ராசிக்கு என தேர்ந்தேடுக்க வேண்டாம் ,

தேர்ந்தெடுக்கப்பட்ட கல் உங்கள் பிறப்பு நாம யோகியாகவும் இருந்தால் கூடுதல் பலன்,தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லை எந்த உலோகத்தில் அணிவது என குழப்பம் வரும், அதிலும் 6, 8, 12 பாதகாதிபதி, மாரகாதிபதி, அவயோகியின் உலோகத்தில் அணிவது தவறு,

அனைத்து கற்களையும் தங்கத்தில் மோதிரமாக அணிய செவ்வாய் பலமடையவேண்டும்,சில காரத்துவ பலவீனத்தால் உடல்நிலை குணமாக அந்த நேரத்தில் மட்டும் பயன்படுத்தலாம்,எப்படி என்றால் உங்களுக்கு அட்டம, பாதக, மாரகாதிபத்தியம் சுக்கிரனுக்கு கிடைத்து சுக்கிரன் வக்ரம், அஸ்தமனம்,

navagraga stones

பகை, நீசம் பெற்று தசை நடக்கும் போது சிறுநீரக பிரச்னைகள் இருந்தால் வெள்ளி, வைரம் தகுந்த ஆலோசனையின் மூலம் சில காலம் அணியலாம், ஆனால் அவை ஆட்சி, உச்சம், ஷட்பலம், தசவர்க்க பலம், அவயோகியாக பலம் பெற்று தசை நடக்கும் போது அதனை பயன்படுத்த மேலும் ஆதிபத்திய பலம் கூடி மோசமான பலனை ஏற்படுத்தலாம்,
லக்ன யோகர் , யோகி பலவீனமானால் அதன் கற்களை பயன்படுத்தி சிறப்படையலாம்,

உலோகங்கள் :


சூரியன் - தாமிரம்,
சந்திரன் - ஈயம்,
செவ்வாய் -செம்பு,
புதன்- பித்தளை,
வியாழன்- தங்கம்,
சுக்கிரன் - வெள்ளி,
சனி- இரும்பு
ராகு- கேது- கருங்கல்.

vijay Sat, 01/12/2019 - 18:35
Navratna Gems Gemstones Benefits types of gemstones types of gemstones list navagraha stones spiritual astrology navagra stones ஜோதிடம்

English Title

Navratna Gemstones Benefits

News Order

0 சனிஸ்வரரின் கொடிய பார்வையிலிருந்து தப்ப சந்திரனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ஒருவருக்கு கடக லக்னம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அட்டமாதிபதியான சனிதசை நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

chandhran

அட்டமாதிபதி தசை நடப்பதால் அதுவும் சனி தசையாக இருப்பதால் வம்பு ,வழக்கு குடும்ப பிரிவினை, சிறைத்தண்டனை, விபத்து, மற்றும் அவர் எந்த வீட்டையெல்லாம் பாவத்தன்மை பெற்று பார்க்கிறாரோ அந்த வீட்டையெல்லாம் கெடுத்து அந்த பாவங்களின் மூலமாக துன்பத்தை அட்டமாதிபதியான சனி தருவார்.

இப்போ நீங்கள் அட்டமாதிபதியான சனிபகவானுக்கு பரிகாரம் செய்வீர்களா?
லக்னாதிபதியான சந்திரனுக்கு பரிகாரம் செய்வீர்களா? சனிக்கு பரிகாரம் செய்வீர்களேயானால் உங்களுக்கு கண்டிப்பாக பிரச்னைகள் குறையவே குறையாது. சனி இன்னும் அதிகமாக வலுத்து கெடுப்பார்.

chandhran

சனிக்கு பரிகாரம் பண்றது தப்பு. சனிய பாக்கறதே தப்பு. சனியின் பார்வையால் வினாயகருக்கு தலையே போயிருச்சு. ராவணணின் பலம் சனியின் பார்வையால் குறைந்து ராமரால் ராவணவதம் நிகழ ஏதுவாயிற்று. சனியின் பார்வை கொடியது.

சரி இப்ப உங்கள் லக்னாதிபதியை வலுப்படுத்தக்கூடிய பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும்.லக்னாதிபதி சந்திரனின் நிறம் வெள்ளை. சந்திரனின் அதிதேவதை பராசக்தி. திங்கள்கிழமையில் சந்திர ஓரையில் ,சந்திர ஓரையானது காலையில் 6 to 7 ,மதியம் 1 to 2 , இரவு 8 to 9 இந்த நேரங்களில் வரும்.

ambaal

இந்த நேரத்தில் பராசக்திக்கு வெள்ளி நிறத்தில் பட்டு எடுத்து சாற்றவேண்டும். மூலஸ்தானம் அம்பாளாக இருக்கணும். அது ரொம்ப முக்கியம். உதாரணமாக பழனியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. மூலஸ்தானம் அந்த அம்பாள் தான்.

