kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


53 ஆண்டுகால பணியிலிருந்து விடைபெறுகிறார் இந்தியாவின் #1 கொடைவள்ளல்!

Azim Premji
Azim Premji
Loading...

விப்ரோ நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஆசிம் பிரேம்ஜி வருகிற ஜூலை 31ஆம் தேதி முதல் ஓய்வு பெறுகிறார். கடந்த 53 ஆண்டுகளாக மென்பொருள்துறையில் விப்ரோவின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும் ஆசிம் பிரேம்ஜியின் பங்கு உண்டு. ஆசிம் வகித்த பொறுப்புக்கு அவர் மகன் ரிஷத் வருவார் என்றும், விப்ரோ லிமிட்டட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டுவரும் அபிதாலி நீமுச்வாலா, இனிமேல் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்க இருக்கிறார்.

Azim Premji

ஒரு லட்சத்து 45,000 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடையாகவும், தொண்டு பணிகளுக்காகவும் செலவிட உறுதிகொண்டுள்ள 73 வயது ஆசிம் பிரேம்ஜி, உலகின் 5 பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலேயே நம்பர் 1 நன்கொடையாளர் ஆசிம் பிரேம்ஜிதான். பெரும்பாலான தொண்டுப்பணிகள் கல்வி சார்ந்தே இருக்கும்படி பார்த்துக்கொள்வது ஆசிம் பிரெம்ஜியின் விருப்பம். தன் வாழ்நாளில் ஒரு மிகப்பெரிய மென்பொருள் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய ஆசிம், தன் வாழ்நாளின் இறுதி நாளில் சொகுசான ஈசிசேர் ஒன்றை அமேசானில் ஆர்டர் செய்து பேப்பர் படித்து வாழ்க்கையை ஓட்டலாம். ஆனால், விப்ரோ லிமிட்டட் நிறுவனத்திலிருந்து விடைபெற்றாலும், இனிமேல் முழுநேரமாக தொண்டுப்பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆசிம் பிரேம்ஜி மாதிரியான நல்லவர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னமும் மழை பெய்கிறது!

2018 TopTamilNews. All rights reserved.