• December
    12
    Thursday

Main Area

Main



அசைக்க முடியாது.. இனி 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான்... கூட்டிக் கழித்துப்பார்த்த அதிரடி அரசியல் கணக்கு..!

மோடி
மோடி


இன்னும் 20 ஆண்டுகள் பாஜகவை யாராலும் அசைக்க முடியாது என அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். அது எப்படி சாத்தியமாகும் என்பதையும் விளக்கியுள்ளார்.

’’மகாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு , மோடி அமித்ஷாவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 1990 களில் வெறும் 10% வாக்கு வங்கி கூட இல்லாத பிஜேபி இன்று 32% மோலான வாக்கு வங்கியை வலுவாக வைத்துள்ளது.

பொதுவாகவே மற்ற கட்சிகள் போல் கிடையாது பிஜேபி , கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் வலுவான சித்தாந்த பின்னனி கொண்டவை. தற்போதைய அரசியல் சூழலில் நேர்மையான மனிதர்கள் அரசியலில் அதிகம் இருப்பது ஒன்று ஆர்.எஸ்.எஸ், பாஜக சித்தாந்த பின்னனியில் வருபவர்களாக இருப்பர் இல்லை, கம்யூனிஸ்ட் சித்தாந்த பின்னனியோடு வருபவர்களாக இருப்பவர்களே, காரணம் அவர்கள் கொண்ட அடிப்படை சித்தாந்தம் வலுவானது.

modi

கம்யூனிசம் உலகளாவிய அளவில் பெரும் தோல்வி அடைந்த சித்தாந்தமாக ஆகிவிட்ட இன்றையக் காலத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட அந்த பொதுவுடமை கொள்கை மூலம் எதனை அடைய விரும்பினார்களோ அதை நோக்கியே உலகம் நகர்கிறது என்பது ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று.

சரி , இப்போ கொஞ்சம் மகராஷ்ட்ரா மாநில தேர்தல் முடிவுகள் உள்ளே வருவோம். தற்போது பாஜக 105 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 122 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்சமயம் 17 இடங்கள் குறைவாக வந்துள்ளது ஆக பாஜக சரிவு என்று சொல்வீர்கள் என்றால் அது தவறு.

2014 தேர்தலில் பாஜக 260 இடங்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட்டது, இந்த முறை 152 இடங்கள் மட்டுமே போட்டியிட்டது, கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு 128 இடங்களும் பிற கட்சிகளுக்கு மீத இடங்களையும் கொடுத்தது.

கணக்கீடு அடிப்படையில் பார்த்தால்

2014 தேர்தல் 122/260 ; 2019ல் 105/152 - என்று கணக்கிட்டால் வெற்றி சதவீத அடிப்படையில் சென்ற முறையை விட இந்த முறை மிக சிறப்பாக தேர்தல் வெற்றி அமைந்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

2014ல் வெற்றி சதவீதம் 46.9 %

2019ல் வெற்றி சதவீதம் 69.07 %

கடந்த முறையை விட இந்த முறை, அதுவும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு தான் போட்டியிட்ட மொத்த இடங்களில் சுமார் 70% தொகுதிகளில் வெற்றி அடைவது எப்படி சரிவு ஆகும்?

maridhas

{மாநிலம் முழுவதும் கடந்த 2 வருடமாக கம்யுனிஸ்ட் காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் இணைந்து பெரும் போராட்டங்கள் பல கட்டமைத்தும் இந்த அளவிற்கு வெற்றி பெறுகிறது பாஜக. அதை நினைவில் கொள்ளவும்.}

மாநிலத்தில் சிவசேனா உண்மையில் அமைப்பு ரீதியாக வலுவிழந்து தான் காணப்படுகிறது. 128 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா இன்று வெற்றி பெற்றிருக்கும் மொத்த தொகுதி 56 மட்டுமே. 2014ல் இதே சிவசேனா தனித்து 282 இடங்களில் போட்டியிட்டு 63ல் மட்டுமே வெற்றி பெற்றது.

சிவ சேனா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு சராசரிக்கும் குறைவான வெற்றி கிடைத்துள்ளது. இதை சிவசேனா கட்டாயம் ஏற்க மாட்டார்கள். ஆனால் அது தான் உண்மை. பாஜக 180 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்று பலரும் விரும்பினாலும் கூட்டணியில் சிவசேனா காட்டிய அந்த கடுமை காரணமாக பாஜக இறங்கி வந்ததன் காரணமாக தான் இன்று வெற்றி சதவீதம் குறைந்துள்ளதே தவிர பாஜக உண்மையில் மிக மிக வலுவாக மகாராஷ்ட்ராவில் காலூன்றி நிலைபெற்றுவிட்டது. இன்றைய தேதியில் மகாராஷ்ட்ராவில் பெரிய கட்சி பாஜக தான்.

