kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Blog posts

பெட்ரோல் பங்க்

அங்க 10 டாலர் விலை ஏறினா, இங்க பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயரும்

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 அமெரிக்க டாலர் உயர்ந்தால், நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயரும் என எதிர்பார்க்கலாம் என த...


உச்ச நீதிமன்றம்

2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை! ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு! உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்

2016ல் காஷ்மீரில் 3 மாதம் தகவல்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டபோது யாரும் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தை நாடவில்லை. ஆனால் இப்பம் கேள்வி கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது என உச்ச...


வருமான வரி

உத்தர பிரதேசம் மட்டுமல்ல மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களும் சொந்த காசில் வருமான வரி கட்டி பழக்கமில்லை

உத்தர பிரதேசம் மாநிலம் மட்டுமல்ல மத்திய பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருமான வரியை அம்மாநில கருவூலம் மக்களின் வரிப்பணத்தை எடுத்து செலுத்தி வரும் தகவல...

திருமணத்துக்கு வரும்போது உணவை நீங்களே கொண்டு வந்துவிடுங்கள்! விநோத பத்திரிக்கை!

திருமணத்துக்கு வருவதை முன்கூட்டியே உறுதிப்படுத்தாவிட்டால் விருந்தினர்களே தங்களுக்கென ஒரு நாற்காலியையும், சேண்ட்விச்சையும் கொண்டு வந்து விடுமாறு திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக திருமணத்துக்கு அழைப்பிதழில் அனைவரும் தவறாது வந்துவிடுமாறு, அச்சிட்டிருப்பார். ஆனால் நீங்களே உணவு மற்றும் இருக்கை உள்ளிட்டவற்றை கொண்டுவருமாறு பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் போன்ற நாடுகளில் RSVP என சொல்லப்படும், விசேஷத்துக்கு வருவதை உறுதிப்படுத்தக் கோரும் வழக்கம் உள்ளது.  உணவு வீணாவதை தடுப்பதே இதற்கு காரணம். 

Invitation

திருமண அழைப்பிதழில், வருத்தத்தோடு நிராகரிக்கிறேன் அல்லது மகிழ்ச்சியோடு அழைப்பை ஏற்கிறேன் ஆகிய இரு வாய்ப்புக்களை தேர்வு செய்ய வழங்கியுள்ளனர். அதில் பின் குறிப்பாக செப்டம்பர் 10-ம் தேதிக்குள் வருகையை உறுதிப்படுத்தாதவர்கள், திருமணத்துக்கு வரும்போது தயவு செய்து ஒரு நாற்காலியையும், ஒரு சாண்ட்விச்சையும் எடுத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

aishwarya Mon, 09/16/2019 - 21:23
invitation Marg தமிழகம்

English Title

Bring the food yourself when it comes to the wedding

News Order

0

Ticker

1 ஒரே நாடு - ஒரே மொழிக்கு கர்நாடகாவும் எதிர்ப்பு! பாஜகவுக்கு பாஜகவே எதிரியான கொடூரம்!! 

கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது; அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்தவாரம் ஒரே நாடு ஒரே மொழி அது இந்தி மொழி என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி நாளை’யொட்டி, இந்திதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவல்ல தகுதி இந்திக்குத்தான் உள்ளது. எனவே இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

yeddyurappa

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, “இந்தியாவிலுள்ள அனைத்து அலுவல் மொழிகளும் சமமானது. கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது. நாங்கள் எப்போடு கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 
 

aishwarya Mon, 09/16/2019 - 21:14
Yeddyurappa Hindi yeddyurappa இந்தியா

English Title

yeddyurappa tweet

News Order

0

Ticker

1 இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப் 20 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்! 

பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக, வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. 

உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்தவாரம் ஒரே நாடு ஒரே மொழி அது இந்தி மொழி என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி நாளை’யொட்டி, இந்திதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவல்ல தகுதி இந்திக்குத்தான் உள்ளது. எனவே இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

MK Stalin

இந்நிலையில் திமுக தலைமையில் உயர் நிலை செயல் திட்டக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தி திணிப்பை தொடர்ந்து முயற்சித்துவரும் மத்திய அரசை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, ஒரே ரேஷன் ஒரே நாடு ஆகிய திட்டத்திற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இதில் திமுகவின் தோழமைக் கட்சிகள் பங்கேற்கும் என தகவல்வெளியாகியுள்ளது. 

aishwarya Mon, 09/16/2019 - 21:09
mk stalin DMK Protest MK Stalin தமிழகம்

English Title

DMK protests on September 20th

News Order

0

Ticker

1 செப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்! கடிதம் மூலம் மிரட்டல்!!

