• February
    24
    Monday

Main Area

Main



2020 ஆம் ஆண்டின் மிகப் பெரிய படங்களில் ஒன்று ‘மாஸ்டர்’ - ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜயின் 64-வது படமான இந்தப்  படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம்  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நில்சியில் மாஸ்டர் படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகையும், பிரபல பாடகியுமான ஆண்ட்ரியா, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படத்தை பதிவிட்டு, “2020 ஆம் ஆண்டின் மிகப் பெரிய படங்களில் ஒன்று மாஸ்டர். அற்புதமான திறமையான இயக்குநருடன்  இந்த படத்தில் பணியாற்றுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. வரும் பிப்ரவரியுடன் எனக்கான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைகிறது”எனக் குறிப்பிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.