• August
    25
    Sunday

Main Area

Main



கமலை சர்ச்சையிலிருந்து காப்பாற்ற விஜய் டிவி.வெளியிட்ட பிக்பாஸ் புரோமோ வீடியோ...

பிக் பாஸ் 3
பிக் பாஸ் 3
Loading...

சென்னை: ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 3வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருப்பதாகத் சம்பத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. 

bigg boss

அதுமட்டுமின்றி  இவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் புரொமோக்கான ஷூட்டிங் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். 

இந்நிலையில்,பிக் பாஸ் ரசிகர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் புரொமோ வீடியோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் வசிக்கப்போகும் போட்டியாளர்கள் யார்? நிகழ்ச்சி எப்போது முதல் ஒளிபரப்பாகும் என்பது பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கமல் ஹாசன் அரவக்குறிச்சி பரப்புரையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓரு இந்து என்று பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர். 

இந்தநிலையில் அதை திசை திருப்பவே தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.