• November
    18
    Monday

Main Area

Main



பீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு 109 குழந்தைகள் பலியான விவகாரத்தில் முதல் மந்திரி மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

பீகார்
பீகார்

பீகார் மாநிலம் முசாபர்பூ நகரில் மூளை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஜனவரி மாதத்தில் பரவ ஆரம்பித்த மூளைக்காய்ச்சல் நோய் இதுவரையில் 104 பேரை பலிவாங்கிய நிலையில், முசாபர்பூர் நகரில் 109 குழந்தைகள் மூளை காய்ச்சல் நோய்க்கு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரிதும் அதிச்சியைக் கிளப்பியுள்ளது. இதனை அடுத்து பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

bihar

வழக்கு வருகிற 26ந்தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பீகாரை தொடர்ந்து கோவையிலும் மூளை காய்ச்சல் நோய் பரவுகிறதா என்று கோவை மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்துள்ளார். கோவை சரவணம்பட்டி அருகே, விநாயகபுரத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள் ரம்யா. தீவிர காய்ச்சலில் கடந்த சில நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். பரிசோதனையில் மருந்துவர்கள், ரம்யாவுக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்திருந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த ரம்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவையில் இளம் பெண் மூளை காய்ச்சலில் பலியான சம்பவத்தால் பீகாரைத் தொடர்ந்து கோவையிலும் மூளை காய்ச்சல் பரவி வருவதாக பொது மக்கள் பீதி அடைந்துள்ளதுடன், சுகாதாரதுறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.