kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

amirthavarshini's blog
ilaiyaraja

இசை எனக்கு மட்டும் தான் வரும்; இளையராஜாவின் சர்ச்சை கருத்துக்கு கங்கை அமரன் பதிலடி!

தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் இசையமைப்பதே இல்லை என்ற இளையராஜாவின் சர்ச்சைக் கருத்துக்கு அவரது தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பதில் ட்வீட் போட்டுள்ளார்.

‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களுக்கு எதிராக போலீஸில் புகார்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ மற்றும் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு எதிராக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படமும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இவ்விரு திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

இந்நிலையில் அரசு விடுமுறை இல்லாத நாட்களில் வெளியாகும் இப்படங்கள் 6 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக சமூக ஆர்வலர் தேவராஜன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவரது மனுவில், அரசு விடுமுறை இல்லாத நாட்களில் புதிய திரைப்படங்கள் ரிலீசானால், 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்ற அரசாணை உள்ளது. ஆனால், சட்டத்திற்கு புறம்பாக ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் 6 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக ஆன்லைனில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையை மீறி 6 காட்சிகள் திரையிடப்பட்டால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். அப்படி விதியை மீறும் திரையரங்குகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே 6 காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு வசூல் செய்த கட்டணங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

amirthavarshini Sat, 01/05/2019 - 10:21
Petta Viswasam rajinikanth Thala Ajith Viswasam Pongal Petta Pongal Paraak Viswasam Thirruvizha pettaviswasam சினிமா

English Title

A Police Complaint files against ‘Petta’ and ‘Viswasam’!

News Order

0
rajinikanthvadivelu

மீண்டும் இணையும் ரஜினி-வடிவேலு காம்போ?; ஆனா ஒரு கண்டிஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமானால் வடிவேலுவுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


manishakoirala

ஒரு நாள் கூட குடிக்காமல் இருந்ததில்லை; மனம் திறக்கும் ‘பம்பாய்’ ஹீரோயின்

மதுவுக்கு அடிமையாக இருந்ததாக ’பம்பாய்’ நடிகை மனிஷா கொய்ராலா தனது சுயசரிதையில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

oviya

ஆரவுடன் லிவிங் டுகெதரா? அட நீங்க வேற..! திருமண வதந்திக்கு டாட் வைத்த ஓவியா..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை ஓவியா, பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் லிவிங் டுகெதரில் வாழ்வதாக பரவிய வதந்திக்கு நடிகை ஓவியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


maniratnam

மணிரத்னம் படத்தில் பாலிவுட் மாமனார், மருகள்?

இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் சரித்திர கால திரைப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நரேந்திர மோடி பயோபிக்கில் நடிக்கும் அஜித் பட வில்லன்!

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது கேரக்டரில் பாலிவுட் நடிகை விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைப்பதாலும், உண்மை சம்பவத்தை கொண்டு திரைப்படம் எடுப்பது சவாலாக இருப்பதாலும் ஃபிலிம் மேக்கர்கள் பலரும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

manmohansingh

தற்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சி காலத்தை மையப்படுத்தி அனுபம் கேர் நடிப்பில் ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவிருக்கும் அப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

vivekoberoi

இந்நிலையில், தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாகவுள்ளது. ‘மேரி கோம்’ பயோபிக் படத்தை இயக்கிய ஓமங் குமார் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சந்தீப் சிங் தயாரிக்கும் இப்படத்தில் நரேந்திர மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பணிகள் வரும் ஜன.7ம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளது. அன்றே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் நடிப்பில் கடைசியாக பாலிவுட்டில் ‘பேங்க் சோர்’ திரைப்படமும், தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

vivekoberoi

amirthavarshini Fri, 01/04/2019 - 12:18
Narendra Modi Narendra Modi Biopic PM Narendra Modi Vivek Oberoi Omung Kumar prime minister narendramodi சினிமா

English Title

Confirmed! Vivek Oberoi to play PM Narendra Modi in his biopic

News Order

0
2018 TopTamilNews. All rights reserved.