அந்த அம்பாளுக்கு வெள்ளை நிறத்தில் மல்லிகை பூ மாலை சாற்றலாம். அம்பாளுக்கு கல்கண்டு பொங்கல் படைக்கலாம். அவர் தித்திப்பு பிரியர் என்பதால் கல்கண்டு, வெள்ளை கலரில் ஸ்வீட்ஸ்கள் வாங்கி படைக்கலாம்.

இதனுடன் ஐந்து வகையான கனிவர்க்கங்களை சேர்த்து கொள்ளலாம். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்ற ஐந்து வகையான கனிவர்க்கங்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

siva

பராசக்திக்கு தாமரைநூலில் பசுமாட்டு நெய் கிடைத்தால் நெய்விளக்கு ஏற்றலாம்.சந்திரனுக்கு உரிய ஷேத்ரமான திருப்பதி அல்லது திங்களுருக்கு ஆறுமாதம்,ஒரு வருடத்துக்கு ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வரலாம்.

உங்கள் லக்னாதிபதிக்குரிய முத்துவை மோதிரத்தில் பதித்து உங்கள் வலதுகை மோதிரவிரலில் அணிந்து கொள்ளலாம். இந்த லக்னாதிபதிக்குரிய கல்லை நீங்கள் ஆயுள் முழுவதும் எந்த தசாபுக்திகளிலும் அணியலாம். ராசிக்கல்லை லக்னத்துக்கு தேர்ந்தெடுத்து அணிவதே சிறப்பாக இருக்கும்.

vijay Sat, 01/12/2019 - 18:06
moon moon remedies astrology lagna in astrology spiritual astrology shiva ஜோதிடம்

English Title

Remedies for Chandra desh

News Order

0 குருவுக்கான பரிகாரங்கள்

கிரகங்களுக்கு நிறம், ஜாதி, கிரக ரத்தினம், கிரக தான்யம், கிரக புஷ்பம் ,கிரக சமித்து, கிரக வாகனம், கிரக சுவை, கிரக உலோகம், கிரக அதிதேவதை, கிரக வஸ்திரம், கிரக ஷேத்திரம், இப்படி எல்லாமே நவக்கிரகங்களின் அம்சங்கள் என்ற தலைப்பில் பஞ்சாங்கங்களில் ஒரு பக்கத்தில் கொடுத்து இருப்பார்கள்.

guru

இது எதற்காக என்று நாம் சிந்தித்தோமானால் ,இவைகள் எல்லாம் பரிகாரங்களுக்காக. ஒருவருக்கு தனுசு, அல்லது மீனம் லக்னம் என்று வைத்துக்கொள்வோம். நடைமுறையில் அவருக்கு சுக்கிர தசை நடப்பில் உள்ளதாக வைத்துக்கொள்வோம்.

சுக்கிரன் தனுசு லக்னத்துக்கு ஆறுக்குடையவன். மீனத்துக்கு திருதீய, அட்டமாதிபதி. அதாவது 3,8 க்குடையவன்.இப்ப சுக்கிரன் தசை நடக்கும் போது கடன்,நோய், எதிரி,வம்பு, வழக்கு, பகை,தொல்லைகள் போன்றவைகள் கண்டிப்பாக இருக்கும்.

guru

இந்த சுக்கிரன் மஹாதசையை எதிர்கொள்ள வேண்டுமானால்,சமாளிக்க வேண்டுமானால்
லக்கனாதிபதியான குருபகவான் வலிமையாக இருக்க வேண்டும். உங்கள் எதிரியை காட்டிலும் நீங்கள் பலமாக இருந்தால் எதிரியை வெல்ல முடியும். லக்னம், லக்னாதிபதி உங்களை குறிக்கும்.

