• August
    26
    Monday

Main Area

Main



கயிற்றை கட்டி ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை இழுத்துச்சென்ற கொள்ளையர்கள்… புனேயில் அதிர்ச்சி சம்பவம்...

ஏடிஎம் கொள்ளை
ஏடிஎம் கொள்ளை
Loading...

ஓடும் ரயிலின் மேற்கூரையில் துளைப் போட்டு கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி, இன்னமும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறார்கள்.அதே போல், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முடியாத கொள்ளையர்கள், அவர்கள் வந்த காரில், கயிற்றைக் கட்டி ஏடிஎம் எந்திரத்தை அப்படியே பெயர்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

atm

மராட்டிய மாநிலம் புனே நகரில் யவாத் பகுதியில் இருக்கும் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஒரு ஏடிஎம் மையத்தில் இந்த கைவரிசையை கொள்ளையர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த ஏடிஎம் மையத்திற்கு நேற்று நள்ளிரவு 1.45 மணிக்கு வந்த மர்ம நபர்கள், அந்த மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை முதலில் கருப்பு நிற ஸ்ப்ரே அடித்து மறைத்து விட்டனர். பின்னர்  ஏடிம் இயந்திரத்தை உடைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள்.
அவர்களின் முயற்சி தோல்வியில் முடிய, தாங்கள் கொண்டு வந்த கயிற்றின் ஒரு முனையில் ஏடிஎம் இயந்திரத்தை கட்டி, மறுமுனையை தாங்கள் வந்த காரில் கட்டி இழுத்துள்ளனர். இம்முறையில் ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே பெயர்த்து இழுத்து சென்றுள்ளனர்.  

atm

இந்நிலையில் கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களால் இழுத்துச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.30 லட்சம் வரையில் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.