kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

smprabu's blog
சத்ய பிரதா சாஹூ (கோப்புப்படம்)

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு; சத்ய பிரதா சாஹூ தகவல்!

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது

கோப்புப்படம்

நீங்க சொல்றத கேட்க முடியாது; விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பெண்!

நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் இருந்து ஆக்லாந்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு NZ424 ரக விமானம் புறப்பட்டுள்ளது

அவ்னி லவாசா (கோப்புப்படம்)

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி; நீதிமன்றத்தை அணுகிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடு...

கோப்புப்படம்

மின்தடையால் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலி; மதுரையில் அவலம்!

மதுரையில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நேற்று பொழிந்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது,

கோப்புப்படம்

ஆந்திராவில் கடும் வெயில்; மூன்று பேர் பலி!

காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால், அலுவலகம் மற்றும் சொந்த பணிகளுக்கு வெளியில் செல்வோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்

தாயை தோளில் சுமந்து வந்த மகன்

வாக்குச்சாவடிக்கு 105 வயது தாயை தோளில் சுமந்து வந்த மகன்; நெகிழ்ச்சி சம்பவம்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் வருகிற 23-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள...

ஃபானியை பார்க்க ஹெலிகாப்டரில் போன பிரதமர் மோடி; கஜா-ன்னா தொக்கா?-நெட்டீசன்கள் விளாசல்!

புவனேஸ்வர்: கஜா புயல் பாதிப்பின் போது தமிழகம் வராத பிரதமர் மோடி, ஓடிசாவை மட்டும் பார்வையிட்டது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபானி, தமிழகத்தை தாக்கும் என எதிர்பார்த்த போது, அது ஓடிசாவை நோக்கி திசை மாறி சென்று, கடந்த வெள்ளிக்கிழமையன்று புரி கடற்கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அதனால், ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. சூறைக் காற்றில் சிக்கி, மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொலைத் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்து, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

fani

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசாவின் 14 மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 11.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், புயலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

fani

புயல் கரையை கடந்தாலும் அது ஏற்படுத்திச் சென்ற பாதிப்பில் இருந்து இன்னும் ஒடிசா மீளவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தும், அத்தியாவசிய தேவைகளுக்கும் தவித்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

புயல் பாதிப்பை முன்னதாக கணித்த மத்திய அரசு, ஒடிசா, ஆந்திரா, மேற்குவங்கம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு புயல் தாக்குதலுக்கு முன்னதாகவே ரூ.1,000 கோடி ஒதுக்கியிருந்தது. தமிழக அரசு சார்பில் ஒடிசாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்தில், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். அவருடன் அம்மாநில முதல்வர், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, புயல் பாதிப்பின் உத்தேச சேத மதிப்பீடு, தேவைப்படும் நிதி உள்ளிட்டவைகள் குறித்து அம்மாநில முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, கஜா புயல் பாதிப்பின் போது பிரதமர் மோடி தமிழகத்தில் பார்வையிடாததை சுட்டிக் காட்டி பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, அந்த பகுதிகளை பிரதமர் ஆய்வு செய்வது சரியே. எனினும், தமிழகம் அத்தகைய இடருக்கு உள்ளான போது இங்கு வராமல், தேர்தலை மனதில் வைத்து ஒருதலைப் பட்சமாக ஒடிசாவில் மட்டும் பிரதமர் மோடி ஆய்வு செய்வது குறித்து நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு விமர்சித்து வருகின்றனர்.

gaja

கஜா புயலானது, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாகிச் சென்றது. புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

smprabu Mon, 05/06/2019 - 15:11
Odisha PM Modi cyclone fani gaja cyclone பிரதமர் மோடி இந்தியா

English Title

PM Modi visits Cyclone fani affected Odisha

News Order

0

Ticker

0
விபத்துக்குள்ளான விமானம்

ரன்வே-யில் மளமளவென தீப்பிடித்து ஓடிய விமானம்; குழந்தைகள் உள்பட 41 பேர் பலி!

ஏரோஃபிளாட் விமான நிறுவனத்தை சேர்ந்த சூப்பர் ஜெட் 100 ரக விமானமானது 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 78 பேருடன் புறப்பட்டது

கோப்புப்படம்

பொள்ளாச்சியை போல் கொண்டாட்டம்; பெண்கள் உள்பட 160 பேர் கைது!

சமூக வலைத்தளம் மூலம் ஆட்களை சேர்த்து, மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட இதர போதை பொருட்களை உபயோகித்து இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இரு தினங்களுக்கு மு...

கோப்புப்படம்

3 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி!

அதிமுக-வுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள்

2018 TopTamilNews. All rights reserved.