• August
    21
    Wednesday

Main Area

bjp
பழைய எம்.பி.,க்களின் பராக்கிரமம்... நடுத்தெருவில் அலையும் எம்.பி., நடிகைகள்..!

16வது மக்களவை கலைக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் 200க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் டெல்லியில் லுடைன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு அமைக்கப்பட்ட பின்னர், மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த மே மாதம் 25ம் தேதி 16வது மக்களவையை கலைத்தார். சட்டப்படி மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் முன்னாள் எம்.பி.க்கள் அவர்கள் தங்கியிருந்த பங்களாக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், 200க்கும் மேற்பட்ட முன்னாள் மக்களவை எம்.பி.க்கள் 2014ம் ஆண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகப்பூர்வ பங்களாக்களை காலி செய்யவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் அமைந்துள்ள தங்களது பங்களாக்களை காலி செய்யாததால், மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தற்காலிக தங்குமிடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து முழுநேர உத்தியோகப்பூர்வ பங்களா ஒதுக்கப்படும் வரை, 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். இதனால் புதிய எம்.பி.க்களின் தங்குமிட செலவு கோடிக்கணக்கான ரூபாய் எகிறியது.

இதையடுத்து மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வெஸ்டன்கோர்ட் கட்டடத்திலும், பல விருந்தினர் மாளிகையிலும் புதிய எம்.பி.க்கள் தற்காலிகமாக தங்கியுள்ளனர். எனினும் இதில் அவர்கள் தொடர்ந்து தங்கமுடியாது.

முதல்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஸ்மிதி இரானி, சூஃபி பாடகர் ஹன்ஸ்ராஜ் மற்றும் பெங்காலி நடிகைகள் மிமி சக்ரபோர்த்தி மற்றும் நஸ்ரத் ரூஹி உள்ளிட்டோர் அடங்குவர்.

Thijai Mon, 08/19/2019 - 22:07
mimi chakraborthy parliment bjp மிமி சக்ரபோர்த்தி அரசியல்

English Title

The old MPs, the pranksters ... the middle wandering MP, actresses ..!

News Order

0

Ticker

1 காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது... ஜனநாயகத்தின் அடையாளத்தை அழிக்கிறது பா.ஜ.... தம்பியை தொடர்ந்து அக்கா ஆவேசம்....

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் அங்கு எந்தவிதமான பிரச்சினையும் நிகழ கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாட்டுகள் கடந்த 4ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை (நேற்று) முதல் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் வழங்கப்படும், பள்ளிகள் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும், கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும் என கடந்த வெள்ளிக்கிழமையன்று காஷ்மீர் அரசு நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, நேற்று பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை செயல்பாட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர்

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று காஷ்மீர் அரசு நிர்வாகம் அறிவித்த சில மணி நேரங்களில் காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் மற்றும் செய்தி தொடர்பாளர் ரவிந்தர் சர்மா ஆகியோர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கைது செய்யப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

தற்போது ராகுல் காந்தியின் சகோதரியும், அந்த கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவும் காங்கிரஸ் தலைவர்கள் கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: என்ன காரணங்களுக்காக ஜம்மு அண்டு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்? மீடியாவிடம் பேசியது ஒரு குற்றமா? 

மோடி, அமித் ஷா
காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தது போல், இந்திய சட்டத்தை மதித்த காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ஆகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் கைது போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயகத்தின் அடையாளத்தை பா.ஜ. அழித்து வருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

subramani Sun, 08/18/2019 - 07:08
priyanka gandhi congress leaders arrest bjp பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர்கள் கைது பா.ஜ. பிரியங்கா காந்தி அரசியல்