உங்களை காட்டிலும் உங்கள் எதிரி அதாவது சத்ரு வலிமையாக இருந்து விட்டால் உங்களால் விரோதியை வெல்ல முடியாது அல்லவா? ஆறாமாதி வலுத்து, லக்னாதிபதி வலுக்குறைந்தால் கடன் நோய், விரோதி,வம்பு வழக்கு, பகை போன்ற எதிர்மறை பலன்கள் கண்டிப்பாக இருக்கும். அதேபோல் அட்டமாதிபதி வலுத்து லக்னாதிபதி வலுக்குறைந்தால் கண்டங்கள் ஏற்படும். விபத்துக்களை அடிக்கடி சந்திப்பார்கள்.

guru

இப்ப தனுசு,மீனம் லக்னத்தாருக்கு சுக்கிரன் தசை நடக்கிறது. ஜோதிடரிடம் போறீங்க. அவர் சுக்கிரன் தசை நடக்கிறது சுக்கிரனுக்கு உரிய பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வாரேயானால் உங்களுக்கு உங்கள் பிரச்னைகள் குறையாது.

தொல்லைகள் அதிகமாகும்.எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் பிரச்னைகள் துளியும் குறையாது.பரிகாரத்தால் சுக்கிரன் வலுத்து விடுவார். சுக்கிரன் வலுத்து கெடுப்பார்.மாறாக உங்கள் லக்னாதிபதியான குருவுக்கான பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும். என்ன பரிகாரங்கள்.

guru

முதலில் குருவுக்கான நிறம் மஞ்சள். குருவுக்கு மஞ்சள் கலரில் பட்டு துணி எடுத்து சாற்றலாம்.மஞ்சள் கலரில் உள்ள மலர்களால் தொடுத்த மாலைகளை குருவுக்கு அணிவிக்கலாம்.குருவுக்கான அதிதேவதை தட்சிணாமூர்த்தி .இதே பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கும் செய்யலாம்.

குருபகவானுக்கு உரிய தான்யம் கொண்டை கடலை.அதாவது ஆயுதபூஜையன்று பொரி,கடலையோடு சுண்டலை நிவேதனம் செய்வோமே! அதுதான் கொண்டைக் கடலை. 
குருபகவான் அல்லது அதன் அதிதேவதையான தட்சிணாமூர்த்திக்கு சுண்டல்(கொண்டைக் கடலை)மாலை அணிவிக்கலாம்.

அடுத்து குருபகவானுக்கு பிடித்த சுவை தித்திப்பு. இவர் தித்திப்பு பிரியர். அதாவது இனிப்பு குருபகவானுக்கு ரொம்ப பிடிக்கும். தேன்,கல்கண்டு, மஞ்சள் கலரில் உள்ள லட்டு,கேசரி இவற்றை குருபகவானுக்கு அல்லது தட்சிணாமூர்த்திக்கு படைக்கலாம்.

 

guru


இனிப்பு பாயாசம், சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து பத்து பேருக்கு அன்னதானம் செய்து வரலாம். கூட ஐந்து வகையான கனிவர்க்கங்களை சேர்த்து கொள்ளலாம். இது வியாழக்கிழமை ,குரு ஹோரையில் செய்ய சிறப்பு.

குருவுக்கான ஷேத்ரமான ஆலங்குடி, திருச்செந்தூருக்கு ஆறுமாதத்துக்கு அல்லது, வருடத்துக்கு ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று சென்று அங்கு ஒரு இரண்டரை நாழிகை அதாவது ஒருமணிநேரம் அமர்ந்து விட்டு வரவேண்டும். இதுவே குருவை வலுப்படுத்தும் பரிகாரம் ஆகும். குருவை வலுப்படுத்தினால் உங்களை நீங்களே வலுப்படுத்தி கொண்டதற்கு சமம்.

அடுத்து குருவின் வாகனம் : 

இந்த உலகத்தில் பெரிசா இருக்கற எல்லாமே குரு. உருவத்தில் பெரியதாக உள்ள யானை, திமிங்கலம், உடல் உறுப்பில் தொடை, கல்லீரல் இவை குருபகவானை குறிக்கும். குருபகவானின் வாகனம் யானை.

white elephant


குருபகவானின் வாகனமான யானைக்கு வியாழக்கிழமை குரு ஹோரை வரக்கூடிய காலை ஆறு மணிக்கு மேல் ஏழு மணிக்குள் குருவின் வாகனமான யானைக்கு அதுக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ அதை உங்கள் கைகளால் வாங்கி கொடுக்க அதை யானை சாப்பிட்டால் உங்களுக்கு யானையின் ஜீவசக்தி கிடைக்க பெற்று உங்கள் பலம் கூடும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குட்டியானையை குருவாயூர் கோவிலுக்கு தானம் கொடுத்தார். யானைகளுக்கு புத்துணர்வு முகாம்களை நடத்தினார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியை போல நீங்கள் மஞ்சள் துண்டை எப்போதும் தோளில் போட்டு கொள்ளலாம். உங்கள் வீட்டை மஞ்சள் கலர் பெயின்ட் அடித்து கொள்ளலாம். மெத்தை விரிப்பு, போர்வை,சால்வை, உள்ளாடைகள் மஞ்சள் கலரில் அணிந்து கொள்ளலாம். உங்களை சுற்றி எல்லாவற்றையும் மஞ்சள் கலரில் மங்களகரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

