• October
    15
    Tuesday

Main Area

Main



இங்கிலீஷ் பேசத் தெரியாத அழகிரியை பாராளுமன்றம் அனுப்பிய திமுக இப்படி பேசலாமா?!

துரைமுருகன்
துரைமுருகன்

பாராளுமன்றம் போக இங்கிலீஷ் அல்லது ஹிந்தி தெரிய வேண்டும், என் மகன் அளவுக்கு யாராலும் இங்கிலீஷ் பேச முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியது விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

kathir

தமிழக மக்களை தன் பேச்சால் கட்டிப்போட்ட ஆளுமைகளை உடைய கட்சி திமுக. அண்ணா, கருணாநிதி என திமுகவில் உள்ள ஆளுமைகள் பலரும் தங்கள் தமிழின்  மூலம் மக்களை கவர்ந்தவர்கள். இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மகனின் (கதிர் ஆனந்த்) அரசியல் வருகை குறித்து பேசும்போது,  என் மகன் போல யாராலும் இங்கிலீஷ் பேச முடியாது என சுட்டிக்காட்டினார். அதாவது பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றால் ஆங்கிலம் அல்லது ஹிந்தி தெரிய வேண்டும், இல்லையென்றால் பாராளுமன்றம் செல்வதே வீண் என பேசினார்.

azhagiri

இங்கிலீஷ் தெரியாத அழகிரியை பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தது இதே திமுகதான். பிற கட்சிகளிலும் இங்கிலீஷ் பேசத் தெரியாதவர்கள் இருக்கதான் செய்கிறார்கள். ஆனால், இங்கிலீஷ் பேசுவதை எல்லாம் பெரிய தகுதியாக துரைமுருகன் சுட்டிக்காட்டி பேசியிருக்க தேவையில்லை என பொது வெளியில் விமர்சிக்கப்படுகிறது. அழகிரியை குத்திக்காட்டி பேச நினைத்திருந்தால், அதை துரைமுருகன் நேரடியாகவே பேசியிருக்கலாம். அவர் இப்படி பொத்தாம் பொதுவாக பேசி விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

2018 TopTamilNews. All rights reserved.