• October
    14
    Monday

Main Area

Mainகாவித் தொப்பி கண்ணம்மாக்கள்; மலராத தாமரைக்கு மலை போல செலவு பண்ணும் பாஜக!

தொப்பியுடன் பாஜக தொண்டர்கள்
தொப்பியுடன் பாஜக தொண்டர்கள்

சென்னை: தமிழகத்தில் பாஜக-வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்திய அளவில் பாஜகவை மிக மோசமாக எதிர்க்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கியம் இட வகிக்கிறது. பிரதமர் மோடி வந்தால் #gobackmodi என டிவிட்டரில் டிரெண்ட் செய்வது துவங்கி பாஜகவி-னரை சமூக வலைதளங்களில் கலாய்ப்பது என இணையத்திலேயே அத்தனை பாஜக எதிர்ப்பு. இதனால் பாஜக-வினர் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

goback modi

வாக்கு வங்கியை எடுத்துக் கொண்டாலும், பாஜக-வுக்கு குறைவான வாக்கு வங்கியே உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தில் பாஜகவின் நேரடி எதிரியாக நோட்டாவே மாறிப்போனது. இந்த மன உளைச்சலில் தனியாக வெதும்பிக் கொண்டிருந்தாலும் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக-வினர் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

nota

இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக-வினர், எந்த வகையிலாவது நோட்டாவை முந்தி விட வேண்டும். தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே ஆக வேண்டும் என தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர்.

tamilisai

ஆனால், இதில் சோகம் என்னவென்றால், பாஜக-வினர் பொதுக் கூட்டத்தில் பொதுமக்களின் எண்ணிக்கையை விட காலி சேர்களின் எண்ணிக்கையே அதிகம் காணப்படுகிறது. #பாசிசபாஜக போன்று #காலிசேர்பாஜக என டிரெண்ட் ஆகாதது தான் குறை.

இரு தினங்களுக்கு முன்னர் கூட, பாஜக சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பொதுக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது சிலர் சேர்களை விட்டு எழுந்து சென்றனர். பின்னர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச துவங்கினார். அதன் பிறகு ஏராளமான மக்கள் கூட்டத்தில் இருந்து எழ ஆரம்பித்தனர். இதனால் சேர்கள் காலியானது, அதனை பத்திரிகையாளர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்றபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

bjp empty chairs

மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யும் 208 பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் வரை வேட்பாளர் செலவு செய்யலாம். பிரசாரத்தின் போது தொண்டர்களுக்கு வழங்கப்படும் டி- சர்ட் ஒன்றிற்கு ரூ.175, தொப்பிக்கு ரூ.50, பூனம் புடவைக்கு ரூ.200, வேட்பாளர்களை வரவேற்க பயன்படுத்தப்படும் பூசணிக்காய்க்கு ரூ.120 செலவிடலாம் என ஒரு பெரிய பட்டியலையே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த தொகை அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், தேர்தல் ஆணையத்தின் விலை நிர்ணய பட்டியல் வேட்பாளர்களுக்கு மற்றொரு கிடுக்குப்பிடியாக அமைந்துள்ளது.

தமிழகத்தின் பிராதன கட்சிகளுக்கு இங்கே வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. திமுக ஆட்சி காலத்துக்கு முன்பு தமிழகத்தை தேசிய கட்சியான காங்கிரஸ் ஆண்டதால் அதற்கும் கூட கணிசமான வாக்கு வங்கி உள்ளது. எனவே, வேட்பாளர்கள் செலவு செய்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், பாஜக-வின் வாக்கு வங்கியோ நோட்டாவுடன் போட்டி போடும் நிலையிலேயே உள்ளது. அதனால், அவர்கள் ஏன் தொப்பி, கொடி என ஏராளமாக செய்ய வேண்டும் என சமூக வலைதளவாசிகள் ஒரு வித கிண்டலுடன் பதிவிட்டு வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.