• October
    15
    Tuesday

Main Area

Main



அஜித் ரசிகர்களுக்கு நாளை காலை காத்திருக்கும் விருந்து!

Nerkonda Parvai
Nerkonda Parvai

அஜித் குமார் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடல் நாளை காலை 7.45 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான பிங்க் என்ற படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். வழக்கறிஞராக களமிறங்கியுள்ள அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார்.

A beautiful melody is coming your way! #VaanilIrul, 1st song from #NerKondaPaarvai will be out tomorrow at 7.45 AM @ZeeStudiosInt #AjithKumar #HVinoth @BoneyKapoor #BayViewProjects @SureshChandraa @ShraddhaSrinath @thisisysr @nirav_dop @dhilipaction @RangarajPandeyR @ProRekha pic.twitter.com/xu6VY5RaWx

— Nerkonda Paarvai (@nerkondapaarvai) June 26, 2019

ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் வானில் இருள் என்ற முதல் பாடல் லிரிக்கல் வீடியோ நாளை காலை 7.45 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.