kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா? யு.எஸ்.பி-க்கு குட் பை!!!

Loading...

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 11-ல் புதுவித சார்ஜர் வசதியை கொண்டு வர இருப்பதாக தொழில்நுட்ப வட்டார தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் முழு விபரத்தை தற்போது காண்போம்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 மாடலை செப்டம்பர் 10-ஆம் தேதி தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் மூன்று மாடல்கள் ஐபோன் தரப்பில் இருந்து வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அதாவது, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியனவாகும்.  

இதற்கு முன்னர் வந்த உச்ச மாடலான ஐபோன் XS மற்றும் ஐபோன் XR ஆகிய மாடல்களில் வழக்கம் போல இருக்கும் யுஎஸ்பி டைப்-ஏ போர்ட் வசதியில் இருந்து புதுவிதமாக யுஎஸ்பி டைப்-சி வசதி கொண்ட சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு மாற்றமும் இல்லை என அறிவித்த கையோடு டைப்-ஏ சார்ஜரையே வழங்கியிருந்தது. 

அடுத்து வரவிருக்கும் ஐபோன் மாடலில் கட்டாயம் டைப்-சி போர்ட் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டைப்-சி போர்ட் இல் புதிதாக லைனிங் கேபிள் வசதியும் கொடுக்கப்படலாம் என்கிற பேச்சுகளும் அடிபடுகின்றன. 

அண்மையில் வெளிவந்த ஐபேட் ப்ரோ மாடல்களில் டைப்-சி சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இது வழக்கமாக இருக்கும் சார்ஜர் போல அல்லாமல் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. 

இதை வசதியை ஐபோன் 11-ல் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றன. மேலும் ஐபோன் 11-ல் டைப்-சி சார்ஜர் வசதி மட்டுமல்லாது, பல மேம்படுத்தப்பட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 

சற்று வித்தியாசமான கேமரா அமைப்பு, மேலும் மூன்று கேமராக்கள், உள்ளே ப்ரோஸ்ஸசரில் அதிநவீன ஏ13 சிப்செட், அத்துடன் டாப்டிக் எஞ்சின் என்கின்ற வசதியும் ஆப்பிள் நிறுவனம் தரவிருக்கிறது. 

இதன் மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிவேகமாக தங்கு தடையின்றி செயல்பாடுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.