• November
    21
    Thursday

Main Area

Main



7ஆம் அறிவு பட வில்லன் டாங்லீயிடம் பயிற்சி எடுக்கும் முன்னணி தமிழ் நடிகர்!

ஜானி ட்ரி நியூயன்
ஜானி ட்ரி நியூயன்

சென்னை: நடிகர் அருண் விஜய் பாஸ்கர் திரைப்படத்திற்காக சூர்யா வில்லனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில்  வெளியான தடம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது பாக்ஸர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் விவேக் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரித்திகா சிங் நடித்து வருகிறார். 

arun vijay

இந்த நிலையில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் Johnny Tri-Nguyen உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குருவுடன் என்கிற வார்த்தையை அதில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக ஜானி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக நடத்துத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அருண் விஜய் தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து அக்னி சிறகுகள் எனும் படத்தில் நடித்துவருகிறார்.  

2018 TopTamilNews. All rights reserved.