• February
    24
    Monday

Main Area

Main



திருச்சி வங்கி கொள்ளை: நகை, பணத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என அறிவிப்பு

punjab national bank
punjab national bank

திருச்சி: சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்புற சுவரை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 5 லாக்கர்களை உடைத்து அதிலிருந்த பல கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். 50 சவரன் நகை மற்றும் ரூ.10 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் கொள்ளை போன தங்கநகைகள், விலைமதிப்பு மிக்க பொருட்களுக்கு ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி வங்கி பொறுப்பேற்காது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.