• February
    25
    Tuesday

Main Area

Mainபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா

பீட்ரூட்
பீட்ரூட்

‘வரும் முன் காப்போம்’ என்கிற வாக்கியத்தை சின்ன வயதில் படிச்சதோட சரி... அதுக்கப்புறமா நாம அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது நம் பிள்ளைகளிடம் அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடு என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறோம். நமது பழக்கங்களைப் பார்த்து தான் நம் பிள்ளைகள் வளர்கிறார்கள் என்கிற அடிப்படையை வயதானாலும் நாம் உணர்வதே கிடையாது.


ரத்தச் சிவப்பில் காட்சியளிக்கும் பீட்ரூட் காய்களில் இருக்கிறது ரத்த சோகையை துரத்தியடிக்கும் சக்தி.  பீட்ரூட் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், நமது உடலில் புதிதாய் ரத்த அணுக்கள் உருவாகிறது. இன்று கல்லூரி செல்லும் பெரும்பாலான மாணவிகளைப் பார்த்தால், பாதிக்கும் மேற்பட்டோர் ஹீமோகுளோபின் குறைவால் அவதிப்படுபவர்களாகவே இருப்பார்கள்.

பீட்ரூட்

பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு சாப்பிட்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். ஆனால், நாம் முக அழகிற்கும், உதடுகளின் நிறத்தைக் கூட்டுவதற்கும் தான் பீட்ரூட் பயன்படுத்துகிறோம். 


உடல் நலனைக் காக்கிறேன் பேர்வழி என்று கண்ட கண்ட கடைகளில் நின்று, ‘ப்ரெஷ் ஜூஸ்’ என்று பந்தா செய்யும் நாம், அந்த பழத்தை அவர்கள் எப்போது வெட்டி வைத்தார்கள் என்றெல்லாம் யோசிப்பதே கிடையாது. உடல்நலத்திற்கு ஆப்பிளும், மாதுளையும் தான் சாப்பிட வேண்டும் என்று தவறான தகவல்களாக நமது மூளையில் பதிந்து விட்டது. கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளின் ஜூஸ் குடித்தாலும், பாதியளவு வேகவைத்து சூப் குடித்தாலும், உடலுக்கு நல்லது தானே?
பீட்ரூட்டில் எத்தனை சக்திகள் இருக்கிறது என்று படித்துப் பாருங்கள். அதுக்கப்புறமாக பீட்ரூட்டை விடவே மாட்டீர்கள்.

பீட்ரூட்டில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் சிறந்த டானிக். நம்மில் பலருக்கும் பித்த உடல் வாகு இருக்கும். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.


பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

பீட்ரூட்


தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.


பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும். தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். 


பலரும் பீட்ரூட் சமைக்கும் போதோ, ஜூஸ் போடும் போதோ அதன் தோல்களை நீக்கி விடுகிறார்கள். அது தவறு. பீட்ரூட்டின் தோலில் பீட்டா லெயின் எனும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் உள்ளதால் பீட்ரூட்டின் தோல் நீக்காமல், சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிடலாம். அப்போது தான் அதன் முழு சத்துக்களும் கிடைக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.