கிரக ரத்தினம் என்ற தலைப்பில் குருவுக்கான ரத்தினம் கனக புஷ்பராகக்கல்.புஷ்பராகக்கல்லை குருவின் உலோகமான தங்கத்தில் பதித்து வலதுகை மோதிரவிரலில் அணிந்து கொள்ளலாம்.

guru

பொதுவாக ராசிக்கான ராசிக்கல்லை தேர்ந்தெடுத்து போடுவதைக் காட்டிலும் லக்னத்துக்கு தேர்ந்தெடுத்து போடுவது சிறப்பாகும். அதுமட்டுமின்றி லக்னாதிபதியின் ராசிக்கல்லை வாழ்க்கை முழுவதும் அணிந்து கொள்ளலாம். ராசிக்கு ராசிக்கல் அணியும் போது அவர் லக்னத்துக்கு பாவியாக,லக்னத்துக்கு நன்மை செய்யாதவராக அமைந்து விட வாய்ப்புகள் உள்ளது.

குழந்தை இல்லாதவர்கள் மேற்கண்ட பரிகாரங்களை செய்து கொள்வதோடு ஏழைக் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கி தரலாம். புத்தாடைகள் இனிப்புகள் வாங்கி தரலாம். குழந்தைகள் குருபகவான். அந்த குழந்தைகள் சந்தோசப்படும்போது குருபகவானும் மகிழ்ந்து உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவார். இதையும் வியாழக்கிழமை குரு ஹோரையில் செய்யுங்கள்.

guru

ஜோதிடர்கள் சொந்த விருப்பு,வெறுப்பின்றி சகாதேவனை போல ஜோதிடம் சொல்ல வேண்டும். பரிகாரம் சொல்ல வேண்டும். தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக எல்லோரையும் தன்னுடைய இஷ்டதெய்வ கோவிலுக்கு செல்ல சொல்வது எப்படி சரியாகும். இது நியாயமாகுமா? தர்மம் தானா? ஜோதிடம் பார்க்க வர்றவங்களுக்கு நல்லது நடக்கணும்.அது ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சஹாதேவனிடம் துரியோதனன் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்று யுத்த களப்பலிகொடுக்க நல்ல நாள் குறித்து கொடுக்க சொன்னான். சஹாதேவன் வந்திருப்பது தன்னுடைய எதிரி என்று தெரிந்தும், தாங்கள் போரில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் துரியோதனனுக்கு அமாவாசையில் நல்ல நாள் குறித்து கொடுத்தான். பின்னர் கிருஷ்ணப் பெருமானின் சூழ்ச்சியால் அமாவாசையை முதல்நாளுக்கு மாற்றினார் என்பது வேறு கதை.

 

vijay Sat, 01/12/2019 - 17:37
Remedies for Jupiter vedic astrology jupiter guru remedies spiritual guru remedies ஜோதிடம்

English Title

Remedies for Jupiter in vedic astrology

News Order

0 புராணங்கள் சொல்லும் போகி பண்டிகையின் கதை 

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதுபோகி பண்டிகையில் மறைந்துள்ள தத்துவமாகும்.

indhiran

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன்  மற்றும் கிருஷ்ண பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். ஆணவத்தில் திகைத்த இந்திரனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார் பகவான் கிருஷ்ணர்.

கிருஷ்ணர்  தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார். அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். 

bhogi festival

இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். மூன்று நாட்களுக்கு நீடித்தது அந்த மழை அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

அதன் பின் பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன் கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல் இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார். இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.

bhogi festival

போகி தினம் பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் வீட்டின் கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, கருந்துளசி, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட நம்பிக்கை ஆகும் . 

இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. போகி என்றால் மகிழ்ச்சியானவன் போகங்களை அனுபவிப்பவன் என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே போகி பண்டிகை எனப்படுகிறது.

bhogi

போகிக்கு முந்தைய நாளில் வீடு வெள்ளையடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். போகிப் பண்டிகை அன்று அதிகாலையில் நிலைப்பொங்கல் வைக்கும் வழக்கம் இன்றும் நமது தென்மாவட்டப் பகுதிகளில் இருக்கிறது. 

முந்தையக் காலங்களில் எல்லாவிதக் குறிப்புகளும் பனையோலை ஏட்டில்தான் எழுதப்படும். இலக்கியங்களும், புராணங்களும்கூட பனையோலையில்தான் இருந்துவந்தன.

படித்தவர்களின் வீட்டில் பரணெங்கும் கிடந்த இந்தப் பனையோலைகள் யாவும் இந்த கிடந்த நாளில் எடுக்கப்பட்டு, சிதைந்துபோன ஏடுகள் நீக்கப்பட்டு, மீதமிருந்த ஓலைகள் புதிதாகக் கட்டப்படும். 

bhogi

சிதைந்து போன ஓலைகளில் இருந்த விஷயங்கள் புதிதாக எழுதப்படும். சிதைந்த ஓலைகள் தீயிலிட்டுக் கொளுத்தப்படும். இதுவே போகியன்று தீ மூட்டும் வழக்கமாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.

நம்முடன் மற்றவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தும் பொருள்களைக் கொளுத்தினால், நாம் இன்னும் நம் கடவுளைப் பற்றியும், நம்முடைய சடங்குகள் பற்றியும் அறிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

போகி பண்டிகையினை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் நாம் கொண்டாடினாலே போதும் நமது மண்ணுக்கும் நம் முன்னோர்களுக்கும் செய்யும் மகத்தான தொண்டு ஆகும் .

vijay Sat, 01/12/2019 - 13:31
Bogi Festival Indran Festival Bhogi History of  Bogi spiritual bhogi festival ஆன்மிகம்

English Title

Significance of the Bhogi festival

News Order

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ. 3,069 எனவும், 1 சவரன் ரூ.24,552 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,216 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.42.70 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 

vijay Sat, 01/12/2019 - 11:35
Gold Gold Rate silver Silver Rate chennai gold and silver rate தமிழகம்

English Title

Today Gold and Silver Price in Chennai 

News Order

0 கிராமங்கள் கொண்டாடும் கதிரவ பொங்கல்!

உலகங்களின் இயக்கத்துக்குக் காரணியாகக் கதிரவன் இருக்கிறான் எனவேதான் நமது பண்பாட்டில் கதிரவ வழிபாட்டுக்கு மிக உன்னதமான இடத்தை வைத்திருக்கிறோம். பொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

sunrise

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். 

தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

pongal11

தமிழர் திருநாளான பொங்கல்  அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை இடித்து முறத்தால் புடைத்து பொங்கல் வைப்பதற்கு தேவையான சத்துள்ள பச்சரிசியை அவர்கள் தயார் செய்வார்கள். 

பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மெழுகுவார்கள். 

pongal


குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். 
 
வீட்டின் முற்றத்தில் சிறிய மணல் மேடை அமைத்து, அதன் மேலே பாறாங்கல்லை அடுக்கி அடுப்புப் போன்ற அமைப்பை உண்டாக்கியிருப்பார். பாறாங்கல் அடுப்பைச் சுற்றி, மூன்று கரும்புகளை முக்கோண வடிவத்தில் நட்டு நிறுத்தியிருப்பார். இவை எல்லாமே மாக்கோலத்தின் மேல் வடிவமைக்கப்பட்டிருக்கும். 

pongal

மண்ணாலான பொங்கல் பானையைச் சுத்தமாகக் கழுவி அதைச் சுற்றிலும் அழகாகக் கோலமிட்டு மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம் ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பார்கள்.

எரிப்பதற்குக் காய்ந்த ஓலைகளையும், குச்சிகளையும் மட்டுமே பயன்படுத்துவார்கள் . அதன் பின்னர் பச்சரிசியை களைந்து, அக்கழனித்தண்ணீரை, குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டே பானையில் ஊற்றுவார்கள்.

 பால் எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்துகொண்டே இருக்கும் .  பால் பொங்கும் நேரத்தில் வலம்புரிச் சங்கெடுத்து ஊதுவார்கள். அதனையடுத்து வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை எழுப்புவார்கள். அதனையடுத்து பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் கூறுவார்கள்.

pongal14

அதன் பின்  பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ்பழம், ஏலம் சுக்கு, நெய் ஆகிய பொருட்களை பானையிலிட்டு, நன்றாகப் பொங்கல் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்குவார்கள்.

