• August
    21
    Wednesday

Main Area

Main



டிஆர்பி-யை ஏற்றிய வனிதா: உண்மையில் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் இதுதானாம்!?

 வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
Loading...

சென்னை:  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 2வது போட்டியாளராக வனிதா விஜயகுமார்  வெளியேற்றப்பட்டார்.

vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களைக்  கடந்துள்ளது. சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாத  பிக் பாஸ் வீடு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியிலிருந்து யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வனிதா வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். வனிதா இருந்ததால்  தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும்  சின்ன சின்ன சண்டை கூட பெரிதாக  வெடித்துள்ளது. அதனால் போட்டி சுவாரஸ்யமாக இருக்க  கண்டிப்பாக வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பார், அதனால் மோகன் வைத்யா அல்லது மீரா மிதுன் வெளியேறுவார் என்று  பேசப்பட்டது. 

vanitha

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். வனிதா 
 வெளியேற்றப்பட்டதற்கான காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த தருணங்களை மக்கள் எளிதில் யூகித்து விடுகிறார்கள் என்பது தான். உண்மையில் வாக்குகளின் அடிப்படையில் எலிமினேஷன் நடக்கிறது என்றால் அது இந்த முறை தான் சரியாக நடந்துள்ளது. வனிதா, மக்களின் வாக்குகளில் பின் தங்கியதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதனால் தான் கமல் ஹாசன் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காதது நடக்கும் என்று அழுத்தமாகச் சொன்னார். வனிதா வெளியேற்றப்பட்டது ஹவுஸ்மேட்ஸ் சிலருக்கு  அதிர்ச்சியாக இருந்தாலும் பலருக்கு  மகிழ்ச்சியைத் தான் தந்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.