• August
    26
    Monday

Main Area

Main



'அந்தம்மாவ சிம்பு லவ் பண்ணிருக்காங்க, ஜீவா லவ் பண்ணிருக்காங்க' : மீரா மிதுனை பங்கமாக கலாய்த்த தர்ஷன் காதலி!

சனம் ஷெட்டி - மீரா- தர்ஷன்
சனம் ஷெட்டி - மீரா- தர்ஷன்
Loading...

பிக் பாஸ்  போட்டியாளர் மீரா மிதுன் குறித்து  தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கிண்டல் செய்துள்ளார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த மாடலும், ஹீரோவுமான தர்ஷனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. காரணம்  தர்ஷன்நேர்மையாக இருக்கிறார். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம்போட்ட வனிதாவை ஒருநிமிடத்தில் ஆட்டம் காண வைத்ததும் தர்ஷன் தான்.

meera

தர்ஷனுக்கு பிக் பாஸ் வீட்டின் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன் லவ் புரோபோசல் வைக்க அதை மறுத்துவிட்டார். காரணம் அவர் மாடல் அழகி பட்டம் வென்ற சனம் ஷெட்டி காதலித்து வருவதுதான். இதை சனம்  ஷெட்டியே உறுதிப்படுத்தியுள்ளார்.

sanam

இந்நிலையில் சனம் ஷெட்டி சமீபத்தில் இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், மீரா மிதுன்  குறித்து பேசியுள்ள அவர் , மீரா  மிதுன் பெரிய ஆளுங்க. அவங்கள சிம்பு லவ் பண்ணாத என்கிட்டயே சொல்லிருக்காங்க. அப்புறம் அவங்கள ஜீவா கூட லவ் பண்ணிருக்காரு. ஆனால்  இவங்க தான் அவங்க லவ்வ ஏத்துக்கலையாம். மீரா மிதுன் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடிக்கமா இருக்காங்க. ஏன்னா அவங்க கேரக்டரே அப்படிதான்' என்று பங்கமாக கலாய்த்துள்ளார். 

 

மேலும் சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர்  #Getout Meera என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.