• November
    21
    Thursday

Main Area

Main



ஐ லவ் ஏஆர் ஆர் எனக்கூறிய ரசிகருக்கு அட்வைஸ் செய்த ரஹ்மான்!

arr
arr

விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி அதில் உள்ள நம்பர் பிளேட்டில் ஐ லவ் ஏ. ஆர். ரஹ்மான் எழுதிய ரசிகருக்கு இசையமைப்பாளர் ரஹ்மான் அறிவுரை கூறியுள்ளார். 

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என்ற புகழுக்கெல்லாம் சொந்தக்காரனாகிய ஏ. ஆர். ரஹ்மான் தற்போது  விஜய் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த 15-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 72-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சென்ட் ஆஃப் தி சாங்’ என்ற ஆங்கில பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஏ. ஆர். ஆர் மீது எல்லை இல்லா அன்பு வைத்துள்ள ரசிகர் ஒருவர், விலையுயர்ந்த கார் ஒன்றை புதிதாக வாங்கி அதிலுள்ள நம்பர் பலகையில்‘1ஐ லவ் ஏஆர்ஆர்’ என்று எழுதியுள்ளார். மேலும் ட்விட்டர் பக்கத்தில், நீண்ட நாட்களாக காரை வாங்கவேண்டும் என்பது எனது கனவு. நான் வாங்கிய காரில் எனக்கு பிடித்தமானவருடைய பெயரை எழுத வேண்டும் என விரும்பினேன். அது இன்று நடந்தது”எனக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எனவே இதற்கு பதிலளித்துள்ள ரஹ்மான், பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என ட்விட்டரில் அறிவுரை கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.