• October
    14
    Monday

Main Area

Main



உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும்; கம்பீர் புதிய கணிப்பு !!

கம்பீர்
கம்பீர்

உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணியே வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்துள்ளார். 
கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது.

gambhir


இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் இந்த தொடருக்காக ஒட்டுமொத்த அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர், அடுத்த ஓரிரு தினங்களில் இந்தியா உள்பட அனைத்து அணிகளும் இங்கிலாந்திற்கு புறப்பட உள்ளனர்.
இந்நிலையில், இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். 
இது குறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறேன். பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி அசுர பலத்துடன் உள்ளது. ஆஸ்திரேலிய அணிகு அடுத்தபடியாக இங்கிலாந்து அல்லது இந்திய அணிகளுக்கு வாய்ப்பு உள்ளன” என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.