சாண்டியின் மகள் லாலாவுடன் விளையாடிய கவின் : வைரல் வீடியோ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    19
    Wednesday

Main Area

Mainசாண்டியின் மகள் லாலாவுடன் விளையாடிய கவின் : வைரல் வீடியோ!

சாண்டி- கவின்
சாண்டி- கவின்

சாண்டியின்  மகள் லாலாவுடன் கவின் சைக்கிள் ஓட்டி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. 

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நான்கு  போட்டியாளர்கள் தொட்டநிலையில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்கு போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக சாண்டி.

sandy

இயல்பு மாறாமல் அதே சமயம் தன்னை சேர்ந்தவர்களை விட்டுக்கொடுக்காமலிருந்து வந்த ஒருநபர் என்றால் அது சாண்டி தான். குறிப்பாக கவின் -சாண்டி  நட்பு பலரையும் வியக்கவைத்தது. கவின் -சாண்டி நட்பைப் பார்த்து பொறாமைப்படுவதாக சகபோட்டியாளரான அபிராமி தெரிவித்தார். 

 

kavin

ஆனால்  ஒருக்கட்டத்தில் லாஸ்லியாவுடன் காதலில் விழுந்த கவின், லாஸ்லியாவுக்காக கடைசி சில வாரங்களாக சாண்டியுடன் மோதலில் ஈடுபட்டார். ஆனால்  அதையும் பொருட்படுத்தாமல் சாண்டி  மறுபடியும் கவினை  தேடி சென்று ஆறுதல் அளித்தது கமல் ஹாசன் குறிப்பிட்டுப் பாராட்டும் அளவிற்கு இருந்தது எனலாம். இறுதி போட்டியில் கூட கவினை மேடைக்கு அழைத்து தனது விருதை கவினுக்கு மாலையாக அணிவித்து தனது நட்பை மீண்டும் நிரூபித்தார்.இது வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.

 

இந்நிலையில் சாண்டியின் வீட்டுக்கு சென்றுள்ள கவின் சாண்டியின் மகள் லாலாவுடன்  சைக்கிள் ஓட்டி விளையாடுகிறார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.
 

2018 TopTamilNews. All rights reserved.