செப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

செப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் வந்துள்ளது. இதனை டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடிதம்

இந்த கடிதமானது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், நாங்கள் தடை செய்யப்பட்ட டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் தனது மகனுடன் சேர்ந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மிரட்டல் கடிதத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

aishwarya Mon, 09/16/2019 - 20:58
HighCourt Highcourt தமிழகம் ஆன்மிகம் ஜோதிடம் வீடியோ

English Title

Bomb blast at Chennai High Court on September 30

News Order

0

Ticker

1 ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு! 

பால் விலை உயர்வை தொடர்ந்து பிரசித்தி பெற்ற  ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும்  தனியார் மற்றும் கூட்டுறவு பால்கோவா விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் தரமான பால் மூலமாக தயாரிக்கப்படும் பால்கோவாவுக்கு மற்ற இடங்களில் தயாரிக்கப்படும் பால்கோவாவை காட்டிலும் தனிச்சுவைக் கொண்டது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் உலகம் முழுக்கவே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது. சுமார் 80 ஆண்டுகளாக இப்பகுதியில் தனித்துவத்துடன் தயாரிக்கப்படும் பால் கோவாவிற்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்தது. 

srivilliputhur palkova

இந்நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும்  தனியார் மற்றும் கூட்டுறவு பால்கோவா விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கிலோ 240 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது 260 ரூபாயாக பால்கோவா விலை உயர்ந்துள்ளது.

aishwarya Mon, 09/16/2019 - 20:32
Srivilliputhur palkova srivilliputhur palkova தமிழகம்

English Title

srivilliputhur palkova cost increased

News Order

0

Ticker

1 அபராதம் விதித்தால் தற்கொலை செய்துகொள்வேன்! ட்ராபிக் போலீசை அலறவைத்த இளம்பெண்!!

வாகன பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை மடக்கிப்பிடித்த காவல்துறையினருக்கு, அவருக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டனர். இதனை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண் நூதனமாக போலீஸை மிரட்டிய சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. 

police

போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி அபராத தொகையானது 10 மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய அபராதத்தொகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் டெல்லியில் ஓர் இளம்பெண் இருசக்கரவாகனத்தில் வந்துகொண்டிருக்கிறார். அவரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் பதிவு எண் பலகை இல்லாததால் வண்டியிலிருந்து இறங்க கூறியுள்ளனர். இதற்கு சம்மதிக்காத அந்த பெண், உடனே போக்குவரத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் தொடர்ந்து விதிமுறை மீறல் எனக்கூறி அபராத ரசீதை பிரிண்ட் செய்ய முயற்சித்துள்ளனர். உடனே அந்த பெண்  அபராத ரசீது கொடுத்தால் தற்கொலை செய்வேன் என்று காவல்துறையினரை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிற்கு அபராதம் விதிக்காமல் அறிவுரைக்கூறி காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

aishwarya Mon, 09/16/2019 - 20:20
Police suicide girl இந்தியா

English Title

Delhi woman gets challan, threatens to commit suicide, cops let her go after argument

News Order

0

Ticker

1 மார்ச் 27 ஆம் தேதி தொடங்குகிறது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு... கால அட்டவணை இதோ!  

மார்ச் 27 ஆம் தேதி எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்குகிறது. மேலும் அதற்கான புதிய கால அட்டவணையையும் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை ஆகஸ்ட் மாதமே வெளியிட்டிருந்தது.

SSLC

ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தாளாக நடத்தப்படவுள்ளது. மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி   ஏப்ரல் 7 ஆம் தேதி முடிவடையவுள்ள இந்த தேர்வுக்கான அட்டணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


மார்ச் 27, 2020 - தமிழ் 
மார்ச் 31, 2020 - ஆங்கிலம்
ஏப்ரல் 03, 2020 - சமூக அறிவியல்
ஏப்ரல் 07, 2020  - அறிவியல்    
ஏப்ரல் 13, 2020  - கணிதம் 

aishwarya Mon, 09/16/2019 - 20:11
SSLC Exam தமிழகம்

English Title

SSLC Exam TimeTable Released

News Order

0

Ticker

1
2018 TopTamilNews. All rights reserved.