• October
    21
    Monday

Main Area

Main



விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்... முருகதாஸ் அதிரடி!

விஜய்
விஜய்

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருதினங்களுக்கு முன்பே களைகட்டத் தொடங்கியுள்ளது.

வரும் ஜூன் 22ம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை, அவரது ரசிகர்கள் முன்கூட்டியே கொண்டாடத் துவங்கி விட்டார்கள். மதுரை ரசிகர்க, விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மதுரை நகர் முழுவதும் இன்றே போஸ்டர் ஒட்டி, தங்களது தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள்.  

தமிழகம் முழுவதுமுள்ள  விஜய்யின் ரசிகர்கள், விஜய்யின் போஸ்டரை உருவாக்கி இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அப்படி விஜய் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள போஸ்டர் ஒன்றில்  தமிழகத்தின் முக்கிய அடையாளங்களுக்கு இடையில் கம்பீரமாக, மகிழ்ச்சியுடன்  நின்றுக் கொண்டிருக்கும் விஜய்யை அவரது ரசிகர்கள் சூழ்ந்திருப்பது போன்ற காட்சியுடன் 'தரணி ஆள வா தளபதி' என்கிற வாசகம் இடம் பெற்றிருக்கிறது.  இந்த போஸ்டரை இயக்குனர் முருகதாஸ், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 


விஜய், தமிழக அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ஆசை, அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், இயக்குனர் முருகதாஸுக்கும் இருப்பதையே இது காட்டுகிறது. ‘கத்தி’ படத்தில் வேறொரு பரிணாமத்தில் விஜய்யை வெளிப்படுத்திய முருகதாஸ், ‘சர்க்கார்’ படம் மூலமாக ஏறக்குறைய விஜய்யின் அரசியல் எண்ட்ரியை உறுதி செய்திருந்தார். இதன் மூலம், முருகதாஸ் தற்போது இயக்கி வரும் படத்தில், விஜய்யின் அரசியல் எண்ட்ரி வேற லெவலில் இருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.