English Title

BJP was eroding the country's democratic identity - priyanka gandhi

News Order

0

Ticker

1 'மத்திய அரசின் அத்துமீறல்களை ரஜினி பாராட்டுவது வேதனையளிக்கிறது' : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை: மத்திய அரசின் அத்துமீறல்களை ரஜினிகாந்த் ஆதரிப்பது வேதனையளிக்கிறது என்று  சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தை மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்தோடு கையாண்டுள்ளனர். திட்டபமிட்டு செயல்படுத்திய விதம் கிருஷ்ணா, அர்ஜுனரை போல் இருந்தது என்று ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளினார். இதற்கு தமிழகத்தில்  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

karti

இந்நிலையில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  'கஜா புயல் பாதிப்பின்  போது  ஆய்வு செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரங்களை இழந்து வாடும் விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகள் அளிக்கப்படும் என்றார். ஆனால் தற்போது நிதியமைச்சராகியுள்ள அவர், தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில்  கஜா  புயல் நிவாரணம் குறித்த ஏதும் அறிவிக்கவில்லை. இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற  மத்திய அரசின் அத்துமீறல்களைக் கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவளித்துப் பேசிவருகிறார் நடிகர் ரஜினி. இது வேதனையை அளிக்கிறது. அவரது பேச்சிலிருந்தே அரசியலில் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெளிவாகிறது' என்றார். 

rajini

தொடர்ந்து பேசிய அவர், யூனியன் பிரதேசமாக லடாக்கை  அறிவித்தது  வரவேற்கத்தக்கது. இருந்தாலும்   சிறப்பு அந்தஸ்திலிருந்த அதன் மதிப்பைக்  குறைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கப்படும் ' என்றார். 

manikkodimohan Fri, 08/16/2019 - 11:45
Karti chidambaram rajinikanth bjp ரஜினி- கார்த்தி சிதம்பரம் அரசியல்

English Title

sivagangai mp karti chidambaram criticized actor rajinikanth

News Order

0

Ticker

0 அமித் ஷாவிடம் ஓ.பி.எஸை போட்டுக் கொடுத்த எடப்பாடி... அத்துவிட அல்லாடும் அதிமுக நிர்வாகிகள்..!

காஷ்மீர் விஷயத்தில் அமித் ஷா  எடுத்திருக்கும் அதிரடி முடிவால் மோடியை விட சில படிகள் அதிகமாகவே அவருக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிடைத்துள்ளதோடு அவரைப் பற்றிய அலசல்களும் அதிகரித்துள்ளன.

அவ்வளவு பிரம்மாண்டமான அமித்ஷாவே முன்வந்து நட்புக் கரம் நீட்டியும் கூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயங்கி, வருந்தியிருக்கிறார் என்று அ.தி.மு.க.வின் தலைமை கழகத்திலிருந்து கிசுகிசுப்புகள் கேட்கின்றன.

amit shah

அப்படி என்ன சொல்லிட்டார் அமித்ஷா? அதுக்கு எடப்பாடிக்கு ஏன் வருத்தம்? என்று அந்த அலுவலக தரப்பில் விசாரித்தால் தகவல்கள் இப்படி வந்து விழுகின்றன. “கடந்த ரெண்டு வருஷமா ஆட்சியை கவிழாம காப்பாத்திட்டு இருக்கிறதுக்கான நன்றிக்கடனுக்காக பி.ஜே.பி. உடனான கூட்டணியை சகிச்சுக்கிட்டோம். நாங்க நினைச்சபடியே வெறித்தனமான தோல்வி பரிசா கிடைச்சுது. பா.ஜ.க.வோடு கூட்டு வெச்ச ஒரே காரணத்தால்தான் ஒத்த தொகுதியை தவிர அத்தனையிலும் தோற்றோம். எங்க மேலே அவ்வளவு வெறுப்பிருந்திந்தால் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாஷ் அவுட் ஆகியிருப்போமே. 