பொங்கலை குலசாமிக்கும், கதிரவனுக்கும் படைத்த பின்பு கூட்டாக உட்கார்ந்து அனைவரும் உண்ணத் தொடங்குவார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கிராமத்து பொங்கல் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் சிறிது அளவு கூட பழமை மாறாமல் கொண்டாடப்படுவது மட்டுமே தமிழக கிராமங்களுக்கு பெருமை சேர்கின்றது.  
 

vijay Sat, 01/12/2019 - 11:17
 pongal festival village veetu pongal Mattu Pongal kaanum pongal pongal festival spiritual gramaththu pongal ஆன்மிகம்

English Title

pongal festival in village

News Order

0 இன்றைய ராசி பலன்

மேஷம் :

நீங்கள் பணத்தை சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள்.

ரிஷபம் :

உங்கள் உறவினர்களிடம் கலந்தாலோசித்து உங்கள் திருமணத்திற்காக திட்டமிடலாம்.

 மிதுனம் :

தேவையற்ற செலவுகள் செய்ய நேரும்.

கடகம் :

எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.

சிம்மம் :

நீங்கள் பொறுமையை இழக்காமல் புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டியது அவசியம்.

கன்னி :

பங்கு வர்த்தகம் போன்ற புதிய முதலீடுகள் திருப்தி அளிக்கும்.

துலாம் :

ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் மன திருப்தி பெற இயலும்.

விருச்சிகம் :

உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும்.

தனுசு :

உங்கள் துணையுடன் உங்கள் எதிர் கால வாழ்க்கைக்கு திட்டமிட உகந்த நாள்.

மகரம் :

உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். இன்று அனுசரித்துப் போவது நல்லது.

கும்பம் :

 சக பணியாளர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

மீனம் :

உங்கள் பணிகளை திறமையுடன் ஆற்றுவீர்கள். 

vijay Sat, 01/12/2019 - 09:29
Aries STAURUS Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces spiritual Today Rasi Palangal ஜோதிடம்

English Title

Today zodiac prediction

News Order

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

 சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ. 3,072 எனவும், 1 சவரன் ரூ.24,576எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,226 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.42.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

vijay Fri, 01/11/2019 - 11:12
Gold Gold Rate silver Silver Rate chennai gold and silver rate தமிழகம்

English Title

Today Gold and Silver Price in Chennai 

News Order

0 பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தீ மிதித்தல் விழா

ஈரோடு : 

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில் ஆகும். மிகப்பழமையான இந்த கோயிலில் ஆண்டு தோறும் குண்டம் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நேற்று நடைபெற்றது.

pariur

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை குண்டத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் கோயிலின் முன்பு உள்ள குண்டம் அமைக்கும் இடத்தில் குவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து குண்டத்துக்கு பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இரவு 11 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விறகுகள் கொழுந்து விட்டு எரிந்து கனலாக மாறியது. 

அதே நேரத்தில் அதிகாலை 2 மணிக்கு கோயிலில் இருந்து தலைமை பூசாரி கந்தவேல் தலைமையில் பூசாரிகள் கோயிலின் முக்கிய நிர்வாகிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொட்டியபாளையம் பிரிவில் உள்ள கோயிலுக்கு சென்றனர்.

pariur

அதைத்தொடர்ந்து படைக்கலம் மற்றும் குதிரையுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது . அதன் பின்னர் 40 அடி நீளமும்  3 அடி அகலத்தில் தீ குண்டம் தயாரானது.

இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 7 மணியளவில் தலைமை பூசாரி கந்தவேல் குண்டத்தில் இறங்கி தீமிதித்து கோயிலுக்குள் சென்றார். அவரைத்தொடர்ந்து மற்ற பூசாரிகள், கோவில் பணியாளர்கள், குண்டம் வீரர்கள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்.

pariur

குண்டம் இறங்குவதற்காக திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் பக்தர்கள் வந்து குவிந்தனர். மதியம் 1.15 மணிவரை பக்தர்கள் வரிசையாக வந்து குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

vijay Fri, 01/11/2019 - 11:02
Pariyur kondam festival Pariyur Kondathu Kaliamman Temple Gobichettipalayam spiritual pariur amman temple ஆன்மிகம்

English Title

kaliamman temple thimithi thiruvila

News Order

0
2018 TopTamilNews. All rights reserved.