• November
    14
    Thursday

Main Area

Main



கோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி!

Anil Ambani
Anil Ambani

இந்தியாவின் கோடீஸ்வரர் அனில் அம்பானி சொத்து மதிப்பு மிகவும் குறைந்ததால் தற்போது கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை அவர் இழந்துள்ளார். 

அனில் அம்பானி கடந்த 2008-ஆம் ஆண்டு உலகில் பெரும் கோடீஸ்வரர்களின் வரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அவரின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி பங்கு மதுப்பும் சரிந்து கடன் தொகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனில் அம்பானி பில்லியனர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்.

4 மாதங்களுக்கு முன்பு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மதிப்பு 8,000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் குழுமத்தின் கடன் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடியாகும். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி உலககோடீஸ்வரர்களின் பட்டியலில் 19-வது இடத்திலும், ஆசியாவில் 2-வது இடத்திலும் இருக்கும் நிலையில் அனில் அம்பானி கோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.