ஆக ஒருகுறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கிதான் எங்களை வெறுக்குது, மீதி அப்படியேதான் ஆதரவு தருதுங்கிறது நிரூபணமாயிடுச்சு. இந்த நிலையில் அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைக்கவே கூடாதுங்கிற எண்ணத்துலதான் முதல்வர் எடப்பாடியாரும் மற்றவர்களும் இருக்கிறோம். பன்னீரை பற்றி இந்த இடத்தில் ஏன் குறிப்பிடலேன்னா அவர் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டிய பா.ஜ.க.வின் வி.ஐ.பி. ஆகிட்டார்.

admk

ஆட்சி கலைப்பு, ரெய்டுன்னு எதை சொல்லி மிரட்டினாலும் மீண்டும் பா.ஜ.க.வின் நட்பை ஏத்துக்கிறது தில்லை என்பதுதான்  இயற்றப்படாத தீர்மானமா கட்சியில் இருக்குது. இதை அமித்ஷாஜி நல்லாவே உணர்ந்து வெச்சிருக்கிறார். ஆனாலும் மீண்டும் எங்களையும் அவங்களோடு சேர்த்து புதைகுழிக்குள் இழுப்பதை எப்படி எடப்பாடியாரால் சகிச்சுக்க முடியும்? கட்சியும், ஆட்சியும், கழக வாக்கு வங்கியும் சிதறுவதில், சிதைவதில் அவருக்கு மிகப்பெரிய மன வருத்தம்.” என்றனர்.

மீண்டும் பி.ஜே.பி.யோடே கூட்டணி வைப்பதனால் நம்ம கட்சிக்கு என்னென பாதகங்கள், ஏதாவது சாதகம் இருக்குதா? என்று தனக்கு தோதான கொங்கு அமைச்சர்களோடு தீவிர ஆலோசனையை இரண்டு மூன்று ரவுண்டு பேசி முடித்துவிட்டாராம் எடப்பாடியார். ஆனால், யாருமே பாசிட்டீவான பதிலை சொல்லவேயில்லை என்பதுதான் இதில் நோட் பண்ண வேண்டிய தகவலே.

gowtham Thu, 08/15/2019 - 17:47
amitshah admk bjp  எடப்பாடி,ஓ.பி.எஸ் அரசியல்

English Title

Edappadi makes trouble to ops with help of amit shah

News Order

0

Ticker

0 மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்- ரஜினி பெருமிதம்

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதியுள்ள ஆவண புத்தகம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியிலே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், 'ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது. நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்; இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்'  என புன்னகையுடன் கூறினார். 

aishwarya Sun, 08/11/2019 - 12:18
rajinikanth bjp Narendra Modi ரஜினிகாந்த் அரசியல்

English Title

Rajinikanth Speech

News Order

0

Ticker

1 ஓ.பி.எஸை பதற வைத்த எடப்பாடி... உள்ளடி வேலையால் அதிமுகவில் வெடிக்கப்போகும் பூகம்பம்..!

மோடி அரசாங்கத்திடம் மிக முழுமையாக அடங்கி, ஒடுங்கி கிடப்பதால் அ.தி.மு.க. அரசு தலை தப்பிப் பிழைத்து ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதேபோல், அ.தி.மு.க.வின் உள்ளேயும் இப்படி ‘மோடியால் பிழைப்போர்’ எனும் சாடல் உள்ளது. அதாவது எடப்பாடியாரை விட பன்னீர்செல்வம்தான் பி.ஜே.பி.யிடம் அதிகம் நெருங்கி நிற்கிறார். எப்படி என்றால், கட்சியின் முடிவுக்கு ஒத்து வராமல் முத்தலாக் தடை சட்ட மசோதாவை ஆதரித்து பேசுமளவுக்கு நெருங்கி நிற்கிறது ஓ.பி.எஸ். தரப்பு.

ops and modi

இதை இப்படியே விட்டுவிடக்கூடாது எனும் முடிவுக்கு வந்திருக்கும் எடப்பாடி வரும் டிசம்பர் மாதத்திற்குள் வர இருக்கும் கழக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் தேர்வையும் நடத்திட முடிவெடுத்துள்ளார். அதாவது ஒரு மனதாக தன்னை பொதுச்செயலாளராக கட்சியினர் தேர்ந்தெடுக்கும் சூழலை உருவாக்கிட திட்டமிட்டுள்ளார். இந்த விஷயத்தில் முதல்வருக்கு தோள்கொடுக்க வழக்கம்போல் வேலுமணி, தங்கமணி என இரு அமைச்சர்களும் களமிறங்கியுள்ளனர்.