பொதுவாகவே கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி என்பதை தாண்டி தனி நபர்களுக்கு வாக்கு வங்கி மகாராஷ்ரா மாநிலம் முழுவதும் வலுவாக உண்டு. ஆனால் அந்த போக்கு மாறியுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் உள்ளது , மோடி அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளர்கள்? என்ற வாதம் எல்லாம் சுத்த பிதற்றல்கள்.

நண்டுர்பார் என்ற தொகுதியில் பாஜக வாங்கிய வாக்கு சதவீதம் 64.52% அதே தொகுதி அதே வேப்பாளர் 2014ல் வாங்கி வாக்கு 52.33%. அவர்களை எதித்து நின்று காங்கிரஸ் கட்சி வேப்பாளர் வாங்கி வாக்கு சதவீதம் 27.17% . 2014ல் இதே தொகுதியில் 38.33% வாக்குகள் பெற்றிருந்தது.modi

இது போல் பாஜக போட்டியிட்டு பல தொகுதிகளில் 50% மேல் வாக்கு மும்முனை போட்டி நான்கு முனை போட்டி வந்த இடங்களில் கூட தனது வாக்கு வங்கியை வலுவாக கட்டமைத்துள்ளது பாஜக.

45 தொகுதிகளுக்கு மேலான தொகுதிகளில் பாஜக 35,000 வாக்குகள் வித்தியாசத்திற்கு மேல் அதிக வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து நின்ற வேட்பாளர்களை தோல்வி அடைய செய்துள்ளார்கள். அந்த வகையில் ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மன நிலையில் இருப்பது பெரிதாக இல்லை.

அதே நேரம் பாஜக வேட்பாளராக Jayakumar Jitendrasinh Rawal, Uresh Damu Bhole என்று பலரும் அந்த அந்த தொகுதியில் தனிபட்ட செல்வாக்கும் வலுவாக கொண்ட பலரும் கட்சியில் உள்ளது மற்றும் ஒரு பலம். ஆக கட்சி சித்தாந்த பலம் ஒருபக்கம் வேட்பாளர் தனிபட்ட பலமும் கூடுதலாக கணக்கிட்டு தான் தேர்தல் கணக்குகளை பாஜக எப்போதும் மிக அதிகம் கவனமாக திட்டமிடுகிறது. எனவே சரியாக அனைத்து தொகுதிகளிலும் ஆய்வு செய்வோமானால் பாஜக மகாராஷ்ட்ரா தேர்தலில் எந்த பின்னடைவும் இல்லை. அமைப்பு ரீதியாக மக்களிடம் பிடிப்பை அதிகம் கொண்ட கட்சியாகவே உள்ளது.

இந்த தேர்தலில் ஒரு வேளை அம்பேத்கர் அவர்களின் பேரன் கட்சியான VBA, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்திருந்தால் நிலை ஒரு வேளை மாறுவதற்கான வாய்ப்பிருந்திருக்கும்.

VBA பல இடங்களில் பெரும் வாக்கை பிரித்தது என்பது நிதர்சனமான உண்மை. 1995 களில் இருந்து தொடர்ந்து தன் பாரம்பரியமான தொகுதியாக பாஜக கருதும் Chalisgaon என்னும் தொகுதியில் 37% வாக்குகள் மட்டுமே பெற்றது ஆனால் வெற்றி. அங்கே VBA 17.63% வாக்குகளை பிரித்தது. இந்த ஓட்டு பாஜகவினர் வாக்கு.

modi

Buldhana என்னும் தொகுதியில் VBA 23.28% வாக்குகளை எடுத்தது இங்கே சிவசேனா வெற்றி. Khamgaon 13%, Jalgaon 14% , Sindkhed Raja 19% , Akola West 12% , Akola East 39% என்று வலுவாகவே வாக்குகளை குறிப்பிட்ட பகுதிகளில் பிரித்தது என்பது உண்மை. Murtizapur தொகுதியில் பிஜேபி வெற்றி ஆனால் அங்கே NCP 23.45% வாக்குகள் , VBA 32.84% வாக்குகளை பெற்றிருந்தன. பாஜக அங்கே வாங்கி வாக்கு 33.92%. இப்படியும் தொகுதிகளை காணமுடியும்.

மத்திய பிஜேபி தலைமை என்ன தான் ஆய்வுகளை நடத்தினாலும் குழப்பமான பதிலே வந்திருக்கும் அந்த அளவிற்கு தேர்தல் களம் சிக்கலாக அரசியல் கட்சிகளால் , தனிபட்ட நபர்களின் செல்வாக்கு என்று வேறு எந்த மாநிலத்தையும் விட குழப்பமான புள்ளிவிவரம் தான் கிடைத்திருக்கும் பாஜகவிற்கு. ஆகவே சிவசேனா கூட்டணி பாதுகாப்பானதாக உணர்ந்தது.

