• February
    29
    Saturday

Main Area

Main



முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்!


புதுடெல்லி:  மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.வின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 66. 

மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.வின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து கடந்த 9ம் தேதியன்று திடீரென உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டதால் அவர் உடனடியாக தீவிர  சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது. இதனால் அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து சென்றனர். 

இந்நிலையில் அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி  இன்று மதியம் 12.07 மணிக்கு  காலமானதாக  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அருண் ஜெட்லியின் இந்த மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.