edappadi

வேலூர் தேர்தலுக்காக அங்கே முகாமிட்டிருந்த நாட்களை இதற்காக தெளிவாக பயன்படுத்தி இருக்கின்றனர். வேலூர் தொகுதி பிரசாரத்திற்காக அங்கே வந்து குவிந்த அனைத்து மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளையும், முக்கிய நபர்களையும் அழைத்து ‘புரட்சித்தலைவர் எனும் ஒரே தலைவர்தான் இந்த இயக்கத்தை துவக்கினார். அம்மா எனும் ஒரு தலைவர்தான் இந்த இயக்கத்தை மேம்படுத்தினார். அதே போல் ஒரே தலைமை இருந்தால்தான் நம் கட்சி வெல்லும், வெல்ல முடியும்.

எனவே அண்ணன் எடப்பாடியாரை நம் இயக்கத்தின் பொது செயலாளராக்குவோம். இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.’ என்று கன்வின்ஸ் செய்து, ஒப்புதலும் கேட்டிருக்கின்றனர். பன்னீருக்கு மிக நெருக்கமான வெகு சிலரை மட்டும் விட்டுட்டு மீதி அனைவரையுமே எடப்பாடியாருக்காக கேன்வாஸ் செய்துள்ளனர். ஏ.சி.சண்முகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த இடத்தில் இவர்கள் இப்படி எடப்பாடிக்கு பிரசாரம் செய்யும் விஷயம், பன்னீரின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. 

ops and amit shah

என்ன பேசுகிறார்கள்? என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர் பதறிவிட்டாராம். உடனடியாக இதை அமித்ஷாவின் கவனத்துக்கும் கொண்டு போனாராம். அதற்கு அவர் ‘இந்த விஷயம் பன்னீருக்கு முன்னாடியே எனக்கு வந்துவிட்டது.’ என்று அ.தி.மு.க. தூதுவர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆக அ.தி.மு.க.வில் உள் பூகம்பம் துவங்க தயாராகிவிட்டது என்பது புலனாகிறது.

gowtham Sat, 08/10/2019 - 16:00
ops Edapaddi Palanisamy bjp  ஓ.பி.எஸ், எடப்பாடி அரசியல்

English Title

edappadi makes o.p.s scared

News Order

0

Ticker

0 திமுகவுக்கு போயிருந்தால் அம்போ தான்... அன்புமணிக்கு அடித்த அதிர்ஷ்டம்... எடப்பாடி மூலம் பா.ஜ.க., கொடுத்த ஜாக்பாட்..!

ஒருபக்கம் ராஜ்ய சபா எம்.பி. இன்னொரு பக்கம் மருத்துவ கல்லூரி அனுமதி வழங்கியது தொடர்பாக வழக்கு ரத்து என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் அன்புமணி. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக படுதோல்வி அடைந்தது. இதனால் தேர்தலுக்கு முன்னர் செய்து கொண்ட உடன்பாட்டின்படி அன்புமணிக்கு அதிமுக ராஜ்யசபா எம்பி பதவியை கொடுக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது.

anbumani

இந்த விவகாரம் குறித்து பாமக தரப்பு அதிமுகவிடம் எதுவும் கேட்கவில்லை. அதிமுகவும் அமைதியாகவே இருந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் ஒப்பந்தப்படி பாமகவுக்கு எம்பி பதவி வழங்கப்படும் என்று அறிவித்த அதிமுக தற்போது அன்புமணியை எம்பியாகவும் ஆக்கிவிட்டது.

இப்படி தேர்தலில் தோற்ற நிலையிலும் இன்ப அதிர்ச்சியாக அதிமுக சொன்னபடியே நடந்து கொண்டதால் அன்புமணி எம்.பி.,யாகி விட்டார். இது ஒரு புறம் இருக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அன்புமணிக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. எதற்கெடுத்தாலும் நியாயம் பேசும் பாமகவிற்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது அன்புமணி மீதான ஊழல் வழக்கு தான். அதாவது அவர் 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது ஏற்பட்ட சிக்கல் தான் அது.

