• April
    04
    Saturday

Main Area

Main



பா.ஜ.க. தலைவருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை- மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் எக்ராவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆண்டு கண்காட்சி ஒன்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்க எக்ரா தொகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாமரேஷ் தாஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சமுதாய பிளாக் தலைவர் சித்தேஷ்வார் பெரா மற்றும் மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் ஆகியோருக்கு விழா குழுவினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.

பிரதமர் மோடி

இதனையடுத்து அவர்கள் 3 பேரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். மேடையில் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து இருந்தனர் மேலும் அந்த விழாவில் பேசியுள்ளனர். இது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சித்தேஷ்வார பெராவின் பதவியை பறித்தார். மேலும் சமாரேஷ் தாசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பா.ஜ.க.

மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க. கடுமையாக தாக்கியுள்ளது. வரும் 11ம் தேதியன்று கல்கத்தா போர்ட் டிரஸ்டின் 150வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அந்த விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டால், தனக்கு தானே மம்தா தனக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பாரா? என பா.ஜ.க. தலைவர்கள் அதிரடியாக கேள்வி கேட்டுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.