Muktainagar என்னும் இடத்தில் Eaknath Ganpatrao Khadse அவர்களின் மகள் சுயச்சையிடம் தோல்வியை தழுவினார். பாஜக 45.43 % வாக்குகள் பெற்றது. சுயட்சை Chandrakant Nimba Patil 46.42% வாக்குகளை பெற்றார். ஒருபக்கம் சுயேட்சைக்கு காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கிடைத்தலுமே கூட அவரின் இந்த வெற்றி தனி நபராக அவருக்கான செல்வாக்கிற்கு கிடைத்த வெற்றி.

இந்த Muktainagar தொகுதியில் 1990களில் இருந்தே Eaknath Ganpatrao Khadse தான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். இது பாஜகவை தவிர வேறு எவரும் வெற்றி இல்லை என்று எழுதி வைக்கப்பட்ட தொகுதி என்பதாக சொல்லப்பட்டாலும் இது அந்த தனிபட்ட மனிதருக்கான செல்வாக்கு அந்த அளவிற்கு முக்கியமானது. ஆனால் இந்த தேர்தலில் தோல்வியை அவர் மகள் தழுவினார்.ஆகவே குறை சொல்ல தேடினால் குறை நிச்சயம் கிடைக்கும் என்றாலும் எதார்த்தமான உண்மை என்னவென்றால்

மகாராஷ்ட்ராவில் பாஜக தான் மிக பெரிய கட்சி அது தான் அமைப்பு ரீதியாக வலுவான கட்சி என்பதை முழுமையாக நிரூபித்துள்ளது இந்த தேர்தலில். எந்த சறுக்கலும் கிடையாது. கடந்த முறையை விட 110 தொகுதிகள் குறைவாக போட்டியிட்டு 17 தொகுதிகள் குறைந்துள்ளது என்பது வீழ்ச்சி அல்ல.

வலுவான சித்தாந்தம் ஒன்று மக்களை ஒன்றிணைக்கும் போது அது அரசியல் கட்சியின் கட்டமைப்பை தாங்கி பிடித்து கொள்ளும். அந்த வகையில் பாஜக இந்துத்துவா சித்தாந்தம், ஜாதி கடந்து இந்துகளின் மத்தியில் ஒரு ஒற்றுமையை கொண்டு வந்துவிடுகிறது. அதுவே அவர்களின் சித்தாந்தம் வெற்றிபெற காரணம். அதற்கு RSS போன்ற தேசியவாத சிந்தனை கொண்ட இயக்கங்கள் உடன் நிற்பது பலமே.

மகாராஷ்ட்ராவில் 2014ல் சுமார் 75%க்கும் மேலான SC/ST தனி தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக.

Gadchiroli என்ற மாவட்டத்தின் மொத்தமுள்ள அனைத்து தனி தொகுதியையும் பாஜகவால் கைப்பற்ற முடிந்தது. அதே போல் 2014 தேர்தலில் தனி தொகுதிகள் பெரும்பாலும் வெற்றிபெற்றது பாஜக தான். இது தான் பாஜக பலம் என்பதால் தான் தொடர்ந்து எப்படியாவது இந்துக்கள் இணைந்து பாஜகவோடு நிற்க கூடாது என்று அது தலித் மக்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் எதிரான கட்சி என்ற தோற்றத்தை உருவாக்க தீவிரமான அதன் எதிர் கட்சிகள் முயற்சித்தும் அது வெற்றிபெறவில்லை காரணம் பாஜகவை விட களத்தில் RSS வலுவாக நிற்கிறது.

இன்றைய தேதியில் எந்த மாநிலத்திலும் ஒரு முறை வளர்ச்சி அடைந்துவிட்டால் பாஜக என்ற கட்சியை அசைக்கவே முடியாத அளவு வளர்ந்துவிடும். அதற்கு முக்கிய காரணம் அதன் சித்தாந்தம். தேர்தல் வெற்றி என்பது கூடுதலாக அந்த அந்த தொகுதியில் வெற்றி வேட்பாளர்களை அவர்கள் பலத்தை அறிந்து நிறுத்துவது. அந்த வகையிலும் பாஜக மற்றும் RSS இணைந்து சரியான வகையிலே தேர்தலை சந்தித்து உள்ளனர்.

இந்த வகையில் மகாராஷ்ட்ரா தேர்தல் பாஜக வலிமையாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

(இதில் சிக்கல் இனி சிவசேனா என்ன என்ன செய்யும் என்பது தான், ஆட்சி அதிகாரத்தில் இடம் கொடுத்தாலும் சிவசேனாவால் நிச்சயம் தலைவலி உண்டு.)

பாஜக சரிவு , வலிமை இழக்கிறது என்பது எல்லாமே சுத்த பிதற்றல்கள். பாஜக பெரும் சக்தியாக ஒவ்வொரு நாளும் வளர்கிறது , அதற்காக தன் தலைவர்கள் தீவிரமாக அரசியல் களத்தில் வேறு எந்த கட்சியினரையும் விட அதிகம் உழைக்கிறர்கள். ஆக பாஜக இன்னும் 20 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்யும்.

தேர்தல் முடிவுகள் வைத்து பார்க்கையில் பாஜக சரிவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று சொல்வது தான் சரி’’ எனத் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.