• August
    26
    Monday

Main Area

Main



பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்: அப்போ ஒரே அழுகாச்சியா இருக்குமே பிக் பாஸ்!

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
Loading...

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

kamal

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பாத்திமா பாபு,  வனிதா ஆகியோர் வெளியேறிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு அமிராமி, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், சேரன் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

bb

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மோகன் வைத்யா வெளியேறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில்  மீரா அளவிற்கு மோகன் வைத்யாவும் ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்து வைத்துள்ளார். காரணம் நிலையான மனநிலையில் இல்லாமல் நேரத்திற்கு ஏற்றாற்போல நடிப்பதாக  ரசிகர்கள்  கூறி வருகின்றனர். ஆனால்  அவரை விட மீராவின் ஆட்டம் தான் அதிகமாகிக் கொண்டே போகிறது.

mohan vaidhya

ஏற்கனவே வனிதாவை அனுப்பியதால் ஓரளவு பிக் பாஸ் வீட்டில் சண்டை சத்தம் குறைந்து போனதால் மீராவையும்  வெளியில் அனுப்பி விட்டால் நிகழ்ச்சி உப்பு சப்பு இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த வாரம் மோகன் வைத்யாவை வெளியே அனுப்புகிறதாம் பிக் பாஸ் டீம். இருப்பினும் நிகழ்ச்சியின் முடிவில் தான் எலிமினேஷனில் சிக்கி கொண்டவர் யார் என்பது தெரியவரும். 

2018 TopTamilNews. All rights reserved.