• August
    21
    Wednesday

Main Area

Main



சிங்கப் பெண்ணே பாடலை தொடர்ந்து மீண்டும் லீக்கான பிகில் பாடல்: அதிர்ச்சியில் படக்குழு 

விஜய்
விஜய்
Loading...

சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் பீகில் படத்தின் அடுத்த பாடல் லீக்காகியுள்ளது. 

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய்  அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா என்று இன்னும் ஏராளமானோர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் பாடிய சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் லீக்காகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது. தற்போது மீண்டும் தளபதி விஜய் பாடியே வெறித்தனம் பாடல் லீக்காகியுள்ளது. 

இது படக்குழு மத்தியில் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும், இந்த வேலைகள் யார் செய்கிறார்கள் என்றும் தெரியாமல் படக்குழு குழம்பி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.