• August
    21
    Wednesday

Main Area

Main



இந்தியைத் தொடர்ந்து கன்னடாவில் ரீமேக்காகிறது விஜய் தேவரகொண்டாவின் ஹிட் திரைப்படம்!

 விஜய் தேவரகொண்டா- ஷாலினி பாண்டே
விஜய் தேவரகொண்டா- ஷாலினி பாண்டே
Loading...

சென்னை: தமிழ், இந்தியைத் தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக்காகவுள்ளது.

தெலுங்கில் கடந்த 2017ஆம் ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த அர்ஜுன் ரெட்டி படம் மாபெரும் வெற்றி பெற்றது. நான்கு முதல் ஐந்து கோடிக்குள் தயாரான இந்த படத்தின் வசூல் ஐம்பது கோடிக்கும் மேல் வாரிக் குவித்தது. அதைத்தொடர்ந்து இந்த படத்தை தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது.

சமீபத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட கபிர் சிங் என்ற பெயரில் வெளியானது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடித்துள்ள இந்த பாடம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று, 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது வருகிறது. தமிழில் ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகிவரும் இதில் துருவ் விக்ரம், பனித்தா சந்து ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழ், இந்தியைத் தொடர்ந்து இந்த ஹிட் படம் தற்போது கன்னடத்திலும் ரீமேக்காகவுள்ளது.  பிரபல கன்னட இயக்குநரான எஸ்.நாராயணன், கன்னட ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இவர் தமிழில் பிரசாந்த் நடித்த ஜெய் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் மற்றும் நடிகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. 

 

2018 TopTamilNews. All rights reserved.