anbumani

அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அன்புமணி அனுமதி கொடுத்து கோடி கோடியாக லஞ்சம் வாங்கிவிட்டார் என்பதே அந்த வழக்கின் சாராம்சம். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த விவகாரத்தில் அன்புமணி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2015ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரி ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அன்புமணி மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தான் ஒரு உத்தரவு வந்துள்ளது. அதன்படி 2015ம் ஆண்டு அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

anbumani and modi

இதன் மூலம் அன்புமணி மீண்டும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். அதே சமயம் புதிதாக குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது அன்புமணி பாஜக கூட்டணியில் உள்ளார். மத்தியில் ஆள்வது பாஜக தான். எனவே சிபிஐ புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்யுமா? அல்லது இந்த வழக்கை கிடப்பில் போட்டுவிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அப்படியே குற்றச்சாட்டை பதிவு செய்தாலும் அது அந்த அளவிற்கு அன்புமணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இதனால் இனி ஊழல் வழக்கை கூறி தன்னை விமர்சனம் செய்ய முடியாது என்று அன்புமணி குதூகலத்தில் உள்ளார்.

gowtham Fri, 08/02/2019 - 18:09
Anbumani Ramadoss pmk bjp அன்புமணி அரசியல்

English Title

when i gone to DMK ... good luck to anbumani ... BJP by Edappadi, gave the jackpot ..!

News Order

0

Ticker

0 4 ஆவது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா! நினைத்ததை சாதித்த பாஜக... 

குமாரசாமி பதவி விலகியதையடுத்து நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பாபதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், எடியூரப்பாவுக்கு ஆதரவாக  105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனால்  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியதால் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.இதனால் கர்நாடகாவில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி முடிவுக்கு வந்தது. 

yedi

இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக எடியூரப்பா,  நான்காவது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

aishwarya Fri, 07/26/2019 - 18:45
karnataka Yediyurappa bjp Yediyurappa அரசியல்

English Title

BS Yeddyurappa Set To Be Chief Minister For Fourth Time

News Order

0

Ticker

1 கர்நாடகாவை போல் புதுச்சேரிக்கு  பாஜக நெருக்கடி கொடுத்தால் சமாளிப்போம் - கொந்தளித்த புதுவை முதல்வார் narayana samy

‘இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நெக்ஸ்ட் எனப்படும் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்’ என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தவிர, அந்த நெக்ஸ்ட் தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது’ என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

narayana samy

முன்னதாக இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, இந்த நெக்ஸ்ட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், பாராளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் குரல் எழுப்பும் என்றும் கூறினார்.  இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்படும் என்றும், நாளை மறுதினம் சட்டப்பேரவையில் இது தொடர்பான பிரச்சினை எழுப்பப்படும் என்றார். மேலும் கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடத்தி ஆட்சியை கவிழ்க்க பண பலம் மற்றும் அதிகார பலத்தை பாஜக பயன்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் கர்நாடகாவை போல் புதுச்சேரியிலும் பாஜக செயல்பட்டால் எந்த சூழ்நிலையையும் அதனை சமாளிப்போம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்

gowtham Sat, 07/20/2019 - 13:47
naryanasamy bjp நாராயணசாமி இந்தியா

English Title

Like Karnataka, we will deal with BJP's crisis in Puducherry.

News Order

0

Ticker

0 ஆட்டத்துக்கு ஆப்பு வைத்த அமித் ஷா... சந்தோஷால் சந்தோஷம் இழந்த தமிழக பாஜக தலைவர்கள்..!

பாஜக தேசிய அமைப்பு பிரிவு பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளது தமிழக பாஜக தலைவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. BJP

பொதுச்செயலாளர் பதவியில் இருந்த ராம்லால் ஆர்.எஸ்.எஸ். பணிக்கு திரும்பி விட்டதால் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் பி.எல்.சந்தோஷ்.  கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் 13ஆண்டுகளாக  ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பணியாற்றியவர்.  தேர்தல் வியூகங்களை வகுப்பதில் நிபுணத்துவம் மிக்கவர் கர்நாடகாவில் எட்டு ஆண்டுகளாக பாஜக பொதுச்செயலாளராக இருந்தவர். santhosh

2014ஆம் ஆண்டு தென்மாநிலங்களுக்கான கட்சி பொறுப்பாளராக செயல்பட்டார். பின்னர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு திரும்பி விட்டார். இப்போது  பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸிலிருந்து கட்சி பணிக்கு திரும்பி இருய்க்கிறார்.  பி.எல். சந்தோஷ் கட்சிக் கட்டுப்பாடு, கொள்கை, கோட்பாடுகளில் ரொம்பவே, 'ஸ்ட்ரிக்ட்'டானவர். santhosh

தென் மாநில பொறுப்பாளராக இருந்தபோது  இவருக்கும், தமிழக பா.ஜ.க தலைவர்கள் சிலருக்கும் ஒத்துப்போனதே இல்லை.  இப்போது அகில இந்திய அளவில் கட்சியின் அதிகாரம் மிக்க பதவிக்கு நியமிக்கப்பட்டு இருப்பதால் தமிழக பாஜக தலைவர்கள் கலக்கத்தில் தவித்து வருகிறார்கள். 
 

Thijai Wed, 07/17/2019 - 20:18
B L Santhosh bjp tamilisai soundararajan H Raja ஹெச்.ராஜா - தமிழிசை அரசியல் தமிழகம்

English Title

BJP leaders in troubled state

News Order

0

Ticker

1 
சுப்ரமணியன் சுவாமி

’நானும் மதுரக்காரன்தான்டா...’ ஆதாரங்களை நிரூபிக்கக் கிளம்பிய சுப்ரமணியன் சுவாமி..!

நானும் மதுரைக்காரன் தாண்டா என்பதை நிரூபிக்கும் வகையில் பிறந்த நாள் விழா மதுரையில் நடத்தப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.


அன்புமணி

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி... ’குதிரை பேரத்தை’ மறைக்கும் ராமதாஸ்..!

மத்தியில் எப்படியாவது மகனை அமைச்சராக்கி விட வேண்டும் என இலைமறைகாயாக அறிக்கைவிட்டு சமாளித்து வருகிறார் என்று அவரது கட்சி தொண்டர்களே பேசிக் கொள்கின்றனர்.


எஸ்.பி.வேலுமணி

பிஜேபியில் இணைய தூது விட்ட எஸ்.பி.வேலுமணி... ஆடி அதிர்ந்த எடப்பாடி..!

டெல்லிக்கு அனுப்பி வைத்து தனது பிரச்னைகளை எஸ்.பி.வேலுமணி மூலமே விடிவு தேடுவார் எடப்பாடி அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி மீது சிறிய சந்தேகம்.


மோடி

தயங்கும் எடப்பாடி... தாவும் ஓ.பி.எஸ்... பாஜகவால் தறிகெட்டுப்போன தமிழக அரசியல்..!

பாஜகவுக்கு எதிரான எந்த கூட்டத்திலும் பங்கேற்க கூடாது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பது தெளிவாக தெரிகிறது.ராகுல் காந்தி

மோடிக்கு எதிராக பேசினால் வழக்குகள் பாயும்- ராகுல்காந்தி

ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேசினால் வழக்குகள் பாய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


தமிழிசை சவுந்தரராஜன்

’இனி போண்டா, சமோசாவுக்கு எங்க போவீங்க பாஸு?’...டி.வி. விவாதங்களில் பங்கேற்க பாஜகவினருக்கு 144...

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தபோதும் அதிமுக சார்பில் ஊடகத்தில் கருத்து சொல்ல அக்கட்சி தலைமை தடை விதித்தது.


MLA

நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்.பி- வைரலாகும் வீடியோ

பாஜக கட்சியின் எம்.பியும் மடாதிபதியுமான பாலக்நாத், பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழது காற்றில் சுழன்றுக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறத...


சந்திரபாபு நாயுடு

போற போக்கை பார்த்தா கட்சியில நீங்களாவது இருப்பீங்களா? தனி மரமான சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் லங்கா தினகர் அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தார். முன்னணி தலைவர்கள் கட்சியை விட்டு ஓட்டம் பிடிப்பதால் சந்திரபா...


2018 TopTamilNews